மியா காலிஃபா
மியா காலிஃபா (Mia Khalifa) (பிறப்பு: பிப்ரவரி 10, 1993) என்பவர் வயது வந்தோருக்கான ஆபாசக் காணொளிகளில் தோன்றும் பாலியல் நடிகை ஆவார். பிறப்பால் லெபானைச் சார்ந்த இவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறியவர்.
மியா காலிஃபா | |
---|---|
ميا خليفة | |
தாய்மொழியில் பெயர் | ميا خليفة |
பிறப்பு | 1993 (அகவை 30–31)[1]:{{{3}}} |
தேசியம் | லெபனான்-அமெரிக்கன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | எல் பாசோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம் (BA) |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 2014–2019 |
இளமைக்காலம்
தொகுஇவர் லெபனான் நாட்டின் பெய்ருட் நகரில் பிறந்தவர். 2000 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது. இவர் கத்தோலிக்க மதத்தினரக இருந்தாலும் அதைப் பின்பற்றாதவராக வாழ்ந்தார். டெக்சாசு பல்கலைக்கழகத்தில் (University of Texas) வரலாற்றில் இளநிலைப் பட்டம் பெற்றார். தனது 18 வது வயதில் 2011 பிப்ரவரி மாதம் அமெரிக்கர் ஒருவரை மணந்து கொண்டார்.
தொழில்முறை ஆபாசப்பாலியல் வாழ்க்கை
தொகு2014, அக்டோபர் மாதம் முதல் தொழில்முறை ஆபாசப்பாலியல் காணொளிகளில் தோன்றத் தொடங்கினார்.[2] அவரது 22 வது வயதுவாக்கில் அவரது காணொளிகள் 15 இலட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்படது. பாலியல் ஆபாசக் காணொளி இணையத்தளங்களில் மிக அதிக அளவில் தேடப்பட்ட நபராக இவர் விளங்கினார். இவரைப் பற்றிய மொத்தத் தேடல்களில் நான்கில் ஒரு பங்கு லெபனானைச் சார்ந்ததாகும். இத்தகவலை டிசம்பர் 28, 2014 அன்று அவ்விணையதளம் இத்தகவலினை உறுதி செய்தது. மேலும் இவர் முதல்தர வரிசையாளராக அறிவிக்கப்பட்டர்.[3] இதன் காரணமாக இவருக்கு இஸ்லாம் பெயரை எனும் தீவிரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்தது.[4] மேலும் ஆபாசப் பாலியல் காணொளிகளில் இவர் தலையில் ஹிஜாப் அணிந்து தோன்றியது மத்திய கிழக்கு நாடுகளில் சர்ச்சையினை உருவாக்கியது.
வாழ்க்கை
தொகுபுளோரிடா மாநிலத்தின் மியாமி பகுதியில் வசித்த மியா காலிஃபா, தொழில்முறை ஆபாசப்பாலியல் வாழ்க்கைக்குப் பின்னர் டெக்சாஸ் மாகாணத்தில் குடியேறினார். தொழில்முறை ஆபாசப்பாலியல் வாழ்க்கைக்குப் பின்னர் அவரது டிவிட்டர் கணக்கினை 10 இலட்சம் மக்கள் பின் தொடர்கின்றனர், மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தினை மூன்று இலட்சம் மக்கள் பின் தொடருகின்றனர். அவரது உடலில் லெபனானிய தேசிய கீதத்தின் முதல் வரியைப் பச்சையாக் குத்தியுள்ளார். தொழில்முறை ஆபாசப்பாலியல் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்ததால் அவரது பெற்றோர் அவருடன் பேசுவதில்லை என நேர்காணலில் கூறியிருந்தார். தொழில்முறை ஆபாசப்பாலியல் வாழ்க்கையினை இவர் தேர்ந்தெடுக்கக் காரணம் இவர் வளார்ந்த நாட்டின் கலாச்சாரம் எனத் தெரிவித்தனர். மேலும் இவர் அத்துறையினைவிட்டு விலகிவிட வேண்டும் எனவும் அதனால் எந்தவித குடும்பத்திற்கோ, நாட்டிற்கோ கெளரவமும் கிட்டப்போவதில்லை எனவும் அவரது பெற்றோர் தெரிவித்ததாகவும் கூறினார். 2016 ஆம் ஆண்டில் நியூயார்க் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஆபாசப்பாலியல் தொழிலில் மூன்று மாதங்கள் மட்டுமே இருந்ததாகவும், பின்னர் அதிலிருந்து விலகிவிட்டதாகவும் தெரிவித்தார். மற்றொரு ஆபாசப் பாலியல் காணொளி இணையத்தளம் 2016 ஆம் ஆண்டில் அவர்களது இணையத்தளத்தினில் அதிகளவு தேடப்பட்ட நபராக மியா கலிஃபாவினை அறிவித்தது.
சமூக வலைத்தளப் பங்களிப்பு
தொகுமியா காலிஃபாவும் கில்பட் ஆர்னஸும் இணைந்து காம்ப்ளக்ஸ் நியூஸ் (Complex News’s) எனும் யூடியூப் பக்கத்தில் விளையாட்டு நிகழ்ச்சியை தினமும் வழங்கினர்.[5]
பொது வாழ்க்கை
தொகு2016 ஆண்டு, மியா காலிஃபாவை சவுதி அரேபியாவிற்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் இணையத்தள கோரிக்கை மூலம் கோரப்பட்டது. 2015 ஜனவரி மாதம் டைம்ஃபிளைஸ் எனும் இசைக்குழு மியா காலிஃபா எனும் பெயரில் இசைத்தொகுப்பு ஒன்றினை வெளியிட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Smith-Spark 2015
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "Why porn is exploding in the Middle East". Salon (website). Alternet. January 15, 2015. பார்க்கப்பட்ட நாள் January 18, 2015.
- ↑ Adam Taylor (January 6, 2015). "The Miami porn star getting death threats from Lebanon". The Washington Post. பார்க்கப்பட்ட நாள் January 7, 2015.
- ↑ Saul, Heather. "Mia Khalifa ranked site's top adult actress". The Independent. https://www.independent.co.uk/news/people/pornhub-star-mia-khalifa-receives-death-threats-after-being-ranked-sites-number-one-adult-actress-9962293.html. பார்த்த நாள்: January 7, 2015.
- ↑ Dan Steinberg (October 10, 2017). "Gilbert Arenas and Mia Khalifa will co-host a daily sports talk show for Complex". Washington Post. https://www.washingtonpost.com/news/dc-sports-bog/wp/2017/10/10/gilbert-arenas-and-mia-khalifa-will-co-host-a-daily-sports-talk-show-for-complex/. பார்த்த நாள்: October 11, 2017.