பி. கே. என். வித்யாசாலா

பி.கே.என் வித்தியாசாலா (ஆங்கில மொழி: PKN Vidhyasala) என்பது 2 தொடக்கப்பள்ளி, 2 ஆரம்பப்பள்ளி, 2 மேல்நிலைப் பள்ளிகள், 3 பதின்ம மேல்நிலைப் பள்ளிகள், 1 நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளி மற்றும் 1 கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 11 கல்வி நிறுவனங்கைளைக் கொண்ட ஒரு கல்வி அறக்கட்டளையாகும். இவ்வறக்கட்டளையானது மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்துள்ளது.

பி.கே.என். வித்யாசாலா சங்கம்
பாண்டியகுல க்ஷத்திரிய நாடார் வித்தியாசாலா
குறிக்கோளுரைசக்கர நெறி நில்
வகைதனியார் கல்வி அறக்கட்டளை
அமைவிடம்திருமங்கலம்,மதுரை, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்திருமங்கலம் பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

வரலாறுதொகு

பி. கே. என் வித்தியாசாலா சங்கம், திருமங்கலம் பாண்டியகுல சத்திரிய நாடார் உறவின்முறையினரால் 1909ம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தொடங்கப் பெற்றது. இது தற்பொழுது 10 பள்ளிகள் மற்றும் 1 கல்லூரி என விரிவடைந்துள்ளது. 2009 - 2010 கல்வியாண்டில் பி. கே. என் பள்ளிகளின் நூற்றாண்டு விழா நடந்தது. இதன் முக்கிய நிகழ்வான அறிவியல் கண்காட்சியை இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவரான முனைவர் அப்துல் கலாம் தொடங்கி வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்[1].

அமைவிடம்தொகு

பி. கே. என் வித்தியாசாலா சங்கம், மதுரை மாவட்டம் திருமங்கலம் பி. கே. என் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகத்தினுள் அமைந்துள்ளது. இவ்வறக்கட்டளையானது 20கிமீ. வடக்கில் மதுரையையும், 28கிமீ. தெற்கில் விருதுநகரையும் கொண்டு, மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

கல்வி நிலையங்கள்தொகு

 
திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள கு.காமராசரின் திருவுருவச் சிலை
 • பி.கே.என். ஆரம்பம் மற்றும் தொடக்கப் பள்ளி [வடக்கு]
 • பி.கே.என். தொடக்கப் பள்ளி [வடக்கு]
 • பி.கே.என். பாலர் மற்றும் ஆரம்பப்பள்ளி
 • பி.கே.என். தொடக்கப் பள்ளி [தெற்கு]
 • பி.கே.என். ஆரம்பப்பள்ளி [தெற்கு]
 • பி.கே.என். வித்யாலயா [CBSE] இரண்டாம் வகுப்பு வரை
 • பி.கே.என். பதின்ம மேல்நிலைப் பள்ளி
 • பி.கே.என். பெண்கள் மேல்நிலைப் பள்ளி
 • பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
 • பி.கே.என். பதின்ம உயர்நிலைப் பள்ளி, பசுமலை, மதுரை
 • பி.கே.என். பதின்ம மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்
 • பி. கே. என். கலை மற்றும் அறிவியல் கல்லூரி

முன்னாள் மாணவர்கள்தொகு

இவற்றையும் பார்க்கதொகு

சான்றுகள்தொகு

 1. "Dr. APJ Abdul Kalam make interactive with the Student in PKN Vidhyasala's 100th year centenary". www.abdulkalam.com. மூல முகவரியிலிருந்து 6 ஜூலை 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 December 2009.
 2. "பி. கக்கன் 10". தி இந்து (தமிழ் நாளிதழ்). பார்த்த நாள் 2015-06-19.
 3. https://twitter.com/VelrajR
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._என்._வித்யாசாலா&oldid=3220781" இருந்து மீள்விக்கப்பட்டது