மிகச்சிறிய உயிரினங்கள்

உலகின் மிகச்சிறிய உயிரினங்கள் எவை என்பதனை அவற்றின் அளவை விளக்கக்கூடிய நீளம், உயரம், திணிவு போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டு தீர்மானிக்கலாம். இதுவரை மிகச்சிறிய உயிரினத்தை அறிவிப்பதில் அறிவியலாளர்களிடையில் உடன்பாடில்லை. ஏனெனில் இன்னும் பல உயிரினங்கள் கண்டறியப்படாது இருக்கலாம். உயிரினங்களைப் பாகுபடுத்துவதிலும், குறிப்பாக தீ நுண்மத்தை (virus) உயிருள்ளதா அல்லது உயிரில்லாததா என பாகுபடுத்துவதில், அறிவியலாளர்களிடையில் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன.

தீ நுண்மத்தைத் தவிர்த்து Mycoplasma genitalium என்ற பக்டீரியாவே இதுவரை கண்டறியப்பட்ட மிகச்சிறிய உயிரினமாகும்.

மிகச்சிறிய நுண்ணங்கிகள்தொகு

மிகச்சிறிய தீ நுண்மம்(வைரசு)தொகு

அறிவியலாளர்கள் பலர் தீ நுண்மத்தை உயிரினமாகக் கருதுவதில்லை. ஏனெனில் இது கலக்கட்டமைப்பைக் கொண்டிராமையாலும் தனக்குத் தானே அனுசேபச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியாமையாலுமாகும். சில அறிவியலாளர்கள் இதனை உயிரினங்களுள் அடக்குவர். இதன்படி உலகில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள மிகச்சிறிய தீ நுண்மம் போர்ஸைன் சேர்கோவைரஸ் ஆகும்.

Mycoplasma genitaliumதொகு

இதுவே இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகச்சிறிய உயிரினமாகும். இது சில குரங்கு வகைகளின் சுவாசத்தொகுதில் வாழ்வதாகும். இது 200 தொடக்கம் 300 nm(நனோ மீற்றர்) நீளமானது. இது ஏனைய பக்றீரியாக்களை விட மிகச்சிறியதாகும்.

மிகச்சிறிய மெய்க்கருவுயிரிதொகு

 
மிகச்சிறிய மெய்க்கருவுயிரி

பிராஸினோபைற்று அல்கா வகையின் ஒஸ்றியோகொக்கஸ் இன அல்காவே உலகில் இதுவரை அறியப்பட்ட மிகச்சிறிய மெய்க்கருவுயிரி ஆகும். இது 0.8 μm (மைக்ரோ மீற்றர்) மட்டுமே நீளமுடையது.

மிகச்சிறிய விலங்குகள்தொகு

மிகச்சிறிய மூட்டுக்காலிதொகு

உலகில் மிகச்சிறிய மூட்டுக்காலியாக Stygotantulus stocki என்ற ஒட்டுண்ணி உயிரினம் விளங்குகின்றது. இது 94 µm (0.0037 அங்குலம்) நீளமானதேயாகும். இது கிறஸ்டேசியன் (crustacean) என்ற இறால்கள் போன்ற உயிரினக் கூட்டத்தில் அடங்குவதாகும்.

மிகச்சிறிய பூச்சிதொகு

Dicopomorpha echmepterygis என்ற ஒட்டுண்ணி குளவி வகையின் ஆணினமே மிகச்சிறிய பூச்சியாகும். இது 139 μm அளவே நீளமுடையது. இதன் பெண்ணினம் 40 சதவீதம் பெரியதாகும்.

மிகச்சிறிய முள்ளந்தண்டுளிதொகு

 
ஓர் நாணயத்தின் மேலே காணப்படும் Paedophryne amauensis இனத்தவளை. இதுவே உலகின் மிகச்சிறிய முள்ளந்தண்டுளியாகும்.

இதுவரை அறியப்பட்ட மிகச்சிறிய முள்ளந்தண்டுளி Paedophryne amauensis என்ற பபுவா நியுகினியில் காணப்படும் தவளையினமாகும். இது 7.0 தொடக்கம் 8.0 mm நீளத்தைக் கொண்டதாகும்.

மிகச்சிறிய தாவரம்தொகு

மிகச்சிறிய பூக்குந்தாவரம்தொகு

 
மிகச்சிறிய பூக்குந்தாவரம்

"டக்வீட்ஸ்" என்ற வொல்ஃபியா இனத்தாவரமே மிகச்சிறிய பூக்குந்தாவரமாகும். இதன் அதிகூடிய நிறை 150 மைக்ரோ கிராம்களாகும். இது 300 µm அளவே நீளமுடையது.