மாவட்ட கால்நடை பண்ணை, கொருக்கை

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடத்தப்படும் ஒரு கால்நடைப் பண்ணை

மாவட்ட கால்நடை பண்ணை, கொருக்கை என்பது தமிழ்நாடின், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொருக்கை கிராமத்தில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடத்தப்படும் ஒரு கால்நடைப் பண்ணையாகும்.[1] இந்தப் பண்ணையானது 495 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பண்ணையானது குறிப்பாக உம்பளச்சேரி மாட்டினத்தை பாதுகாக்கும் நோக்கில் துவக்கப்பட்டது ஆகும். இந்த நோக்கத்துக்காக இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட உம்பளச்சேரி மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் 100 உம்பளச்சேரி மாடுகள் இங்கு விற்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்தொகு

  1. "கொள்கை விளக்கக் குறிப்பு 2009-2010". கால்நடை பராமரிப்புத் துறை. பார்த்த நாள் 8 மே 2019.
  2. வி.தேவதாசன் (2018 திசம்பர் 6). "புயலால் கொருக்கை அரசு கால்நடை பண்ணை சேதம் மாட்டுக் கொட்டகைகள் சூறை; 9 கால்நடைகள் உயிரிழப்பு". செய்திக் கட்டுரை. காமதேனு. பார்த்த நாள் 10 மே 2019.