மா. இளங்கண்ணன்
மா. இளங்கண்ணன் (பிறப்பு: ஆகத்து 18 1938) சிங்கப்பூரில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கலைமகள் தொடக்கப் பள்ளியில் கற்றார்.
தொழில்
தொகுதகவல் கலை அமைச்சில் தமிழ்த் தட்டச்சராக அரசுப் பணியில் இணைந்து ஓய்வுபெறும் வரை 30 ஆண்டுகள் அப்பணியிலேயே சேவைசெய்தார். இவர் தொண்டன் எனும் இதழின் ஆசிரியராகவும், சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இலக்கியப் பணி
தொகு1967ல் எழுதத் தொடங்கிய இவரின் முதல் படைப்பு ‘தீவலி' எனும் சிறுகதை 'தமிழ் முரசி'ல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து சிறுகதை, நாவல் போன்ற துறைகளில் அதிகம் ஈடுபாடுகாட்டி வந்த இவர் 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.
எழுதியுள்ள நூல்கள்
தொகு- வழி பிறந்தது (1975)
- குங்குமக் கன்னத்தில் (1977)
- கோடுகள் ஓவியங்கள் ஆகின்றன (1998)
- தூண்டில் மீன் (2001)
- வைகறைப் பூக்கள் (1990)
- நினைவுகளின் கோலங்கள் (1993)
- 2001: தூண்டில் மீன்.
- 2001: இலட்சியங்களின் ஊனங்கள் (in People on the Bridge: An Anthology of ASEAN Short Stories; translated into Malay as Harapan Sapuna).
- 2004: சுற்றிப் பார்க்க வந்தவர் (in கண்ணில் தெரியுதுவானம், 2001 and அயலகத் தமிழ் இலக்கியம், 2004).
- 2006: சிங்கை மா. இளங்கண்ணனின் சிறுகதைகள்.
- 2006: பொருத்தம், கன்னிகாதானம், எங்கே போய்விடும் காலம்?
- 2011: குருவிக் கோட்டம்.
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்
தொகு- ஆசியான் எழுத்தாளர் விருது (1982)
- தமிழவேள் விருது (2000)
உசாத்துணை
தொகு- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு