மின் துணி தேய்ப்புப் பெட்டி

மின் துணி தேய்ப்புப் பெட்டி(Electic Iron box) துணிகளைச் சலவை செய்து மடிப்புக் கலையாமல் வைத்து நாம் உடைகளைச் சீராக அணிந்து கொள்ள உதவுவது.

ஒரு நவீன மின் துணிதேய்ப்புப் பெட்டி

வரலாறு

தொகு

பல நூற்றாண்டுகளாக மிகப் பெரிய, பட்டையான செங்கல் துண்டுகள் அல்லது உலோகத் துண்டுகள் அல்லது எரியூட்டப்பட்ட கரித்துண்டுகளைப் போட்டு துணிகளைத் தேய்த்து வந்தார்கள் பத்தொண்பதாம் நூற்றாண்டில் தான் பல்வேறு மாறுபாடுகள் கடைபிடிக்கப்பட்டு, குழாய் மூலம் வாயுவை பெட்டியினுள்ளே அனுப்பி எரிய வைத்துச் சூடாக்கி துணிகளைத் தேய்த்தார்கள். ஆனால் வாயுக்கசிவு ஏற்பட்டதால் அது சரியாக அமையவில்லை. 1880-ல் தான் மின்சாரத் தேய்ப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. முதல் மின் தேய்ப்புப் பெட்டி ஹென்றி சிலே என்பவரால் வடிவமைக்கப்படது. மின்சாரத்தால் ஒரு வெப்பமூலம் சூடாக்கப்பட்டு அதன் மேல் இப்பெட்டி வைக்கப்பட்டு சூடானதும் துணிகள் தேய்க்கப்பட்டன. 1903-ல் தான் நேரிடை மின்னிணைப்பு கொடுக்கப்பட்டு பெட்டியினுள்ளே உள்ள கம்பிச் சுருள் சூடாகி அதனால் கிடைத்த வெப்பம் பெட்டியால் பெறப்பட்டு துணிகள் தேய்க்கப்பட்டன. 1920 -ல் ஜோசப் மையர்ஸ் என்பவரால் தானியங்கி வெப்ப ஒழுங்குமுறை உள்ள மின் தேய்ப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. 1926 -ல் நீராவி மின் தேய்ப்புப்பெட்டி அறிமுகப்படுத்தப் பட்டது. இவ்வாறு மின் தேய்ப்புப் பெட்டி படிப்படியாக வடிவம் பெற்றது.

மின் தேய்ப்புப்பெட்டித் தொழில்நுட்பம்

தொகு

துணிகள் மடிப்பு கலையாமல் இருக்க நாம் பயன் படுத்தும் தேய்ப்புப் பெட்டியின் தொழில் நுட்பம் நான்கு விவரங்களை உள்ளடக்கியது அவை:

  1. எடை
  2. வெப்ப மூலம்(Heat Source)
  3. வெப்ப ஒழுங்கு முறை(Heat regulatioan)
  4. ஈரத்தன்மை(Moisture)

ஆகியவைகளாகும்.

துணிகளை அழுத்தித் தேய்ப்பதற்கேற்றவாறு ஓரளவு நிறையுள்ள பொருள் தேவை

வெப்ப மூலம்

தொகு

கலைந்த மடிப்புகளைச் சரி செய்ய ஓரளவு வெப்பம் தேவை எனவே தேவையான அளவு சூடு ஏற்படுத்துவதற்கேற்றவாறு வெப்பத்தை உண்டாக்குவதற்கு வழி வேண்டும்

வெப்ப ஒழுங்கு முறை

தொகு

பெறப்படும் வெப்பம் பல்வேறு வகைத் துணிகளிலுள்ள சுருக்கங்களை சீராக்கி மடிப்பு கலையாதவாறு அமைக்கக் குறைந்த அளவு வெப்ப நிலையிலிருந்து துணிகள் சேதமடையாத அளவுக்கு வெப்பம் பெறத்த்தக்க அளவு வசதியைப் பெற்றிருக்க வேண்டும்

ஈரத்தன்மை

தொகு

நீர் நயப்பு எனப்படும் ஈரத்தன்மை துணிகளை அழுத்திச் சுருக்கங்களை நீக்குவதற்கு துணிகளுக்கு ஓரளவு ஈரத்தன்மை தேவைப்படுகிறது. அந்த ஈரம் தரப்படவேண்டும். இது வெளியிலிருந்து தரப்படலாம் அல்லது கருவியிலிருந்து நீராவி போல அளிக்கலாம்.

மின் தேய்ப்புப் பெட்டி இயங்கும் முறை

தொகு

மின்கடத்தும் பொருளின் வழியே மின்னோட்டம் செல்லும் பொழுது, அப்பொருள் ஓரளவு மின்னோட்டத்தைத் தடுக்கும். அந்த எதிர்ப்புத் தன்மைக்கு மின்தடை என்று பெயர். இது அக்கடத்தி எப்பொருளால் ஆனதோ, அப்பொருளின் தன்மைக்கேற்ப அதாவது அப்பொருளின் மின்தடை எண்ணிற்கேற்ப (Specific resistance) மாறுபடும்.

அடித்தகடு

தொகு

எதிலும் ஒட்டாத தன்மையுடைய (Non stick) அதிக அழுத்தத்தில் நன்கு சூடாக்கப்பட்டு பிறகு குளிரூட்டப்பட்டு மாதிரி அச்சில் (mould) வார்க்கப்பட்ட அலுமினிய உலோகக் கலவை மற்றும் அதைச் சுற்றி அமைக்கப்பட்ட துருப்பிடிக்காத இரும்பு (எவர் சில்வர்) அடித்தகடாக அமைக்கப்படுகிறது. இது எளிதில் சூடாகவும் மின்னினைப்பு நின்றதும் எளிதில் குளிரவும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டது.

வெப்பநிலைச் சீராக்கி

தொகு

இது வெவ்வேறு வெப்ப நிலை விரிவுத்தன்மை கொண்ட ஈருலோகத் தகடாக (நிக்கல், மங்கனீசு அல்லது செம்பு) அதைச் சுற்றி உலோகக் கம்பிச்சுருள் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளது.

நீர்த்தொட்டி

தொகு

தற்போது பயன்பட்டு வரும் நீராவி மின்தேய்ப்புப்பெட்டிகளில் தண்ணீர் ஊற்றுவதற்கேற்ற வகையில் சிறிய உள்ளீடற்ற பகுதி உள்ளது. பல மிகச் சிறிய துளைகளைக் கொண்ட அடிப்பகுதியுடன் கூடிய இப்பகுதி நீர் தெளிப்புப் பகுதியாக இருப்பதால் துணிகளில் தேவையான அளவு ஈரத்தன்மையைக் கொடுப்பதற்குப் பயன்படுகிறது. நீர் ஊற்றுவதற்கு ஒரு திறப்புப் பகுதியும், தேவையான போது நீரைத் தெளிப்பதற்கு ஒரு தெளி அழுத்தியும், அதைக் கட்டுப்படுத்துவதற்கான அமைப்பும் உள்ளது. நீரின் அளவைத் தெரிந்துகொள்ள நீர் மட்டக்குழாய் ஒன்றும் உள்ளது.

கைப்பிடி

தொகு

இது முன்பகுதி, நடு கைப்பிடிப் பகுதி, பின்பகுதி என்று மூன்று பகுதிகளை உடையது. இது முழுவதும் நெகிழிப் பொருளால் (பிளாஸ்டிக்கால்) ஆனது.

முழு வடிவமைப்பு

தொகு

மாதிரி அச்சில் உருவாக்கப்பட்ட நெகிழியால் ஆன அமைப்பு முழுவடிவமைப்பாகும். இது கருவிக்கு முழு வடிவத்தைத் தருகிறது.

இணைப்பு

தொகு

மின்னிணைப்பு பெறுவதற்கேற்றவாறு காப்புப்பொருளால் சுற்றப்பட்ட மின்கம்பி உள்ளது. மின்னிணைப்பு பெற்றதை உறுதி செய்ய ஓர் அடையாள மின் விளக்கும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. தானியங்கிக் கருவியில் வெப்ப நிலை சீராக்கி இயங்குவதை இவ்விளக்கு எரிவது, அணைவதைப் பொருத்து அறிந்து கொள்ளலாம்.

உசாத்துணை

தொகு

அறிவியல் ஒளி,ஏப்ரல் 2007 இதழ்.