மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை

இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை[1]மூலம் இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் மாற்றுத்தினாளிகளுக்கு தனிப்பட்ட அடையாள அட்டைகள்[2] அந்தந்த மாநில அரசுகள்/ஒன்றியப் பிரதேசங்களால் அறிவிக்கப்பட்ட தகுதிவாய்ந்த மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படுகிறது[3] மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்களை வழங்குவதே தனித்துவமான அடையாள அட்டையின் நோக்கமாகும்.

சட்டம்

தொகு

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்களை வழங்க 2016 மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை 19 ஏப்ரல் 2017 முதல் வழங்கப்படுகிறது.[4]இந்த சட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை மேம்படுத்துகிறது. மேலும் கல்வி, சமூகம், சட்டம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற பல்வேறு வகைகளில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையின் பயன்கள்

தொகு

இந்த அடையாள மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, அணுகல் மற்றும் மறுவாழ்வுக்கான நிதி உதவிகள், திறன்-வளர்ப்பு திட்டங்கள் மற்றும் உபகரணங்கள் பெற மாநில அரசுகள்/ஒன்றியப் பகுதிகளின் அரசுகள் மூலம் வழங்கப்படுகிறது..

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு