மால்தி தேவி
மால்தி தேவி (Malti Devi)(5 ஆகத்து 1968 - 6 செப்டம்பர் 1999) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சமூக சேவகரும் ஆவார். இவர் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள நவாதா சட்டமன்றத் தொகுதியிலிருந்து இராச்டிரிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1]
மால்தி தேவி Malti Devi | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | நவாதா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 ஆகத்து 1968 |
இறப்பு | 6 செப்டம்பர் 1999 | (அகவை 31)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
துணைவர் | புவனேசுவர் பிரசாத் |
தொழில் | விவசாயி, அரசியல்வாதி, சமூக சேவகர் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுமால்தி தேவி 1968ஆம் ஆண்டு ஆகத்து 5ஆம் தேதி இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் உள்ள மங்களகோரி கிராமத்தில் பிறந்தார். இவர் 4 பிப்ரவரி 1984-ல் புவனேஷ்வர் பிரசாத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 1980-ல் தனது பள்ளிக் கல்வியை விட்டுவிட்டார்.[1]
அரசியல் மற்றும் செயல்பாடு
தொகுமால்தி தேவி, விவசாயிகள் இயக்கத்தை வழிநடத்தினார். மேலும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உறுப்பினராக இருந்தார்.[1] நிலமற்ற விவசாயிகள் மற்றும் பழங்குடியினருக்காக இவர் வாதிட்டார். இவர் 1995 பொதுவுடைமைக் கட்சியிலிருந்து வெளியேறினார். இவர் 1995 முதல் 1998 வரை பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் 1998-ல் 12வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சிக்கான குழுவின் உறுப்பினராகவும், நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் வேலைவாய்ப்புக்கான துணைக் குழு-I மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.[1]
இறப்பு
தொகுதேவி 6 செப்டம்பர் 1999 அன்று தனது தில்லி இல்லத்தில் புற்றுநோயால் இறந்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Biographical Sketch Member of Parliament 12th Lok Sabha". Archived from the original on 22 February 2014. பார்க்கப்பட்ட நாள் 11 February 2014.
- ↑ "Lok Sabha Proceedings". Parliament of India. பார்க்கப்பட்ட நாள் 11 February 2014.