மீர்
மீர் அல்லது மிர் (Mir, ரஷ்ய மொழி: Мир), சோவியத் ஒன்றியத்தின் (தற்போது ரஷ்யா) பூமியைச் சுற்றி வர ஏவப்பட்ட ஒரு விண்நிலையம் ஆகும். விண்வெளியில் முதன் முதலில் நிறுவப்பட்ட நீண்ட-கால தொழிற்பாடுடைய விண்நிலையம் இதுவாகும். உலக அமைதியின் சின்னமாக சோவியத் ஒன்றியம் இதனை உருவாக்கியது. 1986 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 இல் இந்நிலையம் விண்ணுக்கு ஏவப்பட்டது. மீர் என்பது ரஷ்ய மொழியில் சமாதானம் அல்லது அமைதி எனப் பொருள்படும். விண்வெளி வீரர்கள் பூமியிலிருந்து மீள் விண்கப்பலில் பயணம் செய்து, விண்வெளியில் நிரந்தரமாகக் குடியேற சோவியத்தின் இத்திட்டம் வழிகோலியது. ரஷ்ய விண்கப்பலான சோயுஸ் மூலமாக முதலில் விண்வெளி ஆய்வாளர்கள் பயணம் செய்து, மீர் நிலையத்தோடு இணைக்கப்பட்டு இடம் மாறிக்கொண்டனர். அதன் பின்னர் நாசாவின் அட்லாண்டிஸ் மீள்விண்ணோடம் மீருடன் இணைந்தது.[1][2][3]
மீர் விண்வெளி நிலையம் | ||
---|---|---|
Mir following separation from the Space Shuttle Discovery, June 12, 1998 | ||
நிலையத் தரவுகள் | ||
பெயர்: | மீர் | |
பயணிகள்: | 3 | |
ஏவப்பட்டது: | பெப்ரவரி 19, 1986 21:28:23 UTC | |
ஏவப்பட்ட இடம்: | LC200/39, பாய்க்கனூர் விண்தளம், கசாக்ஸ்தான் | |
பூகோள மறுநுழைவு: | மார்ச் 21, 2001 05:50:00 UTC | |
நிறை: | 124,340 கிகி | |
தற்போதைய கனவளவு: | 350 மீ³ | |
Perigee: | 385 கிமீ (207.9 nmi) | |
Apogee: | 393 கிமீ (212.2 nmi) | |
ஒழுக்கு சரிவு: | 51.6 பாகை | |
சுற்றுவட்ட காலம்: | 89.1 நிமிடம் | |
சுற்றுக்கள்/நாள்: | 16.16 | |
சுற்றிய நாட்கள்: | 5,511 நாட்கள் | |
Days occupied: | 4,594 நாட்கள் | |
பயணித்த தூரம்: | 3,638,470,307 கிமீ (1,964,616,800 nmi) | |
Statistics as of மார்ச் 23, 2001 இல் சுற்றுவட்டத்தை விட்டு விலகியது. | ||
Configuration | ||
May 1996 configuration of Mir. | ||
மீர் விண்வெளி நிலையம் |
மீர் விண்வெளி நிலையம் மார்ச் 23, 2001 வரை இயங்கியது. இது பின்னர் புவியின் சுற்று வட்டத்தில் இருந்து கட்டாயமாக விலக்கப்பட்டு தென் பசிபிக் பெருங்கடலில் விழுந்து மூழ்க விடப்பட்டது.
வெளி இணைப்புகள்
தொகு- அவனியைப் பல்லாண்டு சுற்றிவரும் அண்டவெளி நிலையங்கள் (சி. ஜெயபாரதன்)
- மீர் நாட்காட்டி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mir-Orbit Data". Heavens-Above.com. 23 March 2001. Archived from the original on 8 June 2011. பார்க்கப்பட்ட நாள் 30 June 2009.
- ↑ "Mir FAQ – Facts and history". European Space Agency. 21 February 2001. Archived from the original on 22 October 2012. பார்க்கப்பட்ட நாள் 19 August 2010.
- ↑ "Mir Space Station – Mission Status Center". Spaceflight Now. 23 March 2001. Archived from the original on 17 June 2009. பார்க்கப்பட்ட நாள் 19 August 2010.