மாலபிகா கனன்

மாலபிகா கனன் (Malabika Kanan-27 திசம்பர் 1930-17 பிப்ரவரி 2009) ஓர் இந்திய இந்துஸ்தானி இசை பாரம்பரிய பாடகர் ஆவார்.[1][2]

மாலபிகா கனன்
பிறப்பு(1930-12-27)27 திசம்பர் 1930
இலக்னோ, இந்தியா
இறப்பு17 பெப்ரவரி 2009(2009-02-17) (அகவை 78)
கொல்கத்தா, இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)குரல் பாடகர்

சுயசரிதை

தொகு

மாலபிகா இந்தியாவில் இலக்னோவில் 27 திசம்பர் 1930[1][3] அன்று இசையாசிரியரும், சீடருமான இரவீந்திரலால் ராய்க்கும் விஷ்ணு நாராயண் பட்கண்டேக்கும் மகளாகப் பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும்போதே இசையில் பயிற்சி பெற்றார். துருபாத், தமர் மற்றும் கயல் இசை வடிவங்களில் இவரது தந்தையிடம் பல ஆண்டுகளாகப் பயிற்சி பெற்றார். மேலும் கனன், ரவீந்திரசங்கீதத்தை சாந்திதேவ் கோஷ் மற்றும் சுசித்ரா மித்ராவிடம் கற்றார். நாட்டின் பல இடங்களில் இசைக் கச்சேரி செய்வதற்காக தன் தந்தையுடன் பயணம் செய்தார். இவரது முதல் இசை ரெண்டரிங் ராகாவில் ராம்கலி குறித்து அனைத்திந்திய வானொலியில் 15 வயதாக இருந்தபோது நிகழ்த்தினார். மேடையில் இவரது முதல் நிகழ்வு இதனைத் தொடர்ந்து தான்சென் சங்கீத் சமரோ நிகழ்வில் அமைந்தது.[1]

28 பிப்ரவரி 1958-இல் மற்றொரு பாடகரான ஏ. கனனை மாலபிகா மணந்தார். இவர் கிரண பாணியை ஏற்று புதிய பாடலை உருவாக்கினார். இவர் தனது கணவரிடம் தும்ரி பயிற்சி பெற்றாள். இவர் பஜனைகள் பாடுவதில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார். மாலபிகா பல கச்சேரிகளிலும் பல வானொலி சங்கீத சம்மேளனங்களிலும் கலந்துகொண்டு பாடியுள்ளார். இவரது கணவர் குருவாக இருந்த ஐடிசி சங்கீத ஆராய்ச்சி அகாதமியில், இவர் சூலை 1979-இல் இசை ஆசிரியராகவும் ஆனார். மேலும் அகாதமியின் நிபுணர் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் 17 பிப்ரவரி 2009 அன்று கல்கத்தாவில் இறந்தார்.[1]

விருதுகள்

தொகு

மாலபிகா 1995-இல் ஐடீசி சங்கீத ஆராய்ச்சி அகாதமி விருதையும் 1999-2000-இல் சங்கீத நாடக அகாதமி விருதையும் பெற்றார்.[1][4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Vidushi Malabika Kanan passes away". ITC Sangeet Research Academy. Archived from the original on 1 March 2009. பார்க்கப்பட்ட நாள் 30 January 2016.
  2. The Illustrated Weekly of India. Times of India.
  3. Sruti. P.N. Sundaresan. 2001.
  4. "Sangeet Natak Akademi awards presented". தி இந்து. 13 May 2001. http://www.thehindu.com/2001/05/13/stories/0213000l.htm. பார்த்த நாள்: 30 January 2016. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலபிகா_கனன்&oldid=3920320" இலிருந்து மீள்விக்கப்பட்டது