மினூ மசானி

இந்திய விடுதலைப் போராட்டக் குசராத்தியர்

மினூ மசானி அல்லது மினோசர் ருஸ்தம் மசானி அல்லது எம். ஆர். மசானி (Minocher Rustom or Minoo Masani) (20 நவம்பர் 1905 – 27 மே 1998) இந்தியாவின் மும்பை மாகாணத்தில் பிறந்த பார்சி சமூக இந்திய அரசியல்வாதியும், இராசகோபாலாச்சாரி மற்றும் என். ஜி. ரங்காவால் துவக்கப்பட்ட சுதந்திரா கட்சியின் தலைவர்களில் ஒருவரும் ஆவார். எம். ஆர். மசானி ராஜ்கோட் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து, மூன்று முறை இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]

எம். ஆர். மசானி
பிறப்புமினோசர் ருஸ்தம் மசானி
(1905-11-20)20 நவம்பர் 1905
மும்பை மாகாணம்
இறப்பு27 மே 1998(1998-05-27) (அகவை 92)
மும்பை
பணிஅரசியல்வாதி
அறியப்படுவதுதாராண்மையியம்

இலண்டனில் சட்டப்படிப்பு முடித்தவர். இந்திய விடுதலை இயக்கங்களில் பங்கு கொண்டவர். மினூ மசானியின் பொது வாழ்க்கை, மும்பை மாநகர் மன்ற மேயராக 1943இல் தேர்வு செய்ததன் மூலம் துவங்கியது. அதே ஆண்டில் மும்பை மாகான சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1960ஆம் ஆண்டில் சுதந்திரா கட்சியில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முழங்கியவர்.

மினூ மசானி 92வது அகவையில் மும்பையில் உயிர் நீத்தார்.[2]

எழுதிய நூல்கள்

தொகு

எம். ஆர். மசானி எழுதிய முதல் ஆங்கில நூலான Our India என்ற நூலை, இந்திய விடுதலைக்கு முன்னர் கல்லூரிகளில் பாட நூலாக வைக்கப்பட்டு இருந்தது.[3]. எழுதிய பிற ஆங்கில நூல்கள்;

  • Our India (1940)
  • Socialism Reconsidered (1944)
  • Picture of a Plan (1945)
  • A Plea for a Mixed Economy (1947)
  • Our Growing Human Family (1950)
  • Neutralism in India (1951)
  • The Communist Party of India: A Short History (1954)
  • Congress Misrule and Swatantra Alternative (1967)
  • Too Much Politics, Too Little Citizenship (1969)
  • Liberalism (1970)
  • The Constitution, Twenty Years Later (1975)
  • Bliss was it in that Dawn ... (1977)
  • Against the tide (1981)
  • We Indians (1989)

ஆதார நூற்பட்டியல்

தொகு
  • B. K. Karanjia (1970). Rustom Masani: Portrait of a Citizen. Popular Prakashan.

மேற்கோள்கள்

தொகு
  1. Friedrich-Naumann-Stiftung, ed. (1999). Liberal priorities for India in the 21st century. Project for Economic Education. p. 18. பார்க்கப்பட்ட நாள் 27 May 2013.
  2. Minoo Masani dead
  3. [1]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மினூ_மசானி&oldid=3692999" இலிருந்து மீள்விக்கப்பட்டது