மா. அருணாசலம்

மா. அருணாசலம் (1912 - 1989) என்பவர் தமிழ்நாடு மாநிலம் விருதுநகரைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியராவார். இவர் இந்தியக்குடியரசின் முன்னாள் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்திடம் நல்லாசிரியர் விருது பெற்றவர். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் உறுப்பினராகவும், தமிழக அரசு கல்வியாளர் குழுவின் ஒருவராகவும் இருந்துள்ளார்.

மா. அருணாசலம்
பிறப்பு(1912-10-14)அக்டோபர் 14, 1912
விருதுநகர்
இறப்பு1989
திருமங்கலம் (மதுரை)
தேசியம்இந்தியர்
பணிஆசிாியர்
பெற்றோர்மாரியப்ப நாடார், பூவாயியம்மாள்

இளமை தொகு

மா. அருணாசலம், 1912ம் ஆண்டு அக்டோபர் 14ம் நாள் மாரியப்பநாடார் பூவாயியம்மாள் ஆகியோருக்கு மகனாக விருதுநகரில் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை விருதுநகர் கே. வி. எஸ் பள்ளியிலும் பட்டப் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் Literature of Teaching படிப்பை செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் முடித்து பொருளியல் துறையின் பட்ட மேற்படிப்பில் சென்னை மாகாண அளவில் இரண்டாமிடம் பெற்றார்.

பின்னர் இந்தியக் குடிமைப் பணியில் தேர்வானார். ஆனால் அவர் படித்த கே. வி. எஸ். பள்ளியில் உதவி தலைமையாசிரியர் பணி கிடைக்கவே அங்கு மாற்றலானார்.

தலைமையாசிரியர் தொகு

கே. வி. எஸ். பள்ளியில் உதவி தலைமையாசிரியராய் பணிபுரிந்து பின்னர் 1941ம் ஆண்டு திருமங்கலம் பி. கே. என் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக சேர்ந்து ஏறத்தாழ 31 ஆண்டுகாலம் பணிபுரிந்தார். இவரால் அப்பள்ளியில்

  • 4ம் பாரம் வகுப்பு முதல் எல்லா மாணவர்களுக்கும் ரென் அண்டு மார்ட்டின் ஆங்கில அகராதி பயிற்சியளிக்கப்பட்டது.
  • காந்தி பிறந்தநாளான 1956ம் ஆண்டு அக்டோபர் 2ம் நாள் மாணவர்களுக்கு பிடி அரிசித் திட்டம் (மதிய உணவுத்திட்டம்) தொடங்கப்பட்டது.
  • 1959ம் ஆண்டு பிப்ரவரி 22ம் நாள் பள்ளியின் 50ம் ஆண்டு பொன்விழாவில் அப்போதைய தமிழக முதலமைச்சர் கு. காமராசரைப் பங்கேற்கவைத்தார்.
  • அருணாசலத்தால் ஆரம்பிக்கப்பட்ட பிடி அரிசித் திட்டத்தை மேற்பார்வையிட ஒரிசா மாநில அமைச்சர் 1958ம் ஆண்டு இப்பள்ளிக்கு வந்தார்.
  • பள்ளியின் முதல் சாரணர் சாரணியர் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
  • 1962ம் ஆண்டு பள்ளியில் இலவசக் கல்வி முறையைக் கொண்டு வந்தார்.

பதவிகளும் விருதுகளும் தொகு

இவர் பணியாற்றிய பதவிகள் மற்றும் பெற்ற விருதுகள் பின்வருமாறு.

ஆசிரியர் பணி


அலுவலகப் பணி
  • காமராசர் முதலைச்சராக பொறுப்பேற்றதும் தமிழகத்தில் புதிய கல்விமுறையை அமைக்க ஐவர் கமிட்டியை உருவாக்கினார். அதில் அருணாசலமும் ஒருவர்[1].
  • 1952ம் ஆண்டில், ஒன்றிய அரசு உயர்கல்வித் துறையின் உறுப்பினர்[2]
  • தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் உறுப்பினர்
  • தமிழக அரசு கல்வியாளர் குழு உறுப்பினர்
  • தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் உறுப்பினர்
  • மதுரை மாவட்ட சாரணர் இயக்க ஆய்வாளர் (Commissioner of Scouts)


விருதுகள்
  • இந்திய தேசிய நல்லாசிரியர் விருது.

மேற்கோள்கள் தொகு

  • திருமங்கலம் பி. கே. என். வித்யாசாலா கல்விக் குழுமம் வெளியிட்ட நூற்றாண்டு விழா மலரில் "தலைமைக்கே புகழ் சேர்த்த தலைமையாசிரியர், மா. அருணாசலம்" எனும் கட்டுரை.
  1. http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/30267/8/chapter2.pdf
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-11-22. பார்க்கப்பட்ட நாள் 2015-03-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._அருணாசலம்&oldid=3567012" இலிருந்து மீள்விக்கப்பட்டது