மின்சார மிதிவண்டி சட்டம்
மின்சார மிதிவண்டி சட்டம் என்பது மின்சார மிதிவண்டி பயன்பாட்டை நெறிப்படுத்த பல நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டமாகும். மின்சார மிதிவண்டி பயன்படுத்துவோரின் பாதுகாப்பு மற்றும் மின்சார மிதிவண்டி உருவாக்குவதற்கான உள்கட்டமைப்பு பொதுஇடங்களில் அதன் பயன்பாடு ஆற்றல் திறன் போன்ற பலவற்றை உள்ளடக்கிய சட்டம் ஆகும். உலகில் உள்ள பல நாடுகளில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது .
250 வாட்டு திறன் கொண்ட மின்சார மிதிவண்டி பல ஸ்வீடன் ,நார்வே ,பின்லாந்து ,இந்தியா,துருக்கி,இஸ்ரேல் மற்றும் ஜப்பான் நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.
ஸ்வீடன்
தொகுஸ்வீடன் நாட்டில் வாகன ஒழுங்குமுறை சீரமைப்பு சட்டத்தின் கீழ் 250 வாட்டு மின் ஆற்றல் கொண்ட மின்சார மிதிவண்டிகளை இயல்பான மிதிவண்டிகளாக கருதப்படுகிறது .மேலும் இந்த வகை மிதிவண்டிகளின் அதிகபட்ச செயல் திறன் மணிக்கு 25 கீ .மீ ஆற்றல் திறன் 250 வாட்டுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
துருக்கி
தொகுதுருக்கி நதியில் பயன்படுத்தப்படும் மின்சார மிதிவண்டிகளின் விசைப்பொறி மணிக்கு 25 கீ மீ வேகத்தை தாண்டும் போது விசைப்பொறி அணைக்கப்பெற்று இயல்பான மிதிவண்டிபோல் செயல் படும் அமைப்பு மக்கள் நலனுக்காக நடைமுறையில் உள்ளது .
இஸ்ரேல்
தொகுஇஸ்ரேல் நாட்டில் 16 வயத்துக்கு மேற்பட்டோர் மட்டுமே மிதிக்கட்டை துணையுள்ள 250 வாட்டு ஆற்றல் மற்றும் மணிக்கு 25 கீ மீ செல்லும் மிதிவண்டி பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.மிதிவண்டிகள் ஐரோப்பிய தரம் ஈ என் ௧௫௧௯௪ மற்றும் இஸ்ரேல் நாட்டின் தரகட்டுப்பாடு நிலைய ஒப்புதல் பெற்று இருக்க வேண்டும்.இவ்வகை மிதிவண்டிகள் மக்கள் பயன்படுத்த உரிமம் மற்றும் காப்பீடு தேவை இல்லை என்று அறியப்படுகிறது.மற்ற அணைத்து வகை வாகனங்களும் உரிமம் மற்றும் காப்பீடு அவசியம் . மின்சார மிதிவண்டியில் எடை 30 கிலோவிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் .
நார்வே
தொகுநார்வே நாட்டில் மின்சார மிதிவண்டிகள் அந்நாட்டின் வாகன சீரமைப்பு நெறிமுறைகள் வாயிலாக இயல்பான மிதிவண்டிகளாக கருதபடுகிறது. அதிகபட்ச செயல் திறன் மணிக்கு 25 கீ .மீ ஆற்றல் திறன் 250 வாட்டுக்கு மிகாமலும் மின்சார மிதிவண்டிகள் செயல் பட வேண்டும் .பனிக்காலங்களில் மின்சார மிதிவண்டி பயன்பாடு சிறப்பாக உள்ளது .மேலும் தலைக்கவசம் அணியும் பழக்கம் மின்சார மிதிவண்டி பயன்படுத்துவோரிடம் அதிகரித்துள்ளது
பின்லாந்து
தொகுபின்லாந்து நாட்டில் மின்சார மிதிவண்டி பயன்படுத்துவதற்கு காப்பீடு அவசியம். இயல்பான மிதிவண்டி கொண்டுள்ள மிதிக்கட்டை துணைசெய்ய 250 வாட்டு திறன் கொண்ட மணிக்கு 25 கீ மீ மிகாமல் செயல்படும் விசைப்பொறி பயன் படுத்தலாம்.தலைகவசம் பயன்படுத்துவது கட்டாயம் ஆல் ஆனால் அதன் பயன்பாடு ஊக்கப்படுத்தப்படுகிறது.
இந்தியா
தொகுஇந்தியாவில் அணைத்து மின்சார வாகனங்களும் அரசு அனுமதி பெற்று தான் செயல்படவேண்டும் .
ஜப்பான்
தொகுஜப்பான் நாட்டில் மின்சார மோட்டார் துணைகொண்டு செயல்படும் மிதிவண்டி மிதிக்கட்டடை செயலமைப்பு கொண்டு இருந்தால் அது மனித சக்தியால் செயல்படும் மிதிவண்டி என்று கருதப்படுகிறது .முழுவதும் மின்சார உந்துதலால் செயல்படும் மிதிவண்டிகள் மட்டுமே மின்சார மிதிவண்டியாக கருதப்படுகிறது .இவ்வகை வண்டிகள் உரிமம் பெற்று இயக்க வேண்டும் மேலும் இருசக்கர மோட்டார் வாகன விதிகளையும் பின்பற்ற வேண்டும் .
மேற்கோள்கள்
தொகு* http://blog.newwheel.net/post/30869093307/eurobike-electric-bike-review-2012 * http://www.ebikeantalya.com/en/e-bike-antalya-neden-elektrikli-bisiklet.html * http://www.milliyet.com.tr/emniyetten-elektrikli-bisiklet-aciklamasi-samsun-yerelhaber-327338 பரணிடப்பட்டது 2017-09-29 at the வந்தவழி இயந்திரம்