மாவீரர் துயிலுமில்லப் பாடல்
மாவீரர் நாள் அன்றும் விடுதலைப் புலிகளின் போராளிகளின் இறுதிச் சடங்களின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் துயிலுமில்லப் பாடல் ஆகும். புதுவை இரத்தினதுரை இந்தப் பாடலை எழுத, இசைவாணர் கண்ணன் இப்பாடலுக்கு இசையமைத்தவர். வர்ண ராமேஸ்வரன் இப்பாடலைப் பாடியிருந்தார். இவருடன் மேஜர் சிட்டு, மணிமொழி கிருபாகரன், அபிராமி ஆகியோர் பின்னணியில் பாடியவர்கள்.[1][2][3]
இப்பாடலில் வரும் ‘‘நள்ளிரா வேளையில் நெய் விளக்கேற்றியே நாமுமை வணங்குகிறோம்’’ என்ற வரி ‘‘வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்’’ எனப் பின்னாளில் மாற்றப்பட்டது. ஏனெனில் முன்னர் நள்ளிரவிலேயே மாவீரர் நாள் நினைவுகூரப்பட்டது. பின்னரே தற்போதுள்ள மாலை 6.05 க்கு மாவீரர் சுடர் ஏற்றும் முறை வழக்கத்துக்கு வந்தது. தற்போதைய நேரமே முதல் மாவீரரான சங்கர் வீரச்சாவெய்திய கணம்.[4][5][6]
முழுப் பாடல்
தொகுதொகையறா
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!
பல்லவி
தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! - இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்! - அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அனுபல்லவி
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
சரணங்கள்
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்! - உங்கள்
கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது! எங்கள் -
தாயகம் வரும்வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது!
உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம்! - அதை
நிரைநிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்! - எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
ஆங்கில மொழிபெயர்ப்பு
தொகுAn oath upon Tamil, the language we breathe;
An oath upon our guide, the creator of our history; our leader
An oath upon those reposing warriors, that closed their eyes here
We will not live downtrodden,
We will not retire from the struggle for Eelam,
we swear.
To those sandalwood caskets who embraced death, dreaming of the motherland;
Can you hear our humming cries here?
You who live on in the trenches!
Your parents, your friends, your kith and kin
We have come!
Your comrades who battled beside you
on those red fields,
We have come!
Oh please! Oh where?
Open your eyes just this one time, here.
Just show your revered faces once, then return to your slumber.
We come to your gates, give us strength we pray
We lay our hands on your tombstones and make this promise
Even when death comes, when fire burns, our blood will not sleep
Our thirst will not be quenched until we have our homeland
In your last moments, your mouths uttered those words... Tamil Eelam
For which we will stand together and make haste to attain;
In our leaders path
the Tamil nation will see independence,
And we will endure any plight to win in your honour
மேற்கோள்கள்
தொகு- ↑ "வெளிச்சம் 2002.07-08". https://noolaham.net/project/177/17666/17666.pdf.
- ↑ "ஐபிசி தமிழா லண்டன் 2017 - தாயகக் கலைஞர் வர்ணராமேஸ்வரன் (37 mins)". https://www.facebook.com/radioibctamil/videos/1897613380496715.
- ↑ "Collective message from Tamils on Heroes Day: Rajapaksas can’t kill Tamil Eelam dream". TamilNet. November 28, 2019. https://tamilnet.com/art.html?catid=13&artid=39651.
- ↑ "மாவீரர் நாள் மரபாகி வந்த கதை - EelamHouse". https://eelamhouse.com/?p=2591.
- ↑ "துயிலுமில்லப்பாடல் உருவான வரலாறு - EelamHouse". https://eelamhouse.com/?p=2239.
- ↑ "“மொழியாகி எங்கள் மூச்சாகி” பாடல் ஒலிப்பதிவு அனுபவம்". Irruppu.com. November 25, 2023. http://irruppu.com/2023/11/25/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95/.