மிசோரம் மக்களவைத் தொகுதி

(மிசோரம் மக்களவை உறுப்பினர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மிசோரம் மக்களவைத் தொகுதி (Mizoram Lok Sabha constituency) என்பது வடகிழக்கு இந்திய மாநிலமான மிசோரத்தின் ஒரேயொரு மக்களவைத் (இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை) தொகுதி ஆகும். இது மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இந்த தொகுதி பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மிசோ ஒன்றியக் கட்சியைச் சேர்ந்த சாங்கிலியானா ஆவார், இவர் 1972 சனவரி 21 அன்று ஒன்றியப் பிரதேசமாக மிசோரம் மாறியபோது ஐந்தாவது மக்களவையில் இந்தத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2][3] 1987 பெப்ரவரி 20 அன்று, மிசோரம் இந்தியாவின் ஒரு மாநிலம் ஆனது.[2] 2024 தேர்தலில், இந்தத் தொகுதியின் உறுப்பினராக சோரம் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரிச்சார்டு வன்லால்மங்கையாகா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மிசோரம்
MZ-1
மக்களவைத் தொகுதி
இந்தியாவில் மிசோரம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்மிசோரம்
நிறுவப்பட்டது1972
மொத்த வாக்காளர்கள்8,56,364[1]
ஒதுக்கீடுபட்டியல் பழங்குடிகள்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
ரிச்சார்ட் வன்லால்மங்கையாகா
கட்சிஜோரம் மக்கள் இயக்கம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் உறுப்பினர் கட்சி
1971 சங்கிலியானா[3]   மிசோ யூனியன்
1977 ஆர். ரொத்துவாமா   சுயேச்சை
1980
1984 லால்துஹோமா   இந்திய தேசிய காங்கிரசு
1989 சி. சில்வேரா
1991
1996
1998 எச். லல்லுங்முவானா[4]   சுயேச்சை
1999 வன்லால்சாவ்மா
2004   மிசோ தேசிய முன்னணி
2009 சி. எல். ருவாலா   இந்திய தேசிய காங்கிரசு
2014
2019 சி. லால்ரொசாங்கா[5]   மிசோ தேசிய முன்னணி
2024 ரிச்சார்டு வன்லால்மங்கைகா   ஜோரம் மக்கள் இயக்கம்

மேற்கோள்கள்

தொகு
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf பரணிடப்பட்டது 26 மே 2024 at the வந்தவழி இயந்திரம்
  2. 2.0 2.1 "History of Mizoram". தேசியத் தகவல் மையம் (இந்தியா). Retrieved 25 October 2014.
  3. 3.0 3.1 Ahuja, M. L. (1 January 2005). General elections in India: electoral politics, electoral reforms, and political parties. New Delhi: Icon Publications Pvt. Ltd. p. 323. ISBN 9788188086221.
  4. "Mizoram polls today". தி டெலிகிராஃப். 11 April 2014 இம் மூலத்தில் இருந்து 15 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140415113633/http://www.telegraphindia.com/1140411/jsp/frontpage/story_18179219.jsp#.VFEL13tv99E. 
  5. "General Election 2019". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 22 October 2021.

வெளி இணைப்புகள்

தொகு

23°22′N 92°00′E / 23.36°N 92.00°E / 23.36; 92.00