மா. ரா. அரசு
மா. ரா. அரசு (Maa. Raa. Arasu, 1949 - 6. செப்டம்பர். 2020) என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர், பேராசிரியர் ஆய்வளர், இதழியலாளர், பேச்சாளர் ஆவார். இவர் தமிழறிஞர் மா. இராசமாணிக்கனாரின் மகனாவார். 2024 நவம்பரில் இவரது படைப்புகளை தமிழ்நாடு அரசு நாட்டுடமை ஆக்கி, பரிவுத் தொகையாக ரூ 10 இலட்சம் வழங்கியது.[1] [2]
கல்வி
தொகுசிறுவயதிலிருந்து தன் தந்தையாரால் தமிழ் இலக்கியங்களும், வரலாறும் அரசுக்கு அறிமுகமாயின. அதில் ஆர்வமும் உண்டானது. 1975 ஆண்டு தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். வ. உ. சிதம்பரம்பிள்ளை குறித்து ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.[3]
தொழில்
தொகுபச்சையப்பன் அறக்கட்டளை காஞ்சிபுரத்தில் நடத்திய கல்லூரியில் திருத்துநர் பணியில் இணைந்தார். அரசுக்கு தன் அண்ணன் இளங்கோவன் வழியாக இதழியல் அறிமுகம் பெற்றார். அவரின் இதழியல் ஆய்வுகளுக்கு உதவியாக இருந்தார். இதனால் இதழியலில் ஆர்வம் கொண்டார். 1981 ஆம் ஆண்டு பணி மாறுதல் காரணமாக அரசு தஞ்சாவூருக்குச் சென்றார். பின்னர் 1983 இல் தஞ்சாவூரிலும் சென்னையிலும் மா. இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையம் என்ற அமைப்பை நிறுவி இதழியல் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். அதன் மூலம் இதழியலாளர்கள் குறித்த சொற்பொழிவுகளும் கருத்தரங்குகளும் நடத்தபட்டன. இவாறு பனோறு கருத்தரங்குகளை நடத்தினார். அந்த கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை தொகுத்து நூல்களாக வெளியிட்டார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ DIN (2024-11-18). "9 தமிழறிஞா்களின் நூல்கள் நாட்டுடைமை: நூலுரிமைத் தொகை ரூ.90 லட்சம் அளிப்பு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-11-19.
- ↑ "க.ப.அறவாணன், கவிஞர் கா.வேழவேந்தன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் 9 பேர் நூல்கள் நாட்டுடைமை: வாரிசுகளுக்கு உரிமை தொகை". Hindu Tamil Thisai. 2024-11-19. பார்க்கப்பட்ட நாள் 2024-11-19.
- ↑ DIN (2020-09-06). "காலமானார் பேராசிரியர் மா.ரா. அரசு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-11-19.
- ↑ "பேராசிரியர் மா.ரா.அரசு – நேர்காணல்". கமகம். 2020-09-06. பார்க்கப்பட்ட நாள் 2024-11-19.