மிதவை உயிரியல்
மிதவை உயிரியல் (Planktology) என்பது நீர்நிலைகளில் வாழும் பலவித மிதவைவாழிகள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள் பற்றி விளக்குவதாகும். மிதவை உயிரியல் பிரிவானது முதன்மை உற்பத்தி, ஆற்றல் ஓட்டம், கார்பன் சுழற்சி ஆகிய தலைப்புகளை உள்ளடக்கியது.
மிதவை உயிரிகள் உயிரியல் பம்ப் எனப்படும் அற்புதமான வேலையைச் செய்கிறது, அதாவது கடல் சூழல் மண்டலத்தில் உள்ள மிதவை உயிரிகள் கார்பனை கடலின் மேல் பகுதியில் உள்ள சூரிய ஒளி மண்டல அடுக்கிலிருந்து கடலின் ஆழத்திற்கு கொண்டு செல்கிறது. இச்செயலின் மூலம் கரியமிலவாயு கடலின் ஆழத்திற்குச் செல்வதால் புவி சூடாதல் குறைக்கப்பட ஒரு காரணியாகிறது. நவீன மிதவை உயிரியலானது சறுக்கி நகரும் உயிரிகளின் நடத்தை அம்சங்களை விளக்குகிறது.
மிதவை உயிரியலின் சில பிரிவுகள் நீண்டகால சுற்றுச்சூழல் ஆய்வுமையங்களில் ஆன்லைன் மூலம் பொதுமக்களின் பங்களிப்பை அனுமதிக்கிறது.