மிருதங்க சைலேசுவரி கோயில்

மிருதங்க சைலேசுவரி கோயில் இந்தியாவின் கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் முழக்குன் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இந்து கோயில் ஆகும்.[1] விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகின்ற பண்டைய கேரளாவின் 108 துர்கா கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

மிருதங்க சைலேசுவரி கோயில்

மூலவர்

தொகு

இக்கோயிலின் மூலவர் மிருதங்க சைலேசுவரி நான்கு கைகளைக்கொண்ட துர்க்கை ஆவார். இரண்டு கைகளில் சங்கும், சக்ரமும் கொண்டுள்ளார். முன் வலது கை பக்தர்களை ஆசீர்வதிக்கும் நிலையிலும், முன் இடது கை இடுப்பில் வைத்துள்ள நிலையிலும் காணப்படுகிறது.

வடிவங்கள்

தொகு

இந்து மதத்தில் துர்க்கையானவர் மூன்று முக்கிய வடிவங்களானமகா துர்க்கை, சண்டிகா, அபராஜிதா என்ற நிலையில் வழிபடப்படுகிறார். மகா துர்க்கையானவர் உக்ரசந்தா, பத்ரகாளி, காத்யாயனி என்ற மூன்று வடிவங்களில் உள்ளார்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Mridanga Saileswari Temple | Famous Temple Kerala, Kannur". பார்க்கப்பட்ட நாள் 2017-12-25.
  2. "Durga". Archived from the original on 21 August 2019. பார்க்கப்பட்ட நாள் 14 February 2019.
  3. "Blog".

வெளி இணைப்புகள்

தொகு