மினா எல் ஆம்மணி

மினா எல் ஆம்மணி (ஆங்கில மொழி: Mina El Hammani) (பிறப்பு: 29 நவம்பர் 1993) என்பவர் எசுப்பானிய நாட்டு நடிகை ஆவார். இவர் நெற்ஃபிளிக்சு தொடரான எலைட் என்ற தொடரில் 'நதியா' என்ற வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

மினா எல் ஆம்மணி
பிறப்பு29 நவம்பர் 1993 (1993-11-29) (அகவை 31)
மத்ரித், எசுப்பானியா
தேசியம்எசுப்பானியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2014–இன்று வரை

வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

இவர் 29 நவம்பர் 1993 ஆம் ஆண்டில் எசுப்பானியா நாட்டின் தலைநகரமான மத்ரித்தில் பிறந்து வளர்ந்தார்.[1][2] இவரது குடும்பம் மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்தது.[3] இவர் தனது நடிப்புத் தொழிலை 2014 இல் தொடங்கினார்.

இவரது முதல் தொடரான 'அமினாவாக சென்ட்ரோ மடிகோ' என்ற தொடர் 2015 இல் வெளியானது. அதை தொடர்ந்து எல் பிரான்சிப் (2015-2016), லா க்யூ சே அவெசினா (2016) போன்ற தொடர்களில் நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு தொடரான நெற்ஃபிளிக்சு தொடரான எலைட் என்ற தொடரில் நதியா என்ற இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு இந்த தொடர் உலகளவில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "New Netflix drama 'Elite' explores Islamophobia in Europe". Arab News. 6 October 2018. http://www.arabnews.com/node/1383426/art-culture. 
  2. "Can You Guess The Singer Mina El Hammani Listens To On The Sets Of Her Netflix Show?". Vogue. 17 February 2019. https://en.vogue.me/culture/mina-el-hammani-gears-up-for-a-second-season-of-netflix-series-elite/. 
  3. "Mina El Hammani ('Élite'): "Me llegan muchos mensajes de chicas árabes que quieren ser actrices"". FormulaTV. பார்க்கப்பட்ட நாள் 9 December 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மினா_எல்_ஆம்மணி&oldid=3396193" இலிருந்து மீள்விக்கப்பட்டது