எதிர்முனைக் கதிர்கள்

(மின்னணுக்கற்றை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எதிர் முனைக் கதிர்கள் அல்லது மின்னணுக்கற்றை (Cathode ray) என்பது மின்னிறக்கக் குழாய்களில் எதிர்மின்முனையிலிருந்து நேர்மின்முனையினை நோக்கிப் பாயும் கதிர்களாகும். இக்கதிர்கள் எதிர்மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்களால் ஆனது. மேலும் இக்கதிர்கள் மின்புலத்தாலும் காந்தப்புலத்தாலும் விலக்கமுறுகின்றன. அயனாக்கும் பண்புடையன. உலோகத் தகட்டினால் தடைபடும் போது எக்சு கதிர்களை உமிழ்கின்றன. இவை நேர் கோட்டில் பயணிக்கின்றன. இதனால் அவைகள் தங்கள் பாதையிலுள்ள பொருட்களின் நிழலைத் தோற்றுவிக்கின்றன. ஒளிர்திரையில் விழும்போது ஒளிர்கின்றன. எந்திர ஆற்றலுடையன. தாழ் அமுக்கத்தில் அடைக்கப்பட்ட வாயுவிற்கு உயர் மின்னழுத்த வேறுபாடு பிரயோகிக்கப்படும் போது எதிர்மின்முனையிலிருந்து ஒரு வகையான கதிர்கள் வெளிச்செல்வது அவதானிக்கப்பட்டது. இது எதிர்மின்முனையிலிருந்து வெளிப்படுவதால் இது எதிர் முனைக் கதிர்கள் எனப்படுகிறது. தாழ் அமுக்கமாக 0.01atm பயன்படுத்தப்படும். உயர் மின்னழுத்த வேறுபாடு அண்ணளவாக 11000v பயன்படும். இக்கதிர்கள் அதிக அணுநிறைக் கொண்ட பொருட்களால் தடைபடும் போது எக்சு-கதிர்களைத் தோற்றுவிக்கின்றன.[1][2][3]

ஆதாரம்

தொகு
  • A dictionary of science----ELBS

மேற்கோள்கள்

தொகு
  1. E. Goldstein (May 4, 1886) "Vorläufige Mittheilungen über elektrische Entladungen in verdünnten Gasen" (Preliminary communications on electric discharges in rarefied gases), Monatsberichte der Königlich Preussischen Akademie der Wissenschaften zu Berlin (Monthly Reports of the Royal Prussian Academy of Science in Berlin), 279-295. From page 286: "13. Das durch die Kathodenstrahlen in der Wand hervorgerufene Phosphorescenzlicht ist höchst selten von gleichförmiger Intensität auf der von ihm bedeckten Fläche, und zeigt oft sehr barocke Muster." (13. The phosphorescent light that's produced in the wall by the cathode rays is very rarely of uniform intensity on the surface that it covers, and [it] often shows very baroque patterns.)
  2. Joseph F. Keithley The story of electrical and magnetic measurements: from 500 B.C. to the 1940s John Wiley and Sons, 1999 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7803-1193-0, page 205
  3. Michael Faraday (1838) "VIII. Experimental researches in electricity. — Thirteenth series.," Philosophical Transactions of the Royal Society of London, 128 : 125-168.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்முனைக்_கதிர்கள்&oldid=3769238" இலிருந்து மீள்விக்கப்பட்டது