மின்ரெக்கார்டைட்டு

கார்பனேட்டு கனிமம்

மின்ரெக்கார்டைட்டு (Minrecordite) என்பது CaZn(CO3)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். கால்சியம் மற்றும் துத்தநாகம் தனிமங்களை உடன் உறுப்பினராக் கொண்ட தோலமைட்டு கனிம குழுவிற்கு சொந்தமான மின்ரெக்கார்டைட்டு மிகவும் அரிதான ஒரு கனிமமாகும். நமீபியா நாட்டின் திசுமேப்பு சுரங்கத்தில் காணப்படும் டையாப்டேசு என்ற கனிமத்துடன் தொடர்புடைய கனிமமாக இது கண்டறியப்பட்டது. தொழில்முறை மற்றும் பொழுது போக்கு கனிமவியலாளர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பைக் குறிக்கும் தி மினரலாச்சிக்கல் ரெக்கார்ட்டு என்ற செய்தி இதழின் நினைவாக இக்கனிமத்திற்கு மின்ரெக்கார்டைட்டு என்று பெயரிடப்பட்டது.[4] திசுமேப்பு வட்டாரத்தில் முதன்மையாக கண்டறியப்பட்டபோது டையோப்டேசுடன் கலந்திருந்தது. பின்னர் மேலும் குறைவாக தப்டைட்டு, கால்சைட்டு மற்றும் மாலகைட்டுடு போன்ற கனிமங்களும் இதனுடன் சேர்ந்து காணப்பட்டன.[5] மின்ரெக்கார்டைட்டு ஓர் அரிய கனிமமாகும். உலகில் ஒரு சில படிவுகளில் மட்டுமே காணப்படுகிறது. முதன் முதலில் காணப்பட்ட வட்டாரத்திற்கு கூடுதலாக, இது போர்த்துகல் நாட்டின் பெச்சா மாவட்டத்தின் மோராவில் உள்ள பிரீகுயிகா சுரங்கத்திலும் காணப்படுகிறது.[6]

மின்ரெக்கார்டைட்டு
Minrecordite
பொதுவானாவை
வகைகார்பனேட்டுக் கனிமம், தோலமைட்டு குழு
வேதி வாய்பாடுCaZn(CO3)2
இனங்காணல்
நிறம்வெண்மை, நிறமற்று
படிக இயல்புசாய்சதுரப் பிழம்புரு படிகங்கள் சேணம் வடிவிலும் முறுக்கப்பட்டும்
படிக அமைப்புமுக்கோணம்
பிளப்பு[10-14] இல் சரி பிளவு
மோவின் அளவுகோல் வலிமை3,5-4
மிளிர்வுமுத்து
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒப்படர்த்தி3,45
மேற்கோள்கள்[1][2][3]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் மின்ரெக்கார்டைட்டு கனிமத்தை Mrd[7]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. http://rruff.geo.arizona.edu/doclib/hom/minrecordite.pdf Mineral Handbook
  2. https://www.mindat.org/min-2723.html Mindat
  3. http://webmineral.com/data/minrecordite.shtml Webmineral
  4. Garavelli, Carlo G., Vurro, Filippo, Fioravanti, Gian Carlo (1982). "Minrecordite, a new mineral from Tsumeb". The Mineralogical Record 13: 131–136. 
  5. "Minrecordite". Mindat. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
  6. Pimentel, R., Nunes, R. & De Ascenção, R. (2007). "Les minéraux d'altération de plomb (Pb) et zinc (Zn) du massif de Preguiça, Moura, Portugal". Le Regne Mineral 75: 19–26. 
  7. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்ரெக்கார்டைட்டு&oldid=4092742" இலிருந்து மீள்விக்கப்பட்டது