பி. வி. பார்த்தசாரதி

பி. வி. பார்த்தசாரதி என்பவர் (பிறப்பு: 1938) மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த ஒரு தடகள வீரராவார். மாநில அளவில் மற்றும் உலகளவில் நடைபெற்ற தடை தாண்டுதல் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்த இவர், தனது பள்ளிப்படிப்பை திருமங்கலம் பி.கே.என். பள்ளியிலும், பட்டப்படிப்பை சென்னை கிறித்துவக் கல்லூரியிலும், இயந்திரப் பொறியியல் படிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் முடித்தார்[1]. தனது பள்ளி ஆசிரியர் ஜெப்ரினின் ஊக்கத்தினால் தடைதாண்டும் போட்டிகளில் ஆர்வம் கொண்டு, கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு பதக்கங்கள் பெற்றார். மேலும் இவர், பி.கே.என் பள்ளி மற்றும் கல்லூரியின் தலைவர் மற்றும் தாளாளராகவும், மதுரை மாவட்ட ரோட்டரி கிளப்புகளின் தலைவராகவும் பதவிவகித்துள்ளார்.

வென்ற போட்டிகள் தொகு

ஆண்டு இடம் தடகள விழாக்கள் போட்டிகள் வென்ற நிமிடங்கள்
1983 புதுதில்லி 2வது ஆசிய முன்னாள் தடகளவீரர்களுக்கான போட்டி 400மீ ஓட்டப் பந்தயம் 15.6 [2]
400மீ தடைதாண்டுதல் 1.4 [3]
1992 சிங்கப்பூர் 13வது ஆசிய முன்னாள் தடகளவீரர்களுக்கான போட்டி 100மீ தடைதாண்டுதல் 15.6 [4]
1998 மும்பை 20வது தேசிய முன்னாள் தடகளவீரர்களுக்கான போட்டி 300மீ தடைதாண்டுதல் 50.8 [5]
2013 பெங்களூரு 34வது தேசிய முன்னாள் தடகளவீரர்களுக்கான போட்டி 80மீ தடைதாண்டுதல் 16.2 [6]
2014 கோயமுத்தூர் 35வது தேசிய முன்னாள் தடகளவீரர்களுக்கான போட்டி 80மீ தடைதாண்டுதல் 17.6 [7]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வி._பார்த்தசாரதி&oldid=3874458" இலிருந்து மீள்விக்கப்பட்டது