கோலுயிரி

(கோலுரு நுண்ணுயிர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோலுயிரி அல்லது கோலுரு பாக்டீரியா அல்லது கோலுரு நுண்ணுயிரி (Bacillus) என்பது குச்சி அல்லது கோல் போன்ற உருவத்தையுடைய பசிலசு (Bacillus) எனும் பேரினத்தைச் சேர்ந்த பாக்டீரியாக்கள் ஆகும். இந்த பேரினத்தைச் சேர்ந்த பாக்டீரியாக்கள் கிராம்-நேர் பாக்டீரியாக்கள் ஆகும். இவை கட்டாயமான காற்றுவாழ் (Aerobic organism), அல்லது அமையத்துக்கேற்ற காற்றின்றிவாழ் (Anaerobic organism) உயிரினமாக இருக்கும்.

பாக்டீரியாக்கள் உருவவியல் அடிப்படையில், மூன்று வகையாகப் பிரிக்கப்படும்போது, அவற்றில் ஒரு வகையாக இந்தக் கோலுயிரி (Bacillus) என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. ஏனைய இரு வகைகளும் கோளவுயிரி, சுருளியுயிரி என்பனவாகும். பொதுக் கருத்தைக் கொள்கையில், உருவவியல் அடிப்படையில், அனைத்து கோல் வடிவ உயிரினமும் கோலுயிரிகளே. எனவே கோல் வடிவம் கொண்ட அனைத்து உயிரினங்களும், பொதுவில் கோலுயிரி என்று அழைக்கப்பட முடியுமென்பதனால், இந்தச் சொல் சிலசமயம் கருத்து மயக்கத்தைத் தரக் கூடும். எடுத்துக் காட்டாக எசரிக்கியா கோலை என்ற கிராம்-எதிர் பாக்டீரியா கோல் வடிவில் இருப்பதனால், பொதுக் கருத்தில் கோலுயிரி என அழைக்கப்பட முடியுமாயினும், இந்த பாக்டீரியா பசிலசு பேரினத்தைச் சார்ந்ததல்ல.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலுயிரி&oldid=3723135" இலிருந்து மீள்விக்கப்பட்டது