மின்னூட்டப் பகுப்பி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மின்னிழைஉருகியுடன் (fuse) உள்ள, நீட்சி மின்வடமே(extention cord) மின்னூட்டப் பகுப்பி (spike guard/Spike buster) என்று அழைக்கப்படுகிறது. இதில் இணைக்கப்படும் மின்கருவிகளின் மின்னூட்டங்களைத் (+ive, -ive, earthing) தெளிவாக, அதிலுள்ள ஒளிஉமிழிகள் காட்டுகின்றன. மேலும், இதில் மின்னோட்டம் அதிகமாகும் போது, அதன் மின்னிழை உருகுவதால், மின்சுற்று துண்டிக்கப்பட்டு, மின்னோட்டத்தடையை ஏற்படுத்துகிறது. இதனால் ஒரு மின்கருவி (எ.கா. - கணினி) பாதுகாக்கப்படுகிறது.
மின்தேக்கி, திரிதடையம் முதலிய மின்துணைக்கருவிகளின் உதவியால் மின்சாரத்தை அதிகபடுத்த முடியும். ஆனால், இது மின்னோட்டம் அதிகமாகும் போது, மின்னிழை உருகி, மின்னோட்டத்தை நிறுத்தும். எனவே, இதனை மின்தடுப்பி என்றும் அழைக்கலாம். அதோடு இம்மின்கருவி, தன்இணைப்பிலுள்ள மற்றொரு மின்கருவியின் மின்சுற்றுகளின் நிலை பற்றியும், தன் ஒளிஉமிழ்தல் மூலம் காட்டுகிறது.