மிதேசு இரமேசுபாய் படேல்
மிதேசு இரமேசுபாய் படேல் (Mitesh Rameshbhai Patel) பாகாபாய் என்று அழைக்கப்படுபவர் இந்திய அரசியல்வாதியும், குசராத்தின் வசாத்தில் அமைந்துள்ள இலட்சுமி புரதத் தயாரிப்புகள் தனியார் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநரும் ஆவார். இவர் 2019 மற்றும் 2024 இந்தியப் பொதுத் தேர்தல்களில் குசராத்து ஆனந்த் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவை உறுப்பினராகப் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 197,718 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் மேனாள் அமைச்சராக இருந்த பாரத்சிங் மாதவ்சிங் சோலங்கியை தோற்கடித்தார்.[2][3]
மிதேசு இரமேசுபாய் படேல் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 | |
தொகுதி | ஆனந்த் |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 23 மே 2019 – மே 2024 | |
முன்னையவர் | திலிப் படேல் |
தொகுதி | ஆனந்த் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சரசா, ஆனந்த், குசராத்து, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | தீபாலிபென் மிதேசு படேல் |
பெற்றோர் |
|
மூலம்: [1] |
அரசியல்
தொகுபடேல் தனது இளம் வயதிலிருந்தே பாஜகவுடன் தொடர்பிலிருந்து வருகிறார். இவர் பல ஆண்டுகளாக பாஜகவின் ஆனந்தின் பொருளாளராக இருந்து வருகிறார். இங்குக் கட்சியை வலுப்படுத்தக் கள அளவில் தீவிரமாகப் பணியாற்றினார். ஆனந்த்தின் கூட்டுறவுச் சங்கங்களுடன் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றினார்.
நாடாளுமன்றக் குழுக்கள்
தொகு1. உறுப்பினர், நாடாளுமன்ற நிலைக்குழு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு, பொது விநியோகம்
2. உறுப்பினர், நாடாளுமன்ற நிலைக்குழு, பெட்ரோலியம், இயற்கை வாயு
3. நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் தொடர்பான ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Anand Election Results 2019: BJP Mitesh Rameshbhai Patel won by 1.97 lakh votes and will be Anand MP". Times Now. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Anand Lok Sabha Election Result 2019: BJP's Patel Mitesh Rameshbhai defeats Congress's Bharatbhai Madhavsinh Solanki". DNA India. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 15 November 2021.
- ↑ "Amit Shah and Anand MP Mitesh Patel amongst first time MPs elected from Gujarat". NDTV. 28 May 2019. பார்க்கப்பட்ட நாள் 16 November 2021.