சுருளியுயிரி
Spirillum | |
---|---|
Spirillum | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Spirillum
|
சுருளியுயிரி அல்லது சுருளியுரு பாக்டீரியா (Spirillum) எனப்படுவது நுண்ணுயிரியலில், திருகப்பட்டிருப்பதைப் போல் சுருளி வடிவில் அமைந்திருக்கும் பாக்டீரியாக்களைக் குறிக்கும். பாக்டீரியாக்கள் உருவவியல் அடிப்படையில், மூன்று வகையாகப் பிரிக்கப்படும்போது, அவற்றில் ஒரு வகையாக இந்தச் சுருளியுயிரி என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. ஏனைய இரு வகைகளும் கோலுயிரி, கோளவுயிரி என்பனவாகும்.
இவை Spirillaceae குடும்பத்தைச் சார்ந்த கிராம்-எதிர் பாக்டீரியாக்கள் ஆகும்]]).[1]. இவை பொதுவாக இரு முனைகளிலும் கொத்தாக இருக்கும் நகரிழைகளைக் கொண்டிருப்பதனால், இலகுவாக அசையும் திறன் கொண்டவையாக இருப்பதுடன், காற்றுவாழ் உயிரினங்களாக இருக்கின்றன[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Garrity, George M.; Brenner, Don J.; Krieg, Noel R.; Staley, James T. (eds.) (2005). Bergey's Manual of Systematic Bacteriology, Volume Two: The Proteobacteria, Part C: The Alpha-, Beta-, Delta-, and Epsilonproteobacteria. New York, New York: Springer. pp. 354–361. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-24145-6.
- ↑ The Free Dictionary