மின்னேரியா தானைவைப்பு

இலங்கையில் உள்ள இராணுவ முகாம்

மின்னேரிய தானைவைப்பு (Minneriya Garrison) என்பது இலங்கையின் வட மத்திய மாகாணத்தின், மின்னேரியாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ள இலங்கை தரைப்படையின் படைத் தளங்களைக் குறிப்பிடப் பயன்படும் ஒரு பொதுவான பெயராகும். இப்பகுதியில் இலங்கை பீரங்கிப் படையின் காலாட்படை பயிற்சி மையம், பீரங்கிப் பள்ளி உட்பட இராணுவத்தின் பல பயிற்சி மையங்கள் அமைந்துள்ளன. இங்குராகொடை விமானப்படை தளம் இதன் அருகிலேயே அமைந்துள்ளது.[1]

மின்னேரியா தானைவைப்பு
Minneriya Garrison
மின்னேரியா, வடமத்திய மாகாணம்
வகை படைத்தளம்
இடத் தகவல்
இட வரலாறு
பயன்பாட்டுக்
காலம்
1980கள் – தற்போது
காவற்படைத் தகவல்
காவற்படை இலங்கை பீரங்கிப் படை

இந்த தானைவைப்பு 1980 களில் நிறுவப்பட்டது. மேலும் 1980 கள் மற்றும் 1990 களில் இலங்கை உள்நாட்டுப் போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இராணுவத்தின் விரைவான வளர்ச்சியினால் இது விரிவாக்கப்பட்டது. காலாட்படை மற்றும் பீரங்கிப் படைகளுக்கன பயிற்சி மைதானமாக இருப்பதுமல்லாமல், இது தானைவைப்பு கட்டளை தலைமையகமாகவும், இராணுவ நடவடிக்கைகளுக்கான முன்னோக்கி நிலைப் பகுதியாகவும் செயல்படுகிறது.[2]

பயிற்சி மையங்கள்

தொகு
  • காலாட்படை பயிற்சி மையம்
  • பீரங்கிப் படை பள்ளி
  • இலங்கை இராணுவ பொலிஸ் பாடசாலை

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னேரியா_தானைவைப்பு&oldid=3979436" இலிருந்து மீள்விக்கப்பட்டது