மிடில்பேக்கைட்டு

மிடில்பேக்கைட்டு (Middlebackite) என்பது Cu2C2O4(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். கரிமக் கனிமமான இது முதலில் ஜூன் 1990 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் தெற்கு ஆத்திரேலியாவில் உள்ள அயர்ன் மோனார்க்கு கற்சுரங்கத்தில் இருந்த ஒரு கற்பாறைக்குள் கண்டுபிடிக்கப்பட்டது.[1] ஆத்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீட்டர் எலியட் 25 ஆண்டுகளுக்குப் பிறகு கனிமத்தின் கட்டமைப்பைக் கண்டறிந்தார். மின்மவிசைப் பெருக்கமூட்டப் பயன்படும் மின் காந்த விசை இணைவமைவு கதிர்வீச்சைப் பயன்படுத்தி ஒற்றை-படிக எக்சுகதிர் விளிம்பு வளைவு மூலம் இதன் படிக அமைப்பை தீர்மானித்தார். மிடில்பேக் வரம்பில் கனிமம் கிடைத்த காரணத்தால் எலியட் கனிமத்திற்கு மிடில்பேக்கைட்டு என்று பெயரிட்டார்.[2] 2018 ஆம் ஆண்டில், இத்தாலியில் உள்ள பீம்மே பள்ளத்தாக்கில் மிடில்பேக்சைட்டு கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஆராய்ச்சியில் பீம்மெயிட்டு என்ற புதிய கனிமமும் கண்டுபிடிக்கப்பட்டது..[3]

மிடில்பேக்கைட்டு
Middlebackite
பொதுவானாவை
வகைகரிமக் கனிமம்
வேதி வாய்பாடுCu2C2O4(OH)2
இனங்காணல்
நிறம்மழுங்கலான நீலவண்னம்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு

பன்னாட்டு கனிமவியல் சங்கம் மிடில்பேக்கைட்டு கனிமத்தை Mbk[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

கிடைக்கும் இடங்கள்

தொகு
  • ஆத்திரேலியா- தெற்கு ஆத்திரேலியாவின் ஐர் தீபகற்பத்தில் உள்ள அயர்ன் மோனார்க்கு கற்சுரங்கம்
  • இத்தாலி-கேரனோ நகராட்சிக்கு அருகிலுள்ள பாசோ டி சான் லுகானோ

மேற்கோள்கள்

தொகு
  1. "Middlebackite: Middlebackite mineral information and data". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2017-09-01.
  2. "Carbon Mineral Challenge Update Spring 2016: Four New Minerals Found". Carbon Mineral Challenge (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-09-01.
  3. Demartin, Francesco; Campostrini, Italo; Ferretti, Paolo; Rocchetti, Ivano (2018). "Fiemmeite Cu2(C2O4)(OH)2∙2H2O, a New Mineral from Val di Fiemme, Trentino, Italy" (in en). Minerals 8 (6): 248. doi:10.3390/min8060248. 
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிடில்பேக்கைட்டு&oldid=4133488" இலிருந்து மீள்விக்கப்பட்டது