மின்புலத் தூள்நகர்ச்சி

மின்புலத் தூள்நகர்ச்சி (Electrophoresis) என்பது மின்மம் பெற்றுள்ள, வெவ்வேறு நிறைகள் கொண்ட சிறு தூள்கள் மின்புலத்தால் உந்தப்பட்டு, அத்தூள்கள் உள்ள ஊடகத்தின் வழியே வெவ்வேறு வேகத்தில் நகரும். இதனைக் கொண்டு வெவ்வேறு மூலக்கூறுகளை பிரித்தெடுக்கலாம். இச் செய்முறை தொழினுட்பம், உயிர்வேதியியல், மூலக்கூற்று உயிரியல் போன்ற துறைகளில் பெரிதும் பயன்படுகின்றது. ஒரே அளவு மின்மம் கொண்ட இருவேறு தூள்களில், கூடுதலான நிறை கொண்ட தூள் அல்லது பொடி மெதுவாக நகரும், நிறை குறைவான நிறை கொண்ட துகள் விரைந்து நகரும். ஏனெனில் மின்புலம் மின்மத்தின் அளவைக் கொண்டு உந்தும், ஆனால் எடை கூடுதலாக இருந்தால் மின்புலம் தரும் விசையால் மெள்ளவே நகரும். இதுவே அடிப்படைக் கருத்து.

இரியூசு (F.F.Reuss) என்னும் உருசிய ஆய்வாளர் 1807 இல் முதன்முதலாக இம்முறையின் அடிப்படையைக் கண்டுபிடித்தார். அவர் நீரில் இடைமிதந்த களிமண் துகள்கள், மின்னழுத்தம் தந்தால் நகர்வதைக் கண்டுபிடித்தார்[1]. ஆனால் மின்புலத் தூள்நகர்ச்சிக் கருவியாக இக்கண்டுபிடிப்பு 1937 ஆம் ஆண்டுவரை, 130 ஆண்டுகளாக, பயன்படவில்லை. 1937 இல் ஆர்ன் டிசெலியசு (Arne Tiselius) என்பவர் மின்புலத்தால் தூள்கள் நகருவதைக் கொண்டு நகரும்-எல்லை முறை என்னும் செய்நுட்பத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தினார். இன்று இச்செய்நுட்பம் பற்றி பல நூல்களும் ஆய்வுக்கட்டுரைகளும் ஆங்கிலத்திலும்[2][3][4][5][6][7] பிற ஐரோப்பிய, உலக மொழிகளும் உள்ளன. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியலுக்கான அனைத்துலக ஒன்றியத்தின் (IUPAC) கீழ் மின்னகர்ச்சி விளைவுகளில் (electrokinetic phenomena) சிறந்த அறிஞர்களால் வெளியிடப்பட்ட நுட்ப அறிவிப்புரை ஒன்றும் உள்ளது[8]

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

தொகு
  1. Reuss, F.F. Mem.Soc.Imperiale Naturalistes de Moscow, 2, 327 1809
  2. Lyklema, J. “Fundamentals of Interface and Colloid Science”, vol.2, page.3.208, 1995
  3. Hunter, R.J. "Foundations of Colloid Science", Oxford University Press, 1989
  4. Dukhin, S.S. & Derjaguin, B.V. "Electrokinetic Phenomena", J.Willey and Sons, 1974
  5. Russel, W.B., Saville, D.A. and Schowalter, W.R. “Colloidal Dispersions”, Cambridge University Press,1989
  6. Kruyt, H.R. “Colloid Science”, Elsevier: Volume 1, Irreversible systems, (1952)
  7. Dukhin, A.S. and Goetz, P.J. "Ultrasound for characterizing colloids", Elsevier, 2002
  8. ”Measurement and Interpretation of Electrokinetic Phenomena”, International Union of Pure and Applied Chemistry, Technical Report, published in Pure Appl.Chem., vol 77, 10, pp.1753–1805, 2005

[

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்புலத்_தூள்நகர்ச்சி&oldid=3924172" இலிருந்து மீள்விக்கப்பட்டது