மின்காட்டி

  மின்காட்டி   (Electroscope) என்பது  மின்னூட்டங்களின் இருப்பையும், அவற்றின் அளவையும் கண்டறியப் பயன்படுத்தப்பட்ட துவக்ககால அறிவியல் கருவியாகும். சோதிக்கப்படும் பொருளின் மீது கூலும் விசையால் ஏற்படும் நகர்வினைக்கொண்டு, இக்கருவியானது மின்னூட்டத்தைக் கண்டுபிடிக்கிறது. ஒரு பொருளின் மின்னூட்டமானது அதன் மின்னத்தத்துடன் விகிதசமத்தில் இருக்கும். மின்காட்டியினைக் கொண்டு அளக்கப்படும் மின்னூட்டத்தின் அளவு தோராயமானதாகத்தான் இருக்கும். மின்னூட்டத்தின் அளைவைத் துல்லியமாகக் கணிப்பதற்கு "மின்னளவிகள்" பயன்படுகின்றன.

கில்பர்ட்டின் "வெர்சோரியம்".


மின்காட்டிதான் முதல் மின்கருவியாகும். பிரித்தானிய மருத்துவர் வில்லியம் கில்பர்ட்டால் 1600 களில், முதல் மின்காட்டி கண்டுபிடிக்கப்பட்டது. [1][2] இது "வெர்சோரியம்" (versorium) என அழைக்கப்பட்ட ஒரு சுழலும் ஊசியாகும். ஆஸ்திரிய அறிவியலாளர் விக்டர் ஹெஸ், அண்டக் கதிர்களின் கண்டுபிடிப்பின் போது மின்காட்டியைப் பயன்படுத்தினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Gilbert, William; Edward Wright (1893). On the Lodestone and Magnetic Bodies. John Wiley & Sons. p. 79. a translation by P. Fleury Mottelay of William Gilbert (1600) Die Magnete, London
  2.   Fleming, John Ambrose (1911). "Electroscope". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 9. Cambridge University Press. 

நூற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்காட்டி&oldid=4030263" இலிருந்து மீள்விக்கப்பட்டது