மாவட்ட கால்நடை பண்ணை, அபிஷேகப்பட்டி

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடத்தப்படும் ஒரு கால்நடைப் பண்ணை

மாவட்ட கால்நடை பண்ணை என்பது தமிழ்நாடின், திருநெல்வேலி மாவட்டம், அபிசேகப்பட்டியில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையாகும். இந்தப் பண்ணையானது சுமார் 1250 ஏக்கர் நிலப்பரப்பளவில் உள்ளது.[1] இப்பண்ணையில், ஜெர்சி மாடுகள்,ஜெர்சி கலப்பினம், ஹோல்ஸ்டீன் பிரசியன் கலப்பினம், சிவப்பு சிந்தி, காங்கேயம் ஆகிய மாட்டினங்களும், கீழக்கரிசல் செம்மறி ஆடுகள், லார்ஜ் ஒயிட் யர்க்‌ஷயர், லோண்ரேஸ், லோண்ரேஸ் கலப்பினம் ஆகிய வெண் பன்றி இனங்கள், நந்தனம் கலர் பிராய்லர் கோழி இனம் ஆகியவை வளர்க்கப்படுகின்றன.[2] இங்கு உருவாக்கப்படும் கன்றுகளை விவசாயிகள் பண்ணை அமைக்க ஏதுவாக விற்கப்படுகின்றன. மேலும் இங்கு வளர்க்கப்படும் ஆடு, மாடுகளின் சாணங்களில் மண்புழு உரங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. "கால்நடை மருத்துவர்களுக்கான மண்புழு உரம் தயாரித்தல் செயல்முறை விளக்கப் பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்". செய்தி. தினபூமி. 2018 பெப்ரவரி 15. 8 மே 2019 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  2. "கொள்கை விளக்கக் குறிப்பு 2009-2010" (PDF). கால்நடை பராமரிப்புத் துறை. 8 மே 2019 அன்று பார்க்கப்பட்டது.