மாவட்டக் கல்வி அலுவலர்
தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளின் நிர்வாக வசதிகளுக்காக தமிழ்நாட்டில் இருக்கும் 38 வருவாய் மாவட்டங்களில் 120 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இக்கல்வி மாவட்ட அலுவலகங்களின் தலைமை அலுவலராக மாவட்டக் கல்வி அலுவலர் இருக்கிறார். இவர் குறிப்பிட்ட மாவட்டக் கல்வி அலுவலக எல்லைக்குள் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல், நிர்வாகப் பணிகளைக் கவனித்தல், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுகள் நடத்துதல், பொதுத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியல்களை வழங்கும் பணிகள் போன்றவைகளைத் தனது அலுவலகத்தின் கீழுள்ள பணியாளர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.[1] அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியராகப் பணியாற்றுபவர்கள் பணி உயர்வு பெறுவதன் மூலமும் குறிப்பிட்ட அளவு இப்பணியிடங்களில் நியமிக்கப்படுகின்றனர்.
சான்றுகள்
தொகு- ↑ "மாவட்ட கல்வி அலுவலர் பணி". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2023-07-31.