மினட் த சில்வா

இலங்கை கட்டிடக் கலைஞர்

மினட் த சில்வா (Minnette de Silva ( சிங்களம் : මිනට් ද සිල්වා  ; 1 பிப்ரவரி 1918 - 24 நவம்பர் 1998) என்பவர் இலங்கையின் நவீன கட்டடக்கலை பாணியின் முன்னோடியாகக் கருதப்படுபவரும், பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடக் கலைஞர் ஆவார். [2] [3] த சில்வா இலங்கை கட்டிடக்கலை கல்வி நிறுவனத்தின் உறுப்பினராக இருந்தவர்.

மினட் த சில்வா
தனிப்பட்ட விவரங்கள்
நாட்டினம்இலங்கையர்
பிறப்பு(1918-02-01)1 பெப்ரவரி 1918
இலங்கை, கண்டி
இறப்பு24 நவம்பர் 1998(1998-11-24) (அகவை 80)
இலங்கை, கண்டி
பாடசாலைசர் ஜாம்செட்ஜி ஜீஜ்பாய் கலைப்பள்ளி, பம்பாய்
கட்டடக்கலை சங்க கட்டிடக்கலை பள்ளி, லண்டன்
பணி
திட்டங்கள்கண்டி கலை மையம்
விருதுகள்எஸ்.எல்.ஐ.ஏ தங்கப் பதக்கம் (1996)[1]

இலங்கையின் முதல் பெண் கட்டிடக் கலைஞர் த சில்வா ஆவார். மேலும் 1948 ஆம் ஆண்டில் பிரித்தானியக் கட்டிடக்கலைஞர்களுக்கான அரச சங்கத்தின் கூட்டாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசிய பெண்ணும் இவர் ஆவார். மேலும் டி சில்வா 1947 இல் நவீன கட்டிடக்கலை சர்வதேச பேராயத்தின் ( Congrès Internationaux d'Architecture Moderne) முதல் ஆசிய பிரதிநிதியாகவும், மார்க் என்ற கட்டடக்கலை இதழின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தார். இவரது வாழ்க்கையின் பிற்காலத்தில், கட்டிடக்கலைக்கு இவர் செய்த பங்களிப்புக்காக SLIA தங்கப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது, குறிப்பாக 'வெப்பமண்டல பகுதிக்கக்களில் பிராந்திய நவீனத்துவத்தை' வளர்ப்பதற்கான இவரது முன்னோடி பணிகளுக்காக இந்த பதக்கம் வழங்கப்பட்டது.

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மினட்_த_சில்வா&oldid=3046478" இலிருந்து மீள்விக்கப்பட்டது