மிசிங்னம்பர்
மிசிங்னம்பர் (MissingNo., சப்பானியம்: けつばん) என்பது பொக்கெமொன் சிவப்பு, நீலம் என்பவற்றில் காணப்படும் ஒரு பொக்கெமொன் இனமாகும்.[1] பொக்கெமொன் விளையாட்டிலே காணப்படாத பொக்கெமொன் இனங்களை அணுக முயற்சிக்கும்போதே மிசிங்னம்பர் தோன்றும். பொக்கெமொன் சிவப்பு, நீலம் என்பனவற்றில் காணப்படும் உள்ளாட்ட நிகழ்வுகளின் செய்நிரலாக்கம் காரணமாக விளையாடுபவர் ஒரு தடுமாற்றத்தின் மூலமாக மிசிங்னம்பரை எதிர்கொள்ள முடியும். மிசிங்னம்பரானது முதன்முதலாக மே 1999இல் நின்டெண்டோவினால் ஆவணப்படுத்தப்பட்டது.[2]
பொக்கெமொன் - மிசிங்னம்பர் | |
எண் | 000 |
---|---|
இடம் | கண்டோ |
நிறம் | பொருத்தமில்லை |
உயரம் | 10'0" |
எடை | 3,507.2 இறாத்தல் |
வகை | பறவை/பொது |
தாக்குதல் வகை | தடுமாற்றம் |
படிவளர்ச்சி | |
படிவளர்ச்சியடைந்த இனம் | பொருத்தமில்லை |
படிவளர்ச்சியடையும் இனம் | பொருத்தமில்லை |
பொக்கேடெக்சு | |
முன்னையது | பின்னையது |
அர்சைசு | புல்பசூர் |
மிசிங்னம்பரை எதிர்கொள்வது வரைவியல் வழுக்களை ஏற்படுத்துவதுடன் போட்டியாளரின் பொருட்பட்டியலில் ஆறாவதாக இருப்பதை பாரிய அளவில் படியெடுக்கச் செய்யும். பொக்கெமொன் சிவப்பு, நீலம் என்பனவற்றில் மிசிங்னம்பரின் தோற்றத்தை புகழ் பெற்ற காணொளியாட்டத் தடுமாற்றங்களுள் ஒன்றாக ஐ. சி. என். குறிப்பிட்டுள்ளது.
வரலாறு
தொகுமிசிங்னம்பரைத் தோன்றச் செய்யும் நிகழ்வுகள் பற்றி நின்டெண்டோ பவரின் மே 1999 இதழில் முதன்முதலாகப் பதிவு செய்யப்பட்டது.
தோன்றச் செய்யும் விதம்
தொகுசில நிகழ்வுகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம் மிசிங்னம்பரைத் தோன்றச் செய்ய முடியும். முதலில், பொக்கெமொனைக் கைப்பற்றுவதற்கான உள்ளாட்டப் பயிற்சியைப் பார்த்த பிறகு, பறக்கும் தன்மை கொண்ட பொக்கெமொன் மூலம் சீனாபாத் தீவுக்குப் பறக்க வேண்டும். பிறகு, நீந்தும் தன்மை கொண்ட பொக்கெமொனின் மூலம் தீவின் கிழக்குக் கரையில் மேலும் கீழும் நீந்துவதனூடாக மிசிங்னம்பரை எதிர்கொள்ள முடியும்.