மின்னீர்ம கைமுறை செலுத்தம்
மின்னீர்ம கைமுறை செலுத்தம் (Electrohydraulic manual transmission) என்பது ஓட்டுனர்கள் இயக்கும் வழக்கமான கைமுறை செலுத்தத்தை போலன்றி தானியங்கு உரசிணைப்பி கொண்ட ஒருவகை பகுதி தானியங்கு செலுத்துமுறையாகும். மின்னீர்ம கைமுறை செலுத்த முறையில் உரசிணைப்பியை இலத்திரனியல் கணினியும், நீர்மங்களும் கட்டுப்படுத்துகின்றன. பற்சக்கரத்தை மாற்ற, ஓட்டுனர் செலுத்தம் மாற்று நெம்புகோல் கொண்டு குறிப்பிட்ட பற்சக்கரத்தைத் தேர்வு செய்வார். அப்பொழுது அந்த அமைப்பு தானாகவே உரசிணைப்பியை இயக்கி, சுழற்சிக்கு ஏதுவாக நெருக்கி, பின் உரசிணைப்பியை மறுபடியும் இயல்புநிலையில் வைக்கும். இன்னும் சில செலுத்த முறைகள் ஒவ்வொரு பற்சக்கரத்தை வரிசைமுறையில் தேர்வு செய்வதற்கு மேல் மாற்று, கீழ் மாற்று என்ற நெம்புகோலை பயன்படுத்துகின்றன.
சாலை வண்டிகளின் பயன்
தொகு1990க்கு பின் F355 F1-இல் தொடங்கி, ஃபெராரி சீருந்துகளில் பெரும்பாலும் இவ்வாறான வரிசைமுறை செலுத்தத்தையே பயன்படுத்துகின்றன. அந்த முறையில் இப்பொழுது புதிதாக ஃபொர்முலா ஒன்காக வடிவமைக்கப்பட்ட F1 சூப்பர்ஃபாச்ட் என்னும் சீருந்து பற்சக்கரத்தை 60 மி.நே மாற்றுகிறது. இந்த தொழில்நுட்பம் மெதுவாக காம்பியோகார்சா என்றறியப்படுகிற அதன் சகோதர நிறுவனம் மசெராடிக்கு சென்றது.
பயன்கள்
தொகு- ஆல்பா ரோமியோ 156 ஜேடிஎஸ்/ஜிடிஎ (Alfa Romeo 156 JTS/GTA)
- ஆல்பா ரோமியோ 147 எஸ்/ஜிடிஎ
- ஆல்பா ரோமியோ ஜிடி
- ஆல்பா ரோமியோ 159
- ஆல்பா ரோமியோ
- ஆல்பா ரோமியோ ஸ்பைதர்
- அஸ்டன் மார்டின் (சில மாதிரிகள்)
- ஆடி ஆர்8 (சாலை வண்டி)
- 1997 பிஎம்டபிள்யு எம்3#இ36 எம்3[1] (எஸ்எம்ஜி)
- பிஎம்டபிள்யு எம்3#இ46 எம்3(எஸ்எம்ஜி II)
- பிஎம்டபிள்யு எம்5#இ60 எம்5 (2005-தற்சமயம்)(எஸ்எம்ஜி III)
- பிஎம்டபிள்யு எம்6#இ63/64 எம்6 (எஸ்எம்ஜி III)
- பிஎம்டபிள்யு_சி4_(இ85) (விருப்புள்ள எஸ்எம்ஜி)
- பியட் ஸ்டிலோ அபாரத் (செலி ஸ்பீட்)
- 1997 ஃபெராரி எப்355 (எப்1)
- ஃபெராரி எப்XX
- ஃபெராரி 360
- ஃபெராரி என்சோ
- ஃபெராரி எப்430
- ஃபெராரி 612 ச்காக்லிட்டி
- ஃபெராரி 599
- லம்போர்க்கினி கல்லர்டோ (இ பற்சக்கரம்)
- 2010 லெசஸ் எல்எப்எ (எஎஸ்ஜி)
- மசெராடி (சில மாதிரிகள்)
- 2001 டொயோடா எம்ஆர்2#மூன்றாம் தலைமுறை / ஜிஜிடபிள்யு30 (1999-2007) (எஸ்எம்டி)
மேற்கோள்கள்
தொகு- ↑ "FAQ E36 M3 3.2". BMW M Registry. பார்க்கப்பட்ட நாள் 2009-10-03.