மின்னணு முத்திரைத்தாள்

மின்னணு முத்திரைத்தாள் என்பது மின்னணுமுறையில் நமக்கு தேவையான தொகைக்கு பணம் செலுத்தி முத்திரைத்தாள் பெருமுறை ஆகும். ஒவ்வொரு முத்திரைத்தாளிலும் ஒரு தனித்துவ என் இருக்கும் அதன் மூலம் அந்த முத்திரைத்தாள் முறையானது அரசின் அங்கீகாரம் பெற்ற விற்பனை பிரதிநிதி மூலம் விற்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம். மின்னணு முத்திரைத்தாள் மூலம் அரசாங்கத்திற்கான முத்திரை வரி /தீர்வை செலுத்துவதற்கு ஒரு பாதுகாப்பான் வழிமுறை. சிங்கப்பூர், ஹாங்காங், இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. காகித முத்திரை குறிப்பிட்ட வகைப்பாடுகளை கொண்டு இருக்கும் ஆகையால் துல்லியமான முத்திரை தீர்வை பெற இயலாது. ஆனால் மின்னணு முத்திரை குறிப்பிட்ட எந்த ஒரு தொகை வகைப்பாட்டிற்கும் பெற இயலும். காகித முத்திரை தாள் நம்பகத்தன்மை உறுதிசெய்வதற்கும் அதிக நேரம் ஆகும். ஆனால் மின்ணுன முத்திரைத்தால் இணையத்தில் உடனடியாக சரிபார்த்துக்கொள்ளலாம்.

மின்னணு முத்திரைத்தாள்

தொகு

வருவாய் துறை சார்ந்த பத்திரப்பதிவு செய்ய பயன்படுத்த தேவையான பத்திரப்பதிவு கட்டணம் இந்த முத்திரை தாள் மூலம் பெறப்படுகிறது.

மின்ணுமுத்திரைத்தாள் பயன்பாடு

தொகு

குத்தகை, குடியிருப்பு ஒப்பந்தம் மற்றும் முன்காப்பீடு ஒப்பந்த பத்திரம் போன்ற பல சேவைகளுக்கு மின்னணு முத்திரைத்தாள் பயன்படுத்தபடுகிறது. உடைமை மாற்றல் முறி / மாற்றளிப்பு ஆவணம், பாகப்பிரிவினை ஒப்பந்தம், அசைய சொத்துகளை விற்க பிரதிநிதித்துவ அதிகாரம் கொடுக்க, கடன்பத்திரங்கள், பங்குகள் வாங்க உரிமை மாற்ற, வாங்கி கடன் பெற நன்மதிப்பு கடிதம் வழங்கவும் மின்ணுமுத்திரைத்தாள் பயன்படுத்தபடுகிறது. ஒவ்வொரு மின்னணு முத்திரைத்தாளில் ஒரு தனித்துவ என் உண்டு. அதனை அங்கீகரிக்கப்பட்ட இணையத்தில் உள்ளீடு செய்து அதன் நம்பக தண்மை சரிபார்த்துக்கொள்ளலாம். முத்திரைத்தாள் வழங்கப்பட்ட நாள் மற்றும் காலமுத்திரை கொண்டிருக்கும். இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் மின்னணு முத்திரைத்தாள் நுனியை அச்சிடு, தனித்துவ எண் மற்றும் இருபரிமாண பட்டைகூறியீடு கொண்டிருக்கும். சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் 1999 ஆம் ஆண்டு உலகின் முதல் மின்னணு முத்திரைத்தாள் பயன்படுத்தும் நடைமுறை உருவாக்கி 2000ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தத் தொடங்கியது.[1] ஹாங்காங் உள்நாட்டு வருவாய் ஆணையம் 2004 ஆம் ஆண்டு முதல் மின்னணு முத்திரைத்தாள் பயன்படுத்தும் நடைமுறைத் தொடங்கியது.[2]

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னணு_முத்திரைத்தாள்&oldid=3224790" இலிருந்து மீள்விக்கப்பட்டது