மிருதுவான மரம்

ஆக்ரோமா லேகோபஸ்மிருதுவான மரம்

வகைப்பாடு தொகு

தாவரவியல் பெயர் : ஆக்ரோமா லேகோபஸ் Ochroma lagopus

குடும்பம்  : பாம்பகேசியீ (Bombacaceae))

இதரப் பெயர்கள் தொகு

தக்கை மரம்

மிருதுவான மரம்

பாலசா மரம்

மரத்தின் அமைவு தொகு

உலகில் உள்ள மரங்களில் மிகவும் லேசான மரம் இதுவே. இது 60 முதல் 70 அடி உயரம் வளரக்கூடியது. மிகவும் வேகமாக இம்மரம் வளரும். இதன் மரச் சோறு தக்கை போன்று இருக்கும். இதனால் இம்மரத்தை கட்டுமரம் செய்வதற்கும், முதல் உதவிக்குப் பயன்படும் மிதவையாகவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் விமானம் கட்டுவதற்கும், சுரங்கங்களில் மின் தடையாகவும் பயன்படுத்துகிறார்கள். இம்மரம் மத்திய அமெரிக்காவில் வளர்கிறது. இம்மரத்தில் பழுப்பு நிற வெள்ளை பூக்கள் வருகிறது. இம்மரத்தில் வரும் பழுப்பு நிற காய்கள் பார்ப்பதற்கு விசித்திரமாக இருக்கும். இதன் உள்ளே உள்ள பஞ்சு மினுமினுப்பாகவும் செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். இப்பஞ்சு தலையணை செய்வதற்குப் பயன்படுகிறது. இச்சாதியில் ஒரே ஒரு இன மரம் மட்டுமே உள்ளது.

மேற்கோள் தொகு

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிருதுவான_மரம்&oldid=3627801" இலிருந்து மீள்விக்கப்பட்டது