எலைட் (ஆங்கில மொழி: Elite) என்பது அக்டோபர் 5, 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் எசுப்பானிய நாட்டு பரபரப்பூட்டும் விடலைப் பருவ தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் கார்லோஸ் மான்டெரோ மற்றும் டாரியோ மெட்ரோனா ஆகியோரால் நெற்ஃபிளிக்சு என்ற ஓடிடி தளத்திற்க்காக உருவாக்கப்பட்டது.[1][2]

எலைட்
வகை
உருவாக்கம்
  • கார்லோஸ் மான்டெரோ
  • டாரியோ மெட்ரோனா
நடிப்பு
பிண்ணனி இசைலூகாஸ் விடல்
நாடுஎசுப்பானியா
மொழிஎசுப்பானியம்
பருவங்கள்5
அத்தியாயங்கள்40
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
  • கார்லோஸ் மொன்டெரோ
  • டாரியோ மட்ரோனா
  • டியாகோ பெடன்கோர்
  • இனக்கி ஜூரிஸ்டி
தயாரிப்பாளர்கள்பிரான்சிஸ்கோ ராமோஸ்
ஒளிப்பதிவு
  • டேனியல் சோசா செகுரா
  • ரிக்கார்டோ டி கிரேசியா
தொகுப்பு
  • அசென் மார்சேனா
  • இறேனே ப்ளேகுவா
ஓட்டம்41-59 நிமிடங்கள்
10-15 நிமிடங்கள் (சிறுகதைகள்
தயாரிப்பு நிறுவனங்கள்ஜீட்டா தயாரிப்புகள்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பு
அலைவரிசைநெற்ஃபிளிக்சு
ஒலிவடிவம்டால்பி டிஜிட்டல் 5.1
ஒளிபரப்பான காலம்5 அக்டோபர் 2018 (2018-10-05) –
ஒளிபரப்பில் (ஒளிபரப்பில்)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்தத் தொடர் லாஸ் என்சினாசில் நடப்பது போன்று சித்தரிக்கப்பற்றுள்ளது. ஒரு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக வந்திருக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மூன்று மாணவர்களும் அங்கு படிக்கும் பணக்கார வர்க்க மாணவர்களுக்கும் இடையிலான உறவுகளைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் முதல் பருவம் எட்டு அத்தியாயங்களைக் கொண்டு 5 அக்டோபர் 2018 அன்று நெற்ஃபிளிக்சு இல் வெளியிடப்பட்டது. இது விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பருவம் 6 செப்டம்பர் 2019 அன்று வெளியிடப்பட்டது. மூன்றாவது பருவம் ஆகஸ்ட் 2019 இல் தயாரிக்கப்பட்டு, 13 மார்ச் 2020 அன்று வெளியிடப்பட்டது. இந்த பருவங்களின் வெற்றியை தொடர்ந்து மே 2020 மற்றும் பிப்ரவரி 2021 இல், நெற்ஃபிளிக்சு இந்தத் தொடரின் அடுத்த பருவமான நான்காவது மற்றும் ஐந்தாவது பருவத்தை உருவாக்க திட்டம் செய்தது, நான்காவது பருவம் 18 ஜூன் 2021 அன்று வெளியிடப்பட்டது,[3][4] ஐந்தாவது பருவம் ஏப்ரல் 8, 2022 இல் வெளியானது.

தொடரின் பருவங்கள் தொகு

பருவம்EpisodesOriginally released
185 அக்டோபர் 2018 (2018-10-05)
286 செப்டம்பர் 2019 (2019-09-06)
3813 மார்ச்சு 2020 (2020-03-13)
4818 சூன் 2021 (2021-06-18)
588 ஏப்ரல் 2022 (2022-04-08)

கதை சுருக்கம் தொகு

பருவம் 1 தொகு

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நண்பர்களான சாமுவேல், நதியா மற்றும் கிறிஸ்டியன் ஆகியோரின் பள்ளி இடித்ததன் விளைவாக உதவி தொகை மூலம் லாஸ் என்சினாசில் உள்ள பெரிய உயிர்நிலை பள்ளியில் படிக்க செல்கின்றனர். இவர்கள் மூவரும் ஆரம்பத்தில் பணக்கார மாணவர்களால் புறக்கணிக்கப்பட்டனர். நாட்கள் செல்ல செல்ல அவர்களின் வாழ்வில் மனக்கசப்பு, பொறாமை மற்றும் பாலியல் ஈர்ப்பு போன்ற பல பிரசனைகளில் மோதிக்கொள்கின்றனர். அதே தருணம் அந்த பள்ளியில் படித்த மெரினா என்ற மாணவி மர்மான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை குற்றத்தில் சாமுவேலின் சகோதரரான நானோ தண்டிக்கப்படுகிறான்.

பருவம் 2 தொகு

இந்த பருவம் முதல் பருவத்தின் தொடர்சியாக கொலையின் வெளிப்பாட்டிற்குப் பிறகு, சாமுவேல் காணாமல் போவதற்கு வழிவகுக்கிறது. இதற்கிடையில் பல இரகசியங்களைக் கொண்ட புதிய மூன்று மாணவர்களான வலேரியோ, ரெபேகா மற்றும் கயெட்டனா ஆகியோர் பள்ளியில் சேர்கிறார்கள்.

மெரினாவின் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட சாமுவேலின் சகோதரரான நானோ குற்றவாளி இல்லை என நிரூபிக்க சாமுவேல் முயற்சிக்கிறான் அதனால் சக மாணவர்களுடன் நட்பு கொண்டு குற்றவாளியை கண்டறிய போராடுகிறான். இதற்கிடையில் உண்மையான கொலையாளியான போலோ தனது மனசாட்சிக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றார், ஆனால் இறுதியில் கயெட்டனாவின் உதவியுடன் மகிழ்ச்சியாக வாழக் கற்றுக்கொள்கிறார். போலோவின் ரகசியத்தை தெரிந்து கொண்ட ஆண்டரின் இந்த விடயத்தை வெளியில் சொல்ல முடியாததால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றான். உண்மையை வெளிக்கொண்டு வர சாமுவேலின் திட்டத்தின் படி அவன் இறந்ததாக எல்லோரையும் நம்ப வைக்கிறான். இதனால் சாமுவேலின் காதலியான கார்லோ அவன் இறந்துவிட்டதாக நம்பினார், அதனால் போலோவின் குற்றத்தை ஒப்புக்கொண்டார், போலோ கைது செய்யப்பட்டார், ஆனால் இரண்டு வாரங்கள் கழித்து விடுவிக்கப்பட்டு பள்ளிக்குத் திரும்புகிறார்.

நடிகர்கள் தொகு

பருவம் 1 தொகு

  • மரியா பெட்ராசா - மெரினா நுனியர் ஒசுனா (பருவம் 1)
    • ஒரு பணக்கார குடும்ப பின்னணியை கொண்டவர். குஸ்மானின் சகோதரி, நானோ மற்றும் சாமுவேலுடன் காதல் ஈர்ப்பு கொண்டுள்ளார். தனது குடும்பத்தின் போலித்தனமான செயல்களுக்கு குரல் கொடுப்பவள். இந்த பருவத்தில் இவர் கொலை செய்யப்படுகிறார்.[5]
  • இட்சன் எசுகமில்லா - சாமுவேல் "சாமு" கார்சியா டொமாங்குயஸ் (பருவங்கள் 1-5)
    • நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன், நானோவின் தம்பி. மூன்று இடமாற்ற மாணவர்களில் ஒருவர், பருவம் 1 இல் மெரினாவை காதலித்தார், அவரின் இறப்புக்கு பின்பு பருவம் 2 இல் கார்லா மீது காதல் ஈர்ப்பு கொள்கின்றார். கடின உழைப்பாளி, கூச்ச சுபாவமுள்ள மற்றும் அன்பான மனிதர். அவர் எப்போதும் தன்னைச் சுற்றியுள்ளவர்களைத் அரவணைக்கும் குணம் கொண்டவர். நீதிக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவன். பருவம் 5 முடிவில் அவர் தற்செயலாக கொல்லப்பட்டார்.
  • மிகுவல் பெர்னார்டியோ - குஸ்மான் நுனியர் ஒசுனா (பருவங்கள் 1-4)
    • மெரினாவின் தத்தெடுத்த சகோதரர் மற்றும் லூவின் முன்னாள் காதலன் மற்றும் நதியாவின் காதலன். பள்ளியில் மிகவும் செல்வாக்கு கொண்ட பிரபலமான மாணவன். தனது வழி எப்போதும் சரியான வழி என்று நம்புகிறார். தனது சகோதரியின் மீது மிகுந்த அன்பு கொண்டவன். மேலும் இடமாற்ற மாணவர்களுடன் நன்றாகப் பழகுவதில்லை. அவர் தனது நண்பர்களான ஆண்டரின் மற்றும் போலோக்காக எதையும் செய்வார்.
  • மிகுவல் ஹெரான் - கிறிஸ்டியன் வரேலா எக்ஸ்பாசிட்டோ (பருவங்கள் 1-2)
    • மூன்று இடமாற்ற மாணவர்களில் ஒருவன், போலோ மற்றும் கார்லாவுடன் உடல் ரீதியான உறவில் இருந்தான். இவனின் கதாபாத்திரம் நகைச்சுவையானது மற்றும் நானோவின் சிறந்த நண்பன். இவன் பணக்கார மாணவர்களுடன் ஒன்றிணைக்க முயற்சிக்கிறான். பருவம் 2 இல் கார்லாவின் தந்தையின் சதியால் விபத்தில் பலத்த காயமடைகிறான், மேலும் மெரினாவின் கொலை பற்றிய உண்மை வெளிவருவதைத் தடுக்க அவரை சுவிட்சர்லாந்தில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்படுகின்றான்.
  • ஜெய்மி லோரென்டே - பெர்னாண்டோ "நானோ" கார்சியா டொமாங்குயஸ் (பருவங்கள் 1-2)
    • சாமுவேலின் மூத்த சகோதரர், மெரினா மீது காதல் வயப்படுகின்றான். தனக்கு நெருக்கமானவர்களிடம் அக்கறையுடனும் அன்பாகவும் இருப்பான். இவனின் முன் கோபத்தால் அடிக்கடி சிக்கலில் சிக்கிக்கொள்வான்.
  • அல்வாரோ ரிகோ - லியோபோல்டோ "போலோ" பெனவென்ட் வில்லாடா (பருவங்கள் 1-3)
    • கார்லாவின் முன்னாள் காதலன் மற்றும் கயெட்டனாவின் காதலன். மிகவும் பணக்காரர், இரண்டு தாய்மார்களின் மகன், இவர் ஒரு இருபாலினத்தவர். கார்லா மற்றும் கிறிஸ்டியனுடன் உடல் ரீதியான உறவில் இருந்தான். பருவம் 3 இல் பாட்டிலால் குத்தப்பட்டு, கண்ணாடி மாடியில் இருந்து விழுந்து இருக்கின்றார்.
  • அரோன் பைபெர் - ஆண்டர் முனோஸ் (பருவங்கள் 1-4)
    • பள்ளி அதிபரின் மகன், இவர் ஒரு ஓரின செயற்கையாளர். உமர் மீது காதல் கொள்கின்றான். பெற்றோரின் தொடர்ச்சியான அழுத்தத்தின் கீழ் வளர்கிறான். இதனால் போதை மருந்து உட்கொள்ளத் தூண்டப்படுகிறான். தனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் மீது மிகவும் அக்கறையும் மற்றும் அவன் விரும்புவதைப் பெற எதையும் செய்பவன். பருவம் 4 இல் இவனுக்கும் உமர் மற்றும் பேட்ரிக் உடன் முக்கோண காதல் உறவு உள்ளது.
  • மினா எல் ஆம்மணி - நதியா ஷனாவாக (பருவங்கள் 1-4)
    • பாலஸ்தீன நாட்டில் இருந்து குடியேறியவர், இவர் ஒரு இசுலாமிய குடும்பத்தை சேர்ந்தவர் மற்றும் உமரின் சகோதரி. மூன்று இடமாற்ற மாணவர்களில் ஒருவர், குஸ்மானுடன் காதல் வயப்படுகிறார். கல்வியில் சிறந்து விளங்குபவர், தனது மதம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். கட்டுப்பாடான பெற்றோரிடமிருந்து சுதந்திரம் பெற போடுகிறாள்.
  • எசுத்தர் எசுபோசிதோ - கார்லா ரோஸன் காலெருகா (பருவங்கள் 1-3)
    • போலோவின் முன்னாள் காதலி மற்றும் கிறிஸ்டியனின் பாலியல் பங்குதாரர், பருவம் 2 இல் சாமுவேலை காதலிக்கிறார். நல்ல குணம் கொண்டவர். மிகவும் பணக்காரர். அவள் விரும்புவதைப் பெற அவள் பாலுணர்வைப் பயன்படுத்துகிறாள். அவள் விரும்பும் நபர்களைப் பற்றி அக்கறை காட்டுவதால் அவளுடைய மென்மையான பக்கம் காட்டப்படுகிறது.
  • ஓமர் ஆயுசோ - ஓமர் ஷனாவாக (பருவங்கள் 1-)
    • நதியாவின் சகோதரர், அவரது தந்தையின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுபவர். இவர் ஒரு ஓரின செயற்கையாளர். அவர் தனது விருப்பப்படி வாழும்போது பெற்றோரை மகிழ்விக்க போராடுகிறார். பணத் தேவைக்காக இவன் போதைப்பொருளை வித்தார். சாமுவேலின் சிறந்த நண்பன். பருவம் 3 இல் தனது பள்ளி படிப்பை மீண்டும் தொடங்குகிறார் மற்றும் லாஸ் என்சினாஸில் சேர்கிறார். பருவம் 4 இல் ஆண்டர் மற்றும் பேட்ரிக் உடன் ஒரு முக்கோண காதல் உறவு உள்ளது.
  • தானா பவோலா - லுக்ரெசியா "லு" மான்டசினோஸ் ஹென்ட்ரிச் (பருவங்கள் 1-3)
    • இவர் அழகான திமிர் பிடித்த பணக்கார மாணவி, குஸ்மானின் முன்னாள் காதலி, புத்திசாலி மற்றும் போட்டியாளர், இவரது அரை சகோதரர் வலேரியோவுடன் உடல் ரீதியான உறவில் இருந்தார். ஆரம்பத்தில் நதியா மீது கடும் வெறுப்பு இருந்தது, ஆனால் பருவம் 3 இல் நண்பர்களாக மாறுகின்றனர்.

பருவம் 2 தொகு

  • சார்ச்சு லோபசு - வலேரியோ மொன்டிசினோஸ் ரோஜாஸ் (பருவங்கள் 2-3)
    • லுவின் ஒன்றுவிட்ட சகோதரர்.இவர் ஒரு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர், விருந்துகளை விரும்புகிறார், மேலும் அவர் லூக்காக எதையும் செய்வார். இறுதியில் நதியாவுடன் நட்பு கொள்கிறார்.
  • கிளாடியா சலாஸ் - ரெபேக்கா "ரெபே" பாரில்லா லோபஸ் (பருவங்கள் 2-)
    • சாமுவேல் மீது ஈர்ப்பு கொண்ட ஒரு கலகக்கார, பணக்கார பெண். அவர் தனது வகுப்பில் உள்ள மற்ற பணக்கார மாணவர்களிடமிருந்து வேறுபட்டவர், ஏனெனில் அவர் தனது உடைகள் மற்றும் நகைகள் மூலம் ஆடம்பரமாக தனது செல்வத்தை வெளிப்படுத்த விரும்புகிறார். பின்பு நதியா, ஓமர் மற்றும் சாமுவேல் ஆகியோருடன் நன்புகொள்கிறாள். அவரது தாயார் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். பருவம் 4 இல் இருந்து அவர் மென்சியாவுடன் இருபால் செயற்கை உறவைக் கொண்டிருந்தார்.
  • ஜோர்ஜினா அமொரோசு - கயெட்டனா "கே" கிராஜெரா பாண்டோவாக (பருவங்கள் 2-5)
    • ஒரு துப்புரவுப் பெண்மணியின் மகள், ஆனால் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஒரு போலியான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தார். போலோவின் காதலியாக இருக்கிறார். அவர் தனது வகுப்பில் உள்ள பணக்கார மாணவர்களுடன் பழகுவதற்கு ஒரு பொய்யான பணக்கார வாழ்க்கை முறையையும் புனையக்கூடிய அளவிற்கு சிறந்தவர். அவள் லுவுடன் நட்பாகிறாள், அவள் எவ்வளவு பணக்காரி என்பதை நிரூபிக்க தீவிர முயற்சிகளுக்குச் செல்வாள். துப்புரவுப் பெண்மணியான அவரது தாயார், மகளின் பொய்களை ஏற்காத பள்ளியில் பணிபுரிகிறார். போலோவின் மரணத்திற்குப் பிறகு, அவர் தனது தவறை திருந்தி ஒரு செல்வம் இல்லாத வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு பின்பு அந்த பள்ளியில் புதிய துப்புரவு பணியாளரானார். பருவம் 5 முடிவில் ஃபெலிப்பிடம் காதல் வசப்படுகின்றார்.

பருவம் 3 தொகு

  • லெஸ்டி ஸோன் - மாலிக் டி. (பருவம் 3)
    • ஒரு பணக்காரர் மற்றும் ஒரு 'நல்ல' முஸ்லீமாக தோன்றுவதற்கு ஒரு நடிப்பை வெளிப்படுத்தி, நாதியா மீது காதல் வசப்படுவது போன்று நாடகமாடி உமருடன் உடல் ரீதியான உறவில் இருந்தார்.
  • செர்ஜியோ மோமோ - யேரே (பருவம் 3)
  • ஜார்ஜ் க்ளெமென்டே - அலெக்ஸிஸ் (பருவம் 3; சிறுகதை)

பருவம் 4 தொகு

  • கார்லா டியாஸ் - அரியட்னா "அரி" பிளாங்கோ காமர்ஃபோர்ட் (பருவம் 4-)
  • மார்டினா கரிடி - மென்சியா பிளாங்கோ காமர்ஃபோர்ட் (பருவம் 4-)
  • மனு ரியோஸ் - பேட்ரிக் பிளாங்கோ கமர்ஃபோர்ட் (பருவம் 4-)
  • போல் கிரான்ச் - பிலிப் புளோரியன் வான் ட்ரைசென்பெர்க் (பருவம் 4-5)
  • ஆண்ட்ரேஸ் வெலன்கோசோ - அர்மாண்டோ டி லா ஓசா (பருவம் 4-5)
  • டியாகோ மார்ட்டின் - பெஞ்சமின் பிளாங்கோ (பருவம் 4-5)
  • ரேச்சல் லாஸ்கர் - எஸ்டெபானியா வான் ட்ரைசென்பெர்க் (பருவம் 4-5; சிறுகதை)

பருவம் 5 தொகு

  • வாலெண்டின ஸினென்றே - இசடோரா ஆர்டினான் (பருவம் 5-)
  • ஆண்ட்ரே லமோக்லியா - இவான் கார்வாலோ (பருவம் 5-)
  • கார்லோட்டோ கோட்டா - குரூஸ் கார்வாலோ (பருவம் 5-)
  • ஆடம் நூரோ - பிலால் இப்ராகிம் (பருவம் 5)

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலைட்&oldid=3414879" இருந்து மீள்விக்கப்பட்டது