மாவியம் அல்லது செல்லுலோசு (cellulose) என்பது ஒரு (C
6
H
10
O
5
)
n
என்னும் வேதி வாய்பாடு கொண்ட கரிமச் சேர்மம் ஆகும். ஒவ்வொரு குழுவான ஆறு கரிம அணுக்களுக்கும், 10 ஐதரச அணுக்களும் 5 ஆக்சிச அணுக்களும் இணைப்பு கொண்ட நெடுந்தொடர் கரிமச்சேர்மம். அது பல நூற்றில் இருந்து ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட எளிய இனியமாகிய D-குளுக்கோசு அலகுகளை நீண்ட சங்கிலியாக இணைத்த பல்லினியம் அல்லது பாலிசாக்கரைடு என்னும் வகையைச் சேர்ந்த ஒரு சேர்மம். [1][2]

மாவியம் அல்லது செல்லுலோசு
முப்பரிமாணப்படம் (நான்கு குளுக்கோசு அலகுகள் தெரியும்) (கருப்பு=கரிமம்; சிவப்பு=ஆக்சிஜன்; வெள்ளை=ஐதரசன்.)
மாவியத்தின் ஒரு போல்மம் (model)

மாவியம், பசும் தாவரங்களின் செல்களின் சுவற்றுக்கும், ஆல்கி (algae) என்னும் பாசிவகை போன்றவற்றிற்கும் முதன்மையான கட்டமைப்புப் பொருளாகப் பயன்படும். சில வகை கோலுரு நுண்ணுயிர் (பாக்டீரியாக்கள்) மாவியத்தைச் சுரந்து உயிரிப்படிவங்கள் (biofilms) உருவாகக் காரணமாக இருக்கும். மாவியமே உலகில் மிகவும் பரவலாகக் காணப்படும் கரிமச்சேர்மம் ஆகும். தாவரப்பொருட்களில் ஏறத்தாழ 33 விழுக்காடு மாவியத்தால் ஆனதே. [3] காட்டாக, பஞ்சிலே 90%க்கு மேலேயும் மரக்கட்டையிலே 50%க்கு மேலேயும் மாவியத்தால் ஆனது.

தொழிலகப் பயன்பாட்டுக்கு, மாவியம் பெரும்பாலும் மரக்கூழில் (pulp) இருந்தும் பஞ்சில் இருந்துமே எடுக்கப்படுகிறது. முதன்மையாக அட்டைகளும், காகிதங்களும் செய்ய மாவியம் உதவுகிறது. சிறிதளவு பிற பொருட்கள் செய்யவும் இது பயன்படும் (cellophane, rayon,etc).

சில மிருகங்களும், கரையான் போன்ற பூச்சிகளும் மாவியத்தைச் செரிக்க வல்லன. அவற்றின் குடல்களில் வாழும் பிற நுண்ணுயிரிகள் இவற்றைச் செரிக்க உதவும். மனிதர்களுக்கு மாவியத்தை உண்டால் செரிக்காது. அதன் காரணமாகவே உணவுமுறை நார்ச்சத்து என்று இது வழங்கப் படும். நீர்விரும்பு தன்மையாலும் செரிக்காமல் இருப்பதாலும் மலச்சிக்கலை எதிர்க்க இது பெரிதும் உதவும்.

மாவியத்தில் இருந்து மாவிய எத்தனால் என்னும் எரிபொருளும் செய்யப்படும்.

உசாத்துணைகள்

தொகு
  1. Crawford, R. L. (1981). Lignin biodegradation and transformation. New York: John Wiley and Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-05743-6.
  2. Updegraff DM (1969). "Semimicro determination of cellulose in biological materials". Analytical Biochemistry 32: 420 – 424. 
  3. Cellulose. (2008). In பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். Retrieved January 11, 2008, from Encyclopædia Britannica Online.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவியம்&oldid=3935608" இலிருந்து மீள்விக்கப்பட்டது