மிது குரானா
மருத்துவர் மிது குரானா (Dr. Mitu Khurana) இந்தியாவின் தில்லியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவராவார். இந்தியாவில் பெண் சிசுக் கொலைக்கு எதிராக செயல்பட்டார். கணவர் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு தொடுத்து சட்டப்படியான நடவடிக்கை எடுத்தவர் என்பதால் இவர் பரவலாக அறியப்பட்டார். இவருடைய அனுமதியின்றி மீயொலி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை குடும்பத்தினர் அறிந்து கொண்டதாகவும், பெண் குழந்தைகள் எனத் தெரிந்தவுடன் இரட்டைக் குழந்தைகளான இரு மகள்களையும் கருக்கலைப்பு செய்யும்படி அழுத்தம் கொடுத்ததாகவும், பால் தெரிவு கருக்கலைப்பு செய்ய மறுத்த காரணத்தினால் வீட்டு வன்முறையில் தன்னை அவர்கள் கொடுமைப்படுத்தியாகவும் குடும்பத்தினர் மீது குரானா குற்றம் சுமத்தினார்.[1]
மரு. மிது குரானா | |
---|---|
இறப்பு | இந்தியா | மார்ச்சு 19, 2020
தேசியம் | இந்தியர் |
பணி | குழந்தை மருத்துவர் |
அறியப்படுவது | பால் தெரிவு கருக்கலைப்புக்கு எதிரான செயற்பாட்டாளர். |
வரலாறு
தொகு2008 ஆம் ஆண்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியபோது மிது குரானா முதன்முதலில் ஊடகங்களில் இடம்பெற்றார்.[2]
மிது குரானா தெரிவித்த குற்றச் சாட்டுகள்
தொகு- கணவர் கமல் குரானாவும் அவர் குடும்பத்தினரும் என்னுடைய அனுமதியின்றி கருவிலுள்ள குழந்தைகளின் பாலினம் கண்டறியும் சோதனை மூலம் கருவிலிருப்பது ஆணா பெண்ணா என்பதை அறிந்து கொண்டார்கள்.
- 2005 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் எனக்கு ஏற்பட்ட வயிற்று வலியை காரணம் காட்டி கணவரும் அவரது குடும்பத்தினரும் தில்லியிலுள்ள செய்ப்பூர் கோல்டன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள மருத்துவமனை ஊழியர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு எனக்குத் தெரியாமல் மீயொலி பரிசோதனைக்கு என்னை உட்படுத்தி கருவிலுக்கும் குழந்தைகளின் பாலினத்தை அறிந்து கொண்டுள்ளனர்.
- மருத்துவமனையிலிருந்து திரும்பியது முதல் காரணம் எதையும் கூறாமல் கருக்கலைப்பு செய்யும்படி அழுத்தம் கொடுத்தார்கள்.
- இரண்டு பெண் குழந்தைகளை வளர்க்க இயலாது என்றும் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது மிகக்கடினம் என்றும் காரணத்தைக் கூறிய கணவர் இரண்டு குழந்தைகளில் ஒன்றையாவது கொன்று விடவேண்டும் என்று கருக்கலைப்புக்கு அழுத்தம் கொடுத்தார்.[3]
- உணவு, மருந்து எதையும் கொடுக்காமல் அறைக்குள் அடைத்து வைத்தல், மாடிப்படிகளிலிருந்து கீழே தள்ளி விடுதல் போன்ற குடும்ப வன்முறைகளுக்கு என்னை ஆளாக்கினார்[4] என்று கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது மிது குரானா பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
இறுதியில் மிது குரானா தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து தப்பித்து பெற்றோருடன் வசிக்க வீடு திரும்பினார். இரட்டை மகள்களை இரண்டு மாதங்களுக்கு முன்கூட்டியே பெற்றெடுத்தார்.[5]
இதய அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல்களால் மிது குரானா 2020 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் இறந்தார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ induCityMakers (19 March 2020). "@mitukhurana is no more. She left for heavenly abode today. The Family Court Judge Ms. Barkha Gupta (Rohini Courts) was indeed very cruel. Even when Mitu couldn't walk to the court, Mitu was asked by her to be in the court. Justice was denied to her" (Tweet).
- ↑ Khare, Vineet (8 October 2015). "India activist to fight sex determination ruling". bbc.com. BBC Online. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
- ↑ Chamberlain, Gethin (23 November 2008). "Where a baby girl is a mother's awful shame". theguardian.com. Guardian News & Media Limited. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
- ↑ Morrison, Sarah; Buncombe, Andrew (11 August 2013). "'My husband tried to force me to abort my twin girls': Doctor's charge inflames India's fight for gender equality". independent.co.uk (in ஆங்கிலம்). The Independent. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
- ↑ Izri, Touria. ""It's a Girl" documentary explores gendercide in China and India | The Star". thestar.com (in ஆங்கிலம்). Toronto Star Newspapers Ltd. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
- ↑ induCityMakers (19 March 2020). "@mitukhurana is no more. She left for heavenly abode today. The Family Court Judge Ms. Barkha Gupta (Rohini Courts) was indeed very cruel. Even when Mitu couldn't walk to the court, Mitu was asked by her to be in the court. Justice was denied to her" (Tweet).