மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், வானரமுட்டி

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் - வானரமுட்டி (District Institute of Education and Training, Vanaramutti) இந்தியாவின் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வானரமுட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது.[1] [2]இது மத்திய அரசின் அங்கீகாரத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு கல்வி நிறுவனமாகும். மாவட்டத்தில் அனைத்து நிலைகளிலும் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதிசெய்வதே நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வானரமுட்டி. துாத்துக்குடி மாவட்டம்

செயல்பாடுகள் தொகு

  • பள்ளிகளுக்கான வழிகாட்டல் வழங்குவது.
  • கற்றல் கற்பித்தலில் தொடர் ஆராச்சிகளை மேற்கொள்வது.
  • புதிய கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு உத்திகளை உருவாக்குவது.
  • ஆசிரியர்களுக்கு பணி முன் மற்றும் பணியிடைப் பயிற்சிகளை வடிவமைத்து வழங்குதல்.
  • கல்வி சார்ந்த உள்ளீடுகளை மற்ற துறைகளுக்கு வழங்குதல்.

துறைகள் தொகு

  1. பணி முன் பயிற்சித் துறை
  2. பணியிடைப் பயிற்சித் துறை
  3. மாவட்ட கருவுல அலகு
  4. திட்டமிடுதல் மற்றும் மேலாண்மைத்த துறை
  5. கல்வி நுட்பவியல் துறை
  6. பணி அனுபவத் துறை
  7. பாடத்திட்ட பொருள் வளர்ச்சி மற்றும் மதிப்பீட்டுத் துறை[3]

மேற்கோள்கள் தொகு

  1. "மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மீண்டும் செயல்பட வேண்டும்; முன்னாள் மாணவர்கள் கோரிக்கை". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/State/the-district-teacher-training-institute-should-be-reactivated-alumni-request-871264. பார்த்த நாள்: 26 January 2024. 
  2. "வானரமுட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/Districts/2021/09/21173248/vanaramutty-teacher-training-school-alumni-meeting.vpf. பார்த்த நாள்: 26 January 2024. 
  3. "DIET". Archived from the original on 2017-05-03. பார்க்கப்பட்ட நாள் 10 மே 2017.

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.scertdelhi.info பரணிடப்பட்டது 2019-05-07 at the வந்தவழி இயந்திரம்
  2. http://www.tnscert.org பரணிடப்பட்டது 2017-05-07 at the வந்தவழி இயந்திரம்
  3. diettut.org