மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள், இந்திய அரசின் 2016 மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டத்தின்[1] கீழ் உடலில் 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்துள்ளது.[2] 40%க்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூபாய் 1,500 வழங்கப்படுகிறது.[3] இந்நலத்திட்ட உதவி பெறுவதற்கு முதலில் மருத்துவச் சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையைப் பெற வேண்டும்.[4] (UNIQUE IDENTITY CARD FOR PERSONS WITH DISABILITIES) பெறுவதற்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், சிறப்பு மருத்துவரிடம் பெற்ற மருத்துவ சான்று, ஜாதி சான்றுடன் http://www.swavlambancard.gov.in என்ற இணையதளத்திலிருந்து பெற வேண்டும்.

சட்டம்

தொகு

2016 மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டைகள் 19 ஏப்ரல் 2017 முதல் வழங்கப்படுகிறது.[5]இந்த சட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை மேம்படுத்துகிறது. மேலும் கல்வி, சமூகம், சட்டம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற பல்வேறு வகைகளில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கிறது.

நிதி ஒதுக்கீடு

தொகு

2023-24ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தில் இந்திய அரசு ரூபாய் 56,415 கோடியை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் 4079 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.[6]

தகுதி உடையவர்கள்

தொகு

உடலில் 40% குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தின் கீழ் தகுதியானவர்கள்.

  1. கண்பார்வை பார்வையின்மை
  2. கண்பார்வை குறைபாடு
  3. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்
  4. காது கேளாமை & வாய் பேசாதவர்
  5. செவித்திறன்குறைபாடு
  6. கை கால் இயக்க குறைபாடு
  7. குள்ளத் தன்மை
  8. அறிவுசார் குறைபாடு (மனவளர்ச்சி குன்றியவர்)
  9. மனநோய் கொண்டவர்கள்
  10. புறஉலக சிந்தனையற்றவர்
  11. மூளை முடக்கு வாத பாதிப்பு
  12. தசை சிதைவு நோய்
  13. நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு
  14. குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு
  15. திசு பண்முகக் கடினமாதல்
  16. பேச்சு மற்றும் மொழித் திறன் குறைபாடு
  17. இரத்த அழிவு சோகை
  18. இரத்த உறையாமை அல்லது இரத்த ஒழுகு குறைபாடு
  19. அதிக இரத்த சோகை
  20. அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர்
  21. நடுக்கு வாதம் & பல்வகை குறைபாடுகள்

தேவைப்படும் ஆவணங்கள்

தொகு
  1. குடும்ப அட்டை
  2. ஆதார் அட்டை
  3. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 3

தேவைப்படும் மருத்துவச் சான்றுகள்

தொகு

கை, கால் குறைபாடு உடையவர்கள் அரசு எலும்பு முறிவு மருத்துவரின் உடல் தகுதிச் சான்றிதழ்

  1. . கண்பார்வையற்றவர் – அரசு கண் மருத்துவர் சான்றிதழ்
  2. காது கேளாதவர் அல்லது வாய் பேசாதவர் –அரசு காது மூக்கு தொண்டை மருத்துவரின் சான்றிதழ்
  3. .மனவளர்ச்சி குன்றியவர் – 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எனில் குழந்தைகள் நல மருத்துவரிடம் சான்றிதழ் & 12 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர்கள் எனில் மனநல மருத்துவரிடம் சான்றிதழ்
  4. மனநலம் பாதிக்கப்பட்டவர் – அரசு மனநல மருத்துவரிடம் சான்று.
  5. பல்வகை மாற்றுத் திறனாளிகள் - 3 நபர்கள் கொண்ட மருத்துவ குழுவிடம் சான்று.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவிகள்

தொகு

இந்த உதவிகள் பெற முதலில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை பெற்றிருக்க வேண்டும். 40%க்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூபாய் 1500 ஆகும்.

  1. மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை
  2. மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை
  3. தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை
  4. தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை
  5. சுயவேலைவாய்ப்பு கடன் உதவி: ரூ.75000 வரை கடன் வழங்க வங்கிக்கு பரிந்துரைக்கப்படும் மூன்றில் ஒரு பங்கு (அல்லது) அதிகபட்சம் ரூ.25000 மானியம் வழங்கப்படும் (தகுதி: பார்வையற்றவர்கள், கை கால்கள் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் குறைபாடுடையவர்கள், மூளை முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவாராக இருத்தல் வேண்டும் 18 வயது முதல் 45 வயது வரை உடையவர்களாக இருத்தல் வேண்டும்)
  6. தேசிய ஊனமுற்றோர் நிதி மேம்பாட்டு கழகத்தின் மூலமாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் சுயதொழில் வங்கி கடன் உதவி:தகுதி: வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவாராக இருத்தல் வேண்டும் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.
  7. பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் வங்கி கடன் (PMEGP LOAN)- வழங்கப்படும் உதவி: ரூ.25,000 முதல் ரூ.25,00,000 வரை தேசியமயமாககப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது .
  8. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை:- 1 முதல் 8ம் வகுப்பு வரை ரூபாய் 1,000 - 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.3000 - 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு மற்றும் தொழில் பயிற்சி பள்ளியில் பயில்பவர்களுக்கு ரூபாய் 4,000 - பட்டய படிப்பு, கல்லூரி பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, அறிவியல் & தொழில்நுட்ப கல்வி பயில்பவர்கள் மருத்துவ கல்வி பயில்பவர்களுக்கு ரூபாய்.6,000/- - முதுகலை பட்டப்படிப்பு ரூபாய்.7000/-
  9. மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை - தகுதி: பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்பவராக இருத்தல் வேண்டும் (வீட்டிலிருந்து பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு சென்று வர மட்டுமே)
  10. 9ஆம் வகுப்பிற்கு மேல் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படு உதவித்தொகை:கல்வி கட்டணம், விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம், புத்தகம் வாங்குவதற்கான தொகை, பார்வையற்றவர்களுக்கு வாசிப்பாளர் உதவித் தொகை

9 முதல் 10ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ரூ. 8465/- முதல் ரூ.46,000/- வரை, 11ம் வகுப்பு முதல் பட்டயம் மற்றும் பட்டபடிப்பு படிப்பவர்களுக்கு ரூ.15,000/-முதல் ரூ.1,00,000/- வரை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.2,00,000/- வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

  1. வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை: தகுதி: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவராக இருத்தல் வேண்டும்.வழங்கப்படும் உதவி: தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு வரை மாதம் ரூ.600, 12ம் வகுப்பு- வரை ரூ.750, பட்டப்படிப்பு வரை ரூ.1000
  2. மாவட்டம் முழுவதும் சென்று வர கட்டணமில்லா அரசுப் பேருந்து
  3. தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துக் கட்டணத்தில் 25% செலுத்தினால் போதும்
  4. அரசு பேருந்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியுடன் துணையாக செல்பவர்கள் 25% கட்டணம் செலுத்தினால் போதுமானது.
  5. மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி- தகுதி: முதல் திருமணமாக இருத்தல் வேண்டும்.. 18 வயது முதல் 35 வயதுடைய கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் செவிதிறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள். திருமண உதவித்தொகைக்காக வேறு அரசு துறையில் விண்ணப்பித்திருக்கக்கூடாது.- வழங்கப்படும் உதவி: ரொக்கம் ரூபாய் 12,500 மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் ரூபாய் 12,500 மதிப்பு மற்றும் தாலிக்கு தங்கம் 8 கிராம்
  6. பட்டதாரி மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி - தகுதி: கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் செவிதிறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் - தம்பதியரில் ஒருவர் பட்டயம் /பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.முதல்திருமணமாக இருத்தல் வேணடும். திருமண உதவித்தொகைக்காக வேறு அரசு துறையில் விண்ணப்பித்திருக்கக்கூடாது. 18 வயது முதல் 35 வயது வரை உடையவராக இருத்தல் வேண்டும் - வழங்கப்படும் உதவி: ரொக்கம் ரூபாய் 25,000 மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் ரூபாய் 25,000 மதிப்பு தாலிக்கு தங்கம் 8 கிராம் விண்ணப்பம்
  7. கால் ஊனமுற்றவர்களுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்- தகுதி: 18 வயது முதல் 45 வயது வரை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அல்லது பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும். இரண்டு கால்களும் செயலிழந்து கைகளால் வண்டியை இயக்கக்கூடிய நிலையில் இருத்தல் வேண்டும் வழங்கப்படும் உதவி: விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்.
  8. மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் - தகுதி: கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் செவித்திறன் குறையுடையவர்கள் லேசான மனவளர்ச்சி குன்றியவர்கள், 75 விழுக்காட்டிற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர்களுக்கு -தகுதி 18 வயதுக்கு மேல் 45 வயது வரை.தையல் பயிற்சி முடித்தவர்கள்.
  9. மாற்றுத்திறனரிளிகளுக்கான உதவி உபகரணங்கள்: மூன்று சக்கர வன்டி, சக்கர நாற்காலி, ஆக்டசிலரி மற்றும் எல்போ ஊன்றுகோல், சி.பி. சேர், காலிபர், நவீன செயற்கை கால், ரோலேடார், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுகக்கான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, தசைசதைவு நோயால் பாதிக்கப்பட்வர்களுக்கான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, காதுக்கு பின் அணியும் காதொலி கருவி, தடைகளை அறியும் பார்வையற்றவர்களுக்கான மடக்கு ஊன்றுகோல், பார்வையற்றவர்களுக்கான கருப்பு கண்ணாடி, பிரெய்லி கை கடிகாரம், எழுத்துக்களை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கி (பார்வைகுறையுடைய மாணவர்களுக்கு மட்டும்)
  10. இரயில் பயன சலுகை (நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன்)
  11. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை - தகுதி: மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும்
  12. முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் காதுக்கு பின் அணியும் காதொலி கருவி, நவீன செயற்கை கை & கால்கள்

இதனையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு