மிருகாபதி பெருங்கதை, [1] என்பவள் பெருங்கதை இலக்கியத்தில் வரும் கதை-மாந்தர்களில் ஒருவர். சேடகன் என்னும் அரனின் மகள். பெருங்கதைக் காப்பியத் தலைவன் உதயணனின் தாய்.

சேடகனின் பத்தாவது மகன் விக்கிரமன், தன் தந்தையும் அண்ணன்மாரும் தவம் இயற்றுதைத் தங்கை மிருகாபதிக்கும், அவளது கணவன் சதானிகனுக்கும் தெரிவித்தான். தங்கை மிருகாபதி மயற்கையுற்றாள் (பித்தானாள்). கணவன் அவளைப் பல இடங்களுக்குச் சென்று வேடிக்கைக் காட்டித் தேற்றி அவளுடன் வாழ்ந்துவந்தான். மிருகாபதி கருவுற்றாள். கருப்பம் நிரம்பியது. அப்போது ஒருநாள் மேல்மாட முற்றத்தில் உறங்கிக்கொண்டிருந்தாள். அப்போது அவளும் அவளது தோழிமாரும் செந்நிற ஆடை அணிந்திருந்தனர். மிருகாபதி செந்நிற ஆடை ஒன்றால் தன்னைப் போர்த்திக்கொண்டிருந்தாள். சாதிலிங்கள் முதலான செந்நிற மணப்பொருள்களையும், செந்நிற மலர்களையும் சுற்றிலும் தூவியிருந்தனர். அப்போது அவ்வழியே பறந்து சென்ற சரயு என்னும் பல் வலிமை கொண்ட பறவை மிருகாபதியை புலராத தசைப்பிண்டம் எனக் கருதி இருக்கையுடன் தூக்கிச் சென்றது. சேடக முனிவன் தவம் செய்துகொண்டிருந்த விபுலகிரியில் வைத்துத் தின்னத் தொடங்கியது. அப்போது மிருகாத்தி விழுத்துக்கொண்டாள். கொண்டுவந்தது பெண் என உணர்ந்த பறவை உண்ணாமல் பறந்து சென்றுவிட்டது. மிருகாபதி வேற்றிடம் என அறிந்து கலங்கினாள். அஞ்சினாள். வருத்தம் மிகுதியால் குழந்தை சூரியன் உதிக்கும்போது பிறந்தது. ஆண்குழந்தை.

அடிக்குறிப்பு தொகு

  1. =கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிருகாபதி&oldid=1839600" இருந்து மீள்விக்கப்பட்டது