மியாவாக்கி காடு வளர்ப்பு

மியாவாக்கி மரம் வளா்ப்பு முறை என்பது ஜப்பானைச் சோ்ந்த யோகோஹாமா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தாவரவியலாளா் அகிரா மியாவாக்கி கண்டுபிடித்த முறையாகும்.அதனால், இவரது பெயரில் அவரது மரம் வளர்ப்பு முறைக்கு ‘மியாவாக்கி’ என்று பெயிரிடப்பட்டுள்ளது. இடைவெளி இல்லா அடா்காடு என்ற தத்துவப்படி, இந்த முறையில் ஆழமான குழி தோண்டி அதில் மக்கும் குப்பைகளைக் கொட்டி நெருக்கமான முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடும் முறைக்கு 'மியாவாக்கி' என்று பெயர். உலகம் முழுவதும் மியாவாக்கி முறையில் காடுகளை உருவாக்கும் முறை வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் மியாவாக்கி முறை பிரபலமாகி வருகிறது.[1][2][3][4][5]

பயன்கள் தொகு

  • குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்கள்.
  • 1,000 சதுரஅடி நிலத்தில் 400 மரங்கள்.
  • பூமியில் வெப்பம் குறையும்.
  • காற்றில் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.
  • பறவைகளுக்கு வாழிடம் உருவாகும்.
  • பல்லுயிர்ச் சூழல் மேம்படும்.

மேற்கோள்கள் தொகு

  1. துரை.நாகராஜன், தொகுப்பாசிரியர் (03 ஜூன் 2019). நிரந்தர வருமானம் தரும் காடு வளர்ப்பு... ஒரு வழிகாட்டுதல்!. விகடன் இதழ் இம் மூலத்தில் இருந்து 2020-09-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200909142101/https://www.vikatan.com/social-affairs/environment/a-guide-to-grow-forest-which-can-get-you-permanent-income. பார்த்த நாள்: 2020-09-12. 
  2. இரா.கார்த்திகேயன், தொகுப்பாசிரியர் (30 ஜனவரி 2019). இடைவெளி இல்லா அடர்காடு: ஜப்பான் முறை திருப்பூரில் அறிமுகம். தி ஹிந்து தமிழ். https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/207443-.html. 
  3. சென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்.. மும்முரம் காட்டும் தமிழக அரசு. புதிய தலைமுறை. 28 நவம்பர் 2019. http://www.puthiyathalaimurai.com/newsview/60036/Miyawaki-forests-in-Chennai. 
  4. DIN, தொகுப்பாசிரியர் (26 மே 2020). குறுங்காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம். தினமணி நாளிதழ். பக். 158. https://www.dinamani.com/tamilnadu/2020/may/26/commencement-of-the-scrub-breeding-program-3419832.html . 
  5. சுற்றுச்சூழல் மாசு அடைவதை குறைக்க: ஜப்பானிய முறையில் மரம் வளர்க்க திட்டம் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை. தினத்தந்தி. நவம்பர் 27,  2019. https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/11/27005837/Japanese-tree-planting-program-Chennai-Corporation.vpf.