மால்கு
மால்கு என்பவர் விவிலியத்தின் யோவான் நற்செய்தியின்படி யூத தலைமைக் குரு கயபாவின் பணியாளர் ஆவார். இயேசு கிறித்துவை கைது செய்ய தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களோடு இவரும் வந்தார். அப்போது சீமோன் பேதுரு தன்னிடமிருந்த வாளால் இவரைத் தாக்கி இவரது வலக்காதை வெட்டினார். இந்த நிகழ்வு நான்கு நற்செய்திகளிலும் குறிக்கப்பட்டிருப்பினும்[1] யோவான் நற்செய்தியில் மட்டுமே இவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் லூக்கா நற்செய்தியி மட்டுமே இக்காதை இயேசு குணப்படுத்தினார் என்று குறிக்கின்றது. இந்த நிகழ்வே நற்செய்திகளில் இயேசு செய்ததாக குறிக்கப்பட்டுள்ள இருதி புதுமையாகும்.
சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டினார். அப்பணியாளரின் பெயர் மால்கு. இயேசு பேதுருவிடம், 'வாளை உறையில் போடு. தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனோ?' என்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ John 18:10–11; Matthew 26:51; Mark 14:47; மற்றும் Luke 22:51
- "Malchus". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.