மாலினி பொன்சேகா

மாலினி பொன்சேகா (Malini Fonseka; 30 ஏப்ரல் 1947 – 24 மே 2025), இலங்கை சிங்கள நடிகையும், நாடகக் கலைஞரும், இயக்குநரும் ஆவார். "இலங்கை சினிமாவின் ராணி" என்று பெரும்பாலும் கருதப்படும் இவர்,[1][2] 1969 ஆம் ஆண்டு தேசிய மாநில நாடக விழாவில் 'சிறந்த நடிகை விருதை' வென்றதன் மூலம் முதன்முதலில் பரவலாக அறியப்பட்டார், அதைத் தொடர்ந்து 1980 இல் ஹிங்கனா கொல்லா, 1982 இல் ஆராதனா, 1983 இல் யசா இசுரு ஆகிய படங்களுக்காக சரசவியா சிறந்த நடிகை விருதுகளை வென்றார்.[3]

மாலினி பொன்சேகா
Malini Fonseka
1976 இல் மாலினி பொன்சேகா
இலங்கை நாடாளுமன்றம்
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
22 ஏப்பிரல் 2010 – 26 சூன் 2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
வன்னி ஆராச்சிகே மாலினி சினேகலதா பொன்சேகா

(1947-04-30)30 ஏப்ரல் 1947
பேலியகொடை, களனி, இலங்கை
இறப்புமே 24, 2025(2025-05-24) (அகவை 78)
கொழும்பு, இலங்கை
துணைவர்(கள்)உபாலி சேனநாயக்க (தி. 1965 ; மணமுறிவு. 1973)
லக்கி டயஸ் (தி. 1986 ; ம.மு. 2011)
பெற்றோர்
  • கில்பர்ட் பொன்சேகா (தந்தை)
  • சீலாவதி பொன்சேகா (தாய்)
பணிநடிகை
விருதுகள்சிறந்த நடிகைக்கான சரசவிய விருது
மிகவும் பிரபலமான நடிகைக்கான சரசவிய விருது
இணையத்தளம்malinifonseka.com

ஏழு தசாப்தங்களாக நடித்து வந்த மூத்த நடிகையான இவர், 1968 இல் திச லியன்சூரியாவின் புஞ்சி பபா திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து பன்னிரண்டு முறை மிகவும் பிரபலமான நடிகைக்கான சிலிம் நீல்சன் மக்கள் விருதையும் வென்றதன் மூலம் சாதனை படைத்துள்ளார்.[4] 2010 ஆம் ஆண்டில், ஆசியாவின் 25 சிறந்த திரைப்பட நடிகர்களில் ஒருவராக சி.என்.என் ஊடகத்தால் பெயரிடப்பட்டார்.[5] 1978 ஆம் ஆண்டு பைலட் பிரேம்நாத் தமிழ்த் திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து கதாநாயகியாக நடித்தார்.

ஏப்ரல் 2010 இல், மாலினி பொன்சேகா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். இவர் இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் அமைச்சர் ஆவார், மகிந்த ராசபக்சவிற்கு இவர் அளித்த வலுவான ஆதரவைப் பாராட்டி இந்தப் பதவி வழங்கப்பட்டது.[6]

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

தொகு

இறப்பு

தொகு

மாலினி பொன்சேகா, கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2025 மே 24 அன்று அதிகாலை தனது 78 ஆவது அகவையில் காலமானார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Fans can never lie". සරසවිය. 2022-09-01. Retrieved 2022-09-08.
  2. Malani leaves for London
  3. "Biography for Malani Fonseka". IMDb. Retrieved 19 June 2008.
  4. "Malini's unique record". Sarasaviya. Retrieved 2021-04-04.
  5. "CNNGo – Asia's 25 greatest actors of all time". Archived from the original on 4 நவம்பர் 2012. Retrieved 7 மார்ச் 2010.
  6. மாலினி பொன்சேகா பரணிடப்பட்டது 2010-10-13 at the வந்தவழி இயந்திரம்
  7. "'Queen of Sri Lankan Cinema', Malini Fonseka passes away". அத தெரண. Retrieved 24 மே 2025.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலினி_பொன்சேகா&oldid=4278717" இலிருந்து மீள்விக்கப்பட்டது