மாளவிகா பன்சோடு

(மாளவிகா பான்சோடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாளவிகா பான்சோடு (Malvika Bansod) இந்தியாவைச் சேர்ந்த இறகுப்பந்தாட்ட வீராங்கனை ஆவார். இவர் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 அன்று பிறந்தார். மகாராட்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பான்சோடு தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டிகளின் இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவுகளில் பல தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். உலக இறகுப்பந்து வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் 200 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ள இவர் இந்தியாவின் சார்பாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டுவருகிறார்.[1][2]

மாளவிகா
இறகுப்பந்தாட்ட வீராங்கனை
குடியுரிமைஇந்தியர்
பதக்கத் தகவல்கள்
நாடு  இந்தியா
தங்கப் பதக்கம் – முதலிடம் {{{2}}} மகளிர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் {{{2}}} கலப்பு

வாழ்க்கைக் குறிப்பு தொகு

பான்சோடு மகாராட்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரில் பிறந்தார். மருத்துவர்களான திருப்தி மற்றும் பிரபோத் இவருடைய பெற்றோர்களாவர். தனது எட்டு வயதிலிருந்தே இறகுப்பந்து விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பள்ளிப் படிப்பிலும் சிறந்த மாணவியாக விளங்கியுள்ளார். தனது 10-ஆம் வகுப்புத் தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றார். தேர்வுகளுக்குத் தயாராகும் போதும் கூட பன்னாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.[3]

தொழில்முறை சாதனைகள் தொகு

  1. பஞ்ச்குலா நகரத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான அனைத்திந்திய தரவரிசை இறகுப்பந்து போட்டியின் ஒற்றையர் பட்டம்.[4]
  2. நேபாளத்தின் காட்மாண்டு நகரத்தில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 21 வயதுக்குட்பட்டோருக்கான பிராந்திய இறகுப்பந்து போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற குழுவில் பான்சோடு அங்கம் வகித்தார்.[5]
  3. கேரள மாநிலம் கோழிக்கோடில் நடைபெற்ற அனைத்திந்திய தரவரிசைக்கான முதியோர் இறகுப்பந்து போட்டியில் மாளவிகா பான்சோடு வென்றார்.[6]
  4. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அனைத்திந்திய தரவரிசை இளையோர் போட்டியில் மாளவிகா பான்சோடு வெற்றி பெற்றார்.[7]
  5. பல்கேரியாவில் நடைபெற்ற இளையோர் பன்னாட்டு சாம்பியன் பட்டத்திற்கான இறகு பந்து போட்டியில் மாளவிகா வெண்கலப் பதக்கம்.[8]
  6. மாலத்தீவுகளில் 2019ஆம் நடைபெற்ற பன்னாட்டு பெண்கள் இறகுப்பந்து போட்டியில் மாளவிகா பான்சோடு சாம்பியன் பட்டம்.[9]
  7. 2019ஆம் ஆண்டு நேபாள நாட்டின் அன்னபூர்ணா நேப்பாள் பன்னாட்டு பெண்கள் இறகுபந்து போட்டியில் மாளவிகா பான்சோடு பட்டம் வென்றார்.[10]

மேற்கோள்கள் தொகு

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  3. PTI. "Malvika Bansod: 'Need to gain strength and power to break into top 100'". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-14.
  4. "Second consecutive title for Malvika Bansod". The Bridge (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2018-10-01. பார்க்கப்பட்ட நாள் 2021-02-14.
  5. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  6. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  7. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  8. Sportstar, Team. "Indian junior shuttlers win 3 gold, a silver and 2 bronze at Bulgarian Open". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-14.
  9. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  10. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாளவிகா_பன்சோடு&oldid=3506061" இலிருந்து மீள்விக்கப்பட்டது