மிச்செல் பிரான்ச்

அமெரிக்கப் பாடகி-பாடலாசிரியர் மற்றும் கிட்டார் கலைஞர்

மிச்செல் பிரான்ச் (Michelle Branch, பிறப்பு: சூலை 2, 1983) என்பவர் ஒரு அமெரிக்க பாடகரும், பாடலாசிரியரும், கிதார் கலைஞரும் ஆவார்.

மிச்செல் பிரான்ச்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

பிரான்ச் சூலை 2, 1983 அன்று அரிசோனாவின் செடோனாவில் டேவிட் மற்றும் பெக்கி பிரான்ச்க்கு பிறந்தார்.[1] [2] இவரது தந்தை ஐரிய வம்சாவளியைச் சேர்ந்தவர், இவரது தாயார் டச்சு இந்தோனேசிய பிரெஞ்சு வம்சாவளியைச் சேர்ந்தவர்.[1][3] இவரது தாய்வழி பாட்டி இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டார். போருக்குப் பிறகு அவர் ஒலந்துக்குச் சென்றார், அங்கு இவரது தாய் பிறந்தார். குடும்பம் நெதர்லாந்திலிருந்து அரிசோனாவுக்கு குடிபெயர்ந்தபோது இவரது தாயாருக்கு ஐந்து வயது.[3][4]இவரது உடன்பிறந்தவர்களில் டேவிட் என்ற மூத்த சகோதரரும், நிக்கோல் என்ற இளைய சகோதரியும் அடங்குவர்.

இவர் மூன்று வயதில் பாட ஆரம்பித்தார். தனது எட்டு வயதில் வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தில் குரல் பாடத்தில் சேர்ந்தார். தனது 14 வது பிறந்தநாளில் தனது முதல் கிதாரைப் பெற்றார். கிடாரைப் பெற்ற ஒரு வாரத்தில் தனது முதல் பாடலான ஃபாலன் இயற்றினார். அவர் ஆரம்பத்தில் செடோனா ரெட் ராக் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார், ஆனால் தனது உயர்நிலைப் பள்ளிக் கல்வியின் கடைசி இரண்டு வருடங்களில் இவர் தனது இசை வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.

வாழ்க்கை தொகு

இவரது பெற்றோர் செடோனாவில் உள்ளூர் நிகழ்ச்சிகளை பதிவு செய்ய உதவினார்கள், பின்னர் இவரது சுய ஆல்பமான ப்ரோக்கன் பிரேஸ்லெட்டுக்கு நிதியளித்தனர். திசம்பர் 1999 இல், இவர் தனது இரண்டு பாடல்களை ரோலிங் ஸ்டோன் இணையதளத்தில் வெளியிட்டார், இது பாப் ராக் இசைக்குழு ஹான்சன் மற்றும் முன்னாள் ரோலிங் ஸ்டோன் எழுத்தாளர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் இசை பதிவு தயாரிப்பாளரான ஜெஃப் ரப்பன் ஆகிய இருவரின் கவனத்தையும் ஈர்த்தது.[1] சூன் 2000 இல், சொந்தமாக தயாரித்த ப்ரோகன் பிரேஸ்லெட், இவர் 14 வயதில் இருந்து எழுதிய பாடல்களின் தொகுப்பு.[3]

2000களின் முற்பகுதியில், இவர் அதிகம் விற்பனையான தி ஸ்பிரிட் ரூம் மற்றும் ஹோட்டல் பேப்பர் ஆல்பங்களை வெளியிட்டார். இவர் 2002 ஆம் ஆண்டு தி கேம் ஆஃப் லவ் என்ற தனிப்பாடலுக்காக சிறந்த பாப் ஒத்துழைப்புக்கான கிராமி விருதை வென்றார். ஒரு தனி ஒலிப்பதிவு கலைஞராக, 2001 இன் தொடக்கத்தில் மடோனாவின் மேவரிக் லேபிளில் கையெழுத்திட்டார், அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவரது முதல் ஆல்பமான தி ஸ்பிரிட் ரூமை வெளியிட்டார். 2005 ஆம் ஆண்டில், அவர் ஜெசிகா ஹார்ப் உடன் இணைந்து ரெக்கர்ஸ் என்ற கிராமிய இசை குழுவை உருவாக்கினார், மேலும் கிராமி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட லீவ் தி பீசஸ் என்ற தனிப்பாடலைத் தயாரித்தார். மூன்றாவது தனி ஆல்பமான ஹோப்லெஸ் ரொமாண்டிக் 2017 இல் வெளியிட்டார். அவரது நான்காவது ஸ்டுடியோ ஆல்பமான தி ட்ரபிள் வித் ஃபீவர் 2022 இல் வெளியிடப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

அவர் மே 23, 2004, இல் மெக்சிகோவில் டெடி லாண்டவ்வை (பி. 1964) திருமணம் செய்து கொண்டார்.[2][5][6] ஆகத்து 2005 இல் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார்.[7][8] இவர்களின் விவாகரத்து நவம்பர் 2015 இல் இறுதி செய்யப்பட்டது.[9][10]

2015 ஆம் ஆண்டில், ஒரு கிராமி விருந்தில் பேட்ரிக் கார்னியை சந்தித்து, இருவரும் டேட்டிங் செய்யத் தொடங்கினர்.[11][12] 2017 இல் நாஷ்வில்லில் உள்ள கார்னியின் வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.[13][14] இருவருக்கும் ஒரு மகன் உள்ளார், அவர் ஆகஸ்ட் 2018 இல் பிறந்தார்.[15][16] தம்பதியினர் நாஷ்வில்லில் தங்கள் குழந்தைகள் மற்றும் இரண்டு ஐரிஷ் ஓநாய் நாய்களுடன் வசித்து வந்தனர்.[17] இருவருக்கும் ஏப்ரல் 20, 2019 அன்று திருமணம் நடந்தது.[18] டிசம்பர் 2020 இல், தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதை அவள் வெளிப்படுத்தினார்.[19] ஆகஸ்ட் 2021 இல், அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.[20] பிப்ரவரி 2022 இல், அவர் ஒரு மகளை பெற்றெடுத்தார்.[21] ஆகஸ்ட் 11, 2022 அன்று, துரோகம் செய்ததாகக் குற்றம் சாட்டி, கார்னியிடமிருந்து பிரிவதாக அறிவித்தார்.[22] கார்னியை அறைந்ததாகக் அவர் அடுத்த நாள் கைது செய்யப்பட்டார்.[23] ஆகஸ்ட் 24 அன்று அரசின் கோரிக்கையின் பேரில் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதாக பில்போர்டு தெரிவித்தது.[24] அடுத்த மாதம் விவாகரத்து நடவடிக்கைகளை நிறுத்திவைக்க இருவரும் மனு தாக்கல் செய்தனர்.[25]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Fried, Paul. "Michelle Branch". Red Rock Review.com. Archived from the original on November 27, 2013. பார்க்கப்பட்ட நாள் December 2, 2009.
  2. 2.0 2.1 Official bio, archived from the original on March 15, 2010, பார்க்கப்பட்ட நாள் December 2, 2009
  3. 3.0 3.1 3.2 Mike Kai (November 25, 2003). "A Conversation with Michelle Branch". Asianconnections.com. Archived from the original on February 6, 2016.
  4. Branch, Michelle (August 2, 2017). "My mother didn't speak English when she moved to the United States from The Netherlands at 5 yrs old. This is so terrifying. #StephenMiller". @michellebranch (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் May 25, 2020.
  5. Tecson, Brandee (March 14, 2005), Michelle Branch No Longer Wrecking Homes, MTV Network
  6. Susman, Gary (July 1, 2004), "Game of Love", Entertainment Weekly, archived from the original on September 8, 2014, பார்க்கப்பட்ட நாள் December 2, 2009
  7. "Michelle Branch Has a Baby Girl", People, August 3, 2005, archived from the original on March 29, 2010, பார்க்கப்பட்ட நாள் December 2, 2009
  8. "Michelle Branch Has 'Nothing But Love' for Patrick Carney, Says Marriage Is 'Changing by the Hour'". Peoplemag (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-15.
  9. Ishler, Julianne (February 19, 2015). "Michelle Branch Divorce: Splits With Teddy Landau, Husband Of 11 Years". Hollywoodlife.com. Archived from the original on August 5, 2017. பார்க்கப்பட்ட நாள் October 2, 2015.
  10. "Michelle Branch -- Divorce Finalized ... She's Keeping Her Music". Tmz.com.
  11. "About" (in en). Michelle Branch. March 11, 2015 இம் மூலத்தில் இருந்து June 24, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210624220757/http://www.michellebranch.com/content/about. 
  12. "Michelle Branch & New Boyfriend Patrick Carney Made an Excellent Pop-Rock Album: 'It Was Us Against The World'". Billboard. பார்க்கப்பட்ட நாள் March 25, 2017.
  13. Joseph Hudak, "Michelle Branch's Second Act", Rolling Stone March 23, 2017, p. 14.
  14. Hudak, Joseph (March 14, 2017). "Inside Michelle Branch's Second Act". Rolling Stone (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் May 25, 2020.
  15. "All She Wanted! Michelle Branch and Patrick Carney Welcome Son Rhys James – See His First Photo" (in en). People. https://people.com/parents/michelle-branch-patrick-carney-welcome-son-rhys-james/. 
  16. "Michelle Branch and Patrick Carney Welcome Son Rhys James". www.msn.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் August 31, 2018.
  17. "Michelle Branch on Instagram: "Dog day is coming to an end...but is it ever really over? #DarlaAndCharlotte"". Instagram (in ஆங்கிலம்). Archived from the original on December 26, 2021. பார்க்கப்பட்ட நாள் May 25, 2020.
  18. "Michelle Branch Marries the Black Keys' Patrick Carney in New Orleans". PEOPLE.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் May 25, 2020.
  19. "Michelle Branch Opens up After Suffering Miscarriage, Thanks Husband Patrick Carney for Support". Billboard. December 27, 2020.
  20. "Michelle Branch announces pregnancy months after suffering miscarriage". EW.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் August 16, 2021.
  21. Vanessa Etienne; Jen Juneau (February 4, 2022). "Michelle Branch and Patrick Carney Welcome Second Baby Together, Daughter Willie Jacquet". People. பார்க்கப்பட்ட நாள் May 12, 2022.
  22. Caplan, Anna Lazarus; Chiu, Melody (August 11, 2022). "Michelle Branch Separates from Patrick Carney After 3 Years of Marriage: 'I Am Totally Devastated'". People (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் August 12, 2022.
  23. Legaspi, Althea (August 12, 2022). "Michelle Branch Arrested for Domestic Assault; Splits With Patrick Carney". Rolling Stone. பார்க்கப்பட்ட நாள் August 12, 2022.
  24. Aniftos, Rania (24 August 2022). "Michelle Branch Domestic Assault Case Dismissed". Billboard.
  25. "Michelle Branch and Patrick Carney Suspend Divorce Proceedings for 6 Months to Work on Marriage". Peoplemag (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிச்செல்_பிரான்ச்&oldid=3892049" இலிருந்து மீள்விக்கப்பட்டது