மாவட்ட ஆட்சி அமைப்பு
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியான ஆட்சி அமைப்பு ஒன்று இருக்கிறது. இந்த ஆட்சி அமைப்பின் கீழ் பல்வேறு துறை அலுவல்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த அமைப்புகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியில் இருப்பவரின் கீழ் இயங்குகின்றன.
மாவட்ட ஆட்சியர்கள் மாவட்டத்தில் அதிகார கடமைகளை ஒரு பரவலான ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. பொறுப்புகள் சரியான அளவைப் அந்தந்த மாநிலத்தில் மாறுபடுகிறது போது, அவர்கள் பொதுவாக உள்ளடக்கியது
மாவட்ட ஆட்சித்தலைவர்
தொகுஒவ்வொரு மாவட்டத்தின் ஆட்சி அமைப்புகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித்தலைவரின் மேற்பார்வையில் இயங்குகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் குறிப்பாக மாநில அரசின் வருவாய்த்துறையின் மாவட்டத் தலைமை அதிகாரியாக இருக்கிறார். இருப்பினும் மாவட்டத்திலிருக்கும் அனைத்துத்துறை அலுவல்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் இருக்கிறார்.மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பிற்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் கடமைகள்
தொகுவரிப்பணம், நிலம் கையகப்படுத்தும் நிலவரியை சேகரிப்பு வருமான வரி பாக்கி, கலால் வரி, பாசன பாக்கிகள் முதலியன சேகரிப்பு, வேளாண் கடன்கள் விநியோகம் வெள்ளம் போன்ற, பஞ்சங்கள் அல்லது தொற்று நோய்களுக்கும் இயற்கை அழிவுகள் போதும் அனர்த்த முகாமைத்துவ கலவரம் அல்லது வெளி ஆக்கிரமிப்பிற்கும் போது நெருக்கடி மேலாண்மை மாவட்ட வங்கியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் மாவட்ட தொழில் மையம் தலைவர் மாவட்ட நீதிபதி போல: சட்டம் ஒழுங்கு பராமரிப்பு போலீஸ் மற்றும் சிறைகளில் மேற்பார்வையின் அடிபணிந்த நிறைவேற்று magistracy மேற்பார்வையின் குற்றவியல் நடைமுறை தடுப்பு பிரிவின் கீழ் வழக்குகள் விசாரணையை சிறைகளில் மேற்பார்வை மற்றும் மூலதன தண்டனை நிறைவேற்றுவது சான்றிதழ் நிலம் கையகப்படுத்தும் நடுவர் துணை ஆணையர் / மாவட்ட ஆணையாளர் என: எல்லா விஷயங்களையும் கோட்ட ஆணையாளர் அறிக்கைகள். பல்வேறு முன்னேற்றம் மேற்கொள்கிறது. கோட்ட ஆணையாளர், இல்லாத நிலையில் மாவட்ட அபிவிருத்தி அதிகார சபையின் என பதவி தலைவர் செயல்படுகிறது. ஒரு மாவட்ட நீதிபதி / மாவட்ட ஆட்சியர் / துணை ஆணையர் / மாவட்ட ஆணையாளர் பல்வேறு துறைகளில் நாள் முதல் நாள் வேலை நடத்தி சில I.A.S மற்றும் P.C.S உதவி வருகிறது: - முதன்மை மேம்பாட்டு அதிகாரி (CDO) போன்ற, தலைமை வருவாய் அலுவலர் (CRO) மேலதிக மாவட்ட நீதவான் (கள்) வட, மேற்கு, கிழக்கு, தெற்கு, மின் (செயல்), எஃப் / ஆர் (நிதி மற்றும் வருவாய்), (நகரம்), சிஎஸ் (சிவில் சப்ளை), (protocol) (திட்டங்கள்), (Nazul), (நிவாரண), எல்ஏ (நிலம் கையகப்படுத்துதல்) நகரம் நீதவான் சப்-பிரதேச நீதவான் (கள்) அல்லது துணை கலெக்டர் (கள்), கூடுதல் நகரம் நீதவான் (I, II III, IV, போன்றவை) மற்றும் நிறைவேற்று நீதவான் மற்ற துறைகளில் இருந்து மற்ற அதிகாரிகள் மாவட்ட மட்டத்தில் அவருக்கு அறிக்கைகள்
மாவட்ட வருவாய் அலுவலர் ( District Revenue Officer )
தொகுமாவட்ட ஆட்சித்தலைவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் பணி மாவட்ட வருவாய் அலுவலர் பணியாகும். இவர் வருவாய்த்துறையின் அனைத்துச் செயல்பாடுகளையும் கவனிக்கிறார். மாவட்ட ஆட்சித்தலைவர் விடுமுறையில் இருக்கும் போது இவர் மாவட்ட ஆட்சித்தலைவர் பணியைக் கூடுதலாகக் கவனிப்பார்.மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பிற்கு வருவாய்த்துறையில் பணியாற்றி பதவி உயர்வு பெற்றவர்கள் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.
மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ( District Superintendent of Police (DSP) )
தொகுமாவட்ட அளவில் மாவட்ட சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்புப் பணிகளைக் கண்காணிக்கும் அதிகாரியாக மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் செயல்படுகிறார். மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பொறுப்பிற்கு இந்தியக் காவல் பணி அதிகாரிகள் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.
மாவட்ட முதன்மை நீதிபதி ( District Chief Judge )
தொகுமாவட்ட அளவில் நீதித்துறை சார்ந்த பணிகளைக் கண்காணிக்கும் அதிகாரியாக மாவட்ட முதன்மை நீதிபதி செயல்படுகிறார். மாவட்ட முதன்மை நீதிபதி பொறுப்பிற்கு சட்டம் பயின்றவர்கள் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.
மாவட்ட வன அலுவலர் ( District Forest Officer )
தொகுமாவட்ட அளவில் வனங்கள் மற்றும் காடுகளில் உள்ள மரங்கள், விலங்கினங்கள் போன்றவைகளின் பாதுகாப்பிற்கான அதிகாரியாக மாவட்ட வன அலுவலர் செயல்படுகிறார். மாவட்ட வன அலுவலர் பொறுப்பிற்கு இந்தியக் வனப் பணி அதிகாரிகள் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.
திட்ட அலுவலர்
தொகுமாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர் மாவட்ட அளவிலான கிராம வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துகிறார். இவர் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.
மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளர்கள்
தொகுமாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவருக்குப் பல்வேறு துறையின் கீழ் உதவுவதற்காக குறிப்பிட்ட துறைகளின் நேர்முக உதவியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
- நேர்முக உதவியாளர் (பொது)
- நேர்முக உதவியாளர் (நில அளவை)
- நேர்முக உதவியாளர் (பொது வினியோகம்)
- நோ்முக உதவியாளர் (விவசாயம்)
- நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு)
- நேர்முக உதவியாளர் (சத்துணவு)
- நேர்முக உதவியாளர் (கணக்குகள்)
- நேர்முக உதவியாளர் (ஊராட்சிகள்)
- நேர்முக உதவியாளர் (நகராட்சிகள்)
என்று சில அலுவலர்கள் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அவர்கள் துறைகள் சார்பாக உதவுகிறார்கள்
மாவட்ட அலுவலர்கள்
தொகுமாவட்ட ஆட்சித்தலைவருக்கு உதவ மேலும் பல துறைகளின் சார்பில் சில மாவட்ட அலுவலர்களை தமிழக அரசு நியமிக்கிறது.
- மாவட்ட வழங்கல் அலுவலர்
- மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்
- மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்
- மாவட்ட சமூகநல அலுவலர்
- மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வு நல அலுவலர்
- மாவட்டத் திட்ட அலுவலர் (மகளிர் மேம்பாட்டுத் திட்டம்)
- மாவட்டத் திட்ட அலுவலர் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்)
- மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
- இணை இயக்குநர் (வேளாண்மை)
- இணை இயக்குநர் (கால்நடைத்துறை)
- துணை இயக்குநர் (தோட்டக்கலை)
- உதவி இயக்குனர்( நில அளவைப் பதிவேடுகள் துறை)
- உதவி இயக்குனர்( கிராமப் பஞ்சாயத்துக்கள்)
- உதவி இயக்குனர்( நகரப் பஞ்சாயத்துக்கள்)
- உதவி இயக்குனர்( தணிக்கைத்துறை)
- உதவி இயக்குனர்( புள்ளியியல்)
- உதவி இயக்குனர்( மீன்வளம்)
- உதவி இயக்குனர்( கனிம வளம்)
- உதவி இயக்குனர்( தமிழ் வளர்ச்சி)
துணை ஆட்சியர் அல்லது வருவாய்க் கோட்டாட்சியர்
தொகுமாவட்டங்களில் வருவாய்த்துறையில் ஓன்றுக்கு மேற்பட்ட வட்டங்களை உள்ளடக்கி வருவாய் கோட்டம் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிருவாக அமைப்பின் தலைமையாக துணை ஆட்சியர் அல்லது வருவாய்க் கோட்டாட்சியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இப்பணியிடங்களில் இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் நியமிக்கப்பட்டால் துணை ஆட்சியர் என்றும் இந்திய ஆட்சிப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் மற்றவர்களும் நியமிக்கப்பட்டால் வருவாய்க் கோட்டாட்சியர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
பிற மாவட்ட அலுவலர்கள்
தொகுஇதுபோல் ஒவ்வொரு துறையிலும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் அரசால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட துறையின் தலைமை அதிகாரிகளாகப் பதவி வகிப்பதுடன் அந்தத்துறையின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறார்கள்
- மாவட்ட நூலக அலுவலர்
- மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்
- மாவட்ட விளையாட்டு அலுவலர்
- மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
- மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்
- மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளர்
- மின்வாரிய மேற்பார்வை பொறியாளர்
- தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் கோட்ட அலுவலர்
- சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர்
- கூட்டுறவு இணைப் பதிவாளர்
- உதவி இயக்குனர், கூட்டுறவுத் தணிக்கை