கிலோகிராம்
கிலோகிராம் (குறுக்கம்: கிகி) என்பது சீர்தரம் செய்யப்பட்ட அனைத்துலக முறை அலகுகளில் உள்ள அடிப்படையான நிறை அலகு.[2]
கிலோகிராம் | |
---|---|
பொது தகவல் | |
அலகு முறைமை | அனைத்துலக முறை அலகுகள் |
அலகு பயன்படும் இடம் | திணிவு |
குறியீடு | கி.கி (kg) |
அலகு மாற்றங்கள் | |
1 கி.கி (kg) இல் ... | ... சமன் ... |
Avoirdupois | ≈ 2.205 பவுண்டு The avoirdupois pound is part of both United States customary system of units இம்பீரியல் அலகு. |
இயற்கை அலகுகள் | ≈ 4.59×107 Planck masses 1.356392608(60)×1050 ஹேர்ட்ஸ் One kilogram at rest has an equivalent energy approximately equal to the energy of photons whose frequencies sum to this value. |
ஒரு கிலோகிராம் நிறை என்பது பிளாட்டினம்-இரிடியம் கலவையால் செய்யப்பட்டு பிரான்ஸ் நாட்டில் செவ்ரே என்ற இடத்தில் மிகவும் பாதுகாப்பாக சீரான வெப்ப அழுத்த நிலைகளில் வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளின் நிறை ஆகும். இப்பொருளை Le Grand K (லெ ‘கிரான்) என்று பிரெஞ்சு மொழியிலும், IPK அல்லது International Prototype Kilogram (அனைத்துலக முதலுருக் கிலோகிராம் என்று பொருள்படும் இன்ட்டர்நேசனல் புரோட்டோ டைப் கிலோகிராம்) என்று ஆங்கிலத்திலும் அழைக்கிறார்கள்.
ஒரு கிலோகிராம் என்பது சற்றேறக்குறைய ஒரு லிட்டர் நீரின் நிறையை ஒத்தது. உலகில் உள்ள நிறைகள் எல்லாமும் ஒப்பீடு செய்யும் முதன்மை சீர்தர அளவு இந்த கிலோகிராம் என்பது. அடிப்படையான அனைத்துலக முறை அலகுகளில் இது ஒன்றுதான் கிலோ போன்ற முன்னொட்டு கொண்ட அலகு. அதே போல இது ஓர் அலகு மட்டுமே இயற்கையான இயற்பியல் அடிப்படை நிகழ்வு அல்லாமல், ஒரு குறிப்பிட்ட புறப்பொருளின் அடிப்படையில் அமைந்த அலகு.
அன்றாட வாழ்வில் ஒரு கிலோகிராம் என்பது ஒரு நிறை என்றாலும், புவியின் ஈர்ப்பால் ஏற்படும் ஒருகிலோகிராம் எடையோடு நினைத்துப் புழங்குவது வழக்கம். ஆனால் நிறை (இலங்கையில் திணிவு) என்பது உண்மையில் எடை அல்ல. எடை என்பது ஒரு பொருளின் நிறை மீது செலுத்தும் புவி ஈர்ப்பு விசை ஆகும். இந்த விசையை நியூட்டன் என்னும் அலகால் அளப்பர். எனவே நிறை அல்லது திணிவு என்பது பொருளின் இயல் தன்மை, பொருண்மைத்தன்மை.
ஒரு பொருளின் நிறை என்பது அப்பொருள் மீது எந்த விசையைச் செலுத்தினாலும், அந்த விசையினால் அப்பொருள் கொள்ளும் முடுக்கத்தின் அளவை தீர்மானம் செய்யும் இயல்தன்மை எனலாம். ஒரு கிலோகிராம் நிறை மீது ஒரு நியூட்டன் விசையைச் செலுத்தினால், ஒரு மீ/நொ2 முடுக்கம் கொள்ளும்.
சொல்லினக்கணம் மற்றும் பயன்பாடு
தொகுகிலோகிராம் (kilogramme or kilogram) எனும் சொல் பிரான்சிய மொழியிலிருந்து கொண்டுவரப்பட்ட சொல்லாகும் (பிரான்சிய சொல் kilogramme). இது பிரான்சு மொழிக்கு கிரேக்கத்திலிருந்து வந்தது. ஆயிரம் எனும் கருத்தைத் தரக்கூடிய "χίλιοι" (சிளியோய், ஆங்கிலம் chilioi) எனும் சொல்லும், ஒரு சிறியளவு நிறை எனும் கருத்தைத் தரக்கூடிய "γράμμα" (கிரம்மா, ஆங்கிலம் gramma) இணைந்ததால் பெறப்பட்ட சொல்லாகும்.[3]கிலோகிராம் (kilogramme) எனும் சொல் பிரான்சிய சட்டத்தில் 1795 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது.[4] பிரான்சிய மொழியில் கிலோகிராம் எனும் சொல் எவ்வாறு உச்சரிக்கப்பட்டதோ அவ்வாறே ஐக்கிய அரபு இராச்சியத்திலும் 1797ஆம் ஆண்டு ஆங்கிலத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போதும் உச்சரிக்கப்பட்டது.[5] ஐக்கிய அரபு இராச்சியத்தில் உச்சரிக்கப்பைடவாறே அமெரிக்காவிலும் அச்சொல் உச்சரிக்கப்பட்டது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் கிலோகிராம் என்றும் கிலோக்ராமே என்றும் உச்சரிக்கப்பட்டது, ஆனாலும் கிலோகிராம் என உச்சரிப்பது அதிகமாக வழக்கத்தில் இருந்து வந்தது.[6] கிலோகிராம் எனும் உச்சரிப்பு தற்போது அதிக சர்வதேச அமைப்புக்களால் அங்கீகரிக்கப்பட்ட உச்சரிப்பு முறையாகும். 19 ஆம் நூற்றாண்டில் பிரான்சிய சொல்லான கிலோ (kilo), எனும் கிலோகிராமே (kilogramme) எனும் சொல்லின் குறு எழுத்துமுறை ஆங்கில மொழிக்குள் கொண்டுவரப்பட்டது.கிலோ எனும் சொல்லும் கிலோகிராம் எனும் ஒரே பொருளையே தருகிறது.[7] அமெரிக்காவின் காங்கிரஸ் மெட்ரிக் முறையை 1866 அறிமுகப்படுத்திய போது அந்தக்காங்கிரஸ் கிலோ எனும் சொல்லை கிலோகிராமின் மாற்றுப்பெயராக பயன்படுத்த அனுமதி அளித்தது,[8] ஆனால் 1990 ஆம் ஆண்டு கிலோ என்னும் சொல் பயன்பாடு பற்றிய கருத்தை மீளப்பெற்றது.[9]
அனைத்துலக முதலுருக் கிலோகிராம்
தொகு1889 ஆம் ஆண்டு முதல் பொருளின் நிறையை கிலோகிராம் பெருமமாக அழைப்பது சர்வதேச முதலுருக் கிலோகிராம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதனை தொழிற்முறை எடை அளவுகள் ஆய்வியலில் "IPK" (international prototype kilogram) என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சர்வதேச முதலுருக் கிலோகிராமானது "Pt‑10Ir" என்றழைக்கப்படும் பிளாட்டினம் உலோகக் கலவையால் ஆனது. இக்கலவையில் 90% "பிளாட்டினம் மற்றும் 10% இரிடியம் உள்ளது. இக்கலவை செவ்வட்டவுருளையாக மாற்றப்பட்டு (உயரம்=விட்டம்) மேற்பரப்பு பகுதி 39 மி.மீட்டர் குறைக்கப்படுகிறது.10% இரிடியம் கூடுதலாக சேர்க்கப்படுவதால் பிளாட்டினத்தின் பண்பு மேம்படுத்தப்பட்டு அதன் கடின மற்றும் உறுதித்தன்மை தக்க வைத்துக்கொள்ளப்படுவதுடன் கீழ்கண்ட நற்பண்புகளையும் பெற்றிருக்கின்றன.
- ஆக்ஸிஜனேற்றத்திற்கான எதிர்ப்புத்திறன்
- மிக அதிக அடர்த்தி (கிட்டத்தட்ட காரீயத்தை போல இருமடங்கு அடர்த்தி மற்றும் தண்ணீரின் அடர்த்தியை போல 21 மடங்கு அடர்த்தி)
- திருப்தி மின் மற்றும் வெப்ப கடத்துத்திறன் மற்றும்
- குறைந்த அளவு காந்த ஏற்புத் திறன்
அனைத்துலக முன்மாதிரிக் கிலோகிராம் நகல்கள்
தொகுஅனைத்துலக முன்மாதிரிக் கிலோகிராமின் பல்வேறு நகல்கள் கீழ்கண்டவாறு உலகின் பல்வேறு நாடுகளில் பாதுகாக்கப்படுகின்றன.
- IPK அமைந்திருக்கும் பிரன்சின் செயின்ட்-கிளவுடு
- ஆறு சகோதரி நகல்கள் K1, 7, 8(41),32, 43 and 47 என்ற எண்ணிடப்பட்டவை [Note 1] .[10] பிரான்சின் செயின்ட்-கிளவுடு எனுமிடத்தில் பாதுகாக்கப்படுகிறது.
- பத்து செயல் நகல்கள், எட்டு (9, 31, 42′, 63, 77, 88, 91, மற்றும் 650[Note 2]) அன்றாடப் பயன்பாட்டுக்கும் மற்றும் இரண்டு (25 and 73) சிறப்புப் பயன்பாட்டுக்கும் .[11] பிரான்சின் செயின்ட்-கிளவுடு எனுமிடத்தில் பாதுகாக்கப்படுகிறது.
- தேசிய முதலுரு, பின்வரும் நாடுகளான [12][13][14][15] ஆஸ்திரேலியா (44 and 87), ஆஸ்திரியா (49), பெல்ஜியம் (28 and 37), பிரேசில் (66), கனடா (50 and 74), சீனா (60 and 64; 75 ஹாங் காங்கிலும், செக் குடியரசு (67), டென்மார்க் (48), எகிப்து (58), பின்லாந்து (23), பிரான்சு (35), செருமனி (52, 55 and 70), அங்கேரி (16), இந்தியா (57), இந்தோனேசியா (46), இசுரேல் (71), இத்தாலி (5 and 76), சப்பான் (6 and 94), கசகஸ்தான், கென்யா (95), மெக்சிகோ (21, 90 and 96), நெதர்லாந்து (53), வடகொரியா (68), நார்வே (36), பாகிஸ்தான் (93), போலந்து (51), போர்ச்சுக்கல் (69), ரொமானியா (2), ரசியா (12 and 26[16]), செர்பியா (11 and 29), சிங்கப்பூர் (83), சுலோவாக்கியா (41 and 65), தென் ஆப்பிரிக்கா (56), தென் கொரியா (39, 72 and 84), ஸ்பெயின் (24 and 3), சுவீடன் (40 and 86),[17] சுவிச்சர்லாந்து (38 and 89), தைவான் (78), தாய்லாந்து (80), துருக்கி (54[18]), இங்கிலாந்து (18,[19] 81 and 82) and the அமெரிக்கா (20,[20] 4, 79, 85 and 92). ஆகியவற்றில் பாதுகாக்கப்படுகிறது.
- சில கூடுதல் நகல்கள் தேசிய அமைப்பு சார்பற்ற நிறுவனங்களான பாரிசிலுள்ள பிரெஞ்சு அறிவியல் மன்றம் French Academy of Sciences (34) மற்றும் துரினில் உள்ள ஜி.கொலனெட்டி எடை ஆய்வியல் நிறுவனம் (the Istituto di Metrologia G. Colonnetti) (62).[12]
குறிப்புகள்
தொகுகிலோ ஆனது ஐக்கிய நாடுகள் பயன்படுத்தும் ஒலியியல் அகரத்தில் K ஐக் குறிப்பிடுகின்றது.
கிலோ அனைத்துலக முறையலகுகளில் முறையில் 103 அல்லது 1000 ஐக் குறிப்பிடுகின்றது. எடுத்துக் காட்டாக
- 1000 கிராம், ஒரு கிலோகிராம்
- 1000 மீட்டர், ஒரு கிலோமீட்டர்
- 1000 வாட்டு, ஒரு கிலோவாட்டு
- 1000 ஜூல் (சூல்), ஒரு கிலோஜூல் (ஒரு கிலோ சூல்).
1795 இல் முறையாகப் பயன்பாட்டுக்கு வந்தது (இதற்கு முன்னரும் பாவனையில் இருந்தது). இது கிரேக்க மொழியில் ஆயிரத்தைக் குறிக்கும் χίλιοι ("khilioi") என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும்.
கணினியில் இதன் பயன்பாடு
தொகுகணினியில் கிலோபைட் ஆனது 210 அல்லது 1024 பைட்டைக் குறிக்கும். இதனால் 1000 இருந்து வேறுபடுத்த பலரும் சிறிய k இற்குப் பதிலாகக் K ஐப் பொதுவாகப் பாவிக்கின்ற போதிலும் எல்லாரும் இந்நடைமுறையைப் பின்பற்றுவதில்லை.
ஹாட்டிஸ்க் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் 1000 பைட்களை ஒரு கிலோபைட் என்றே எடுத்துக் கொள்கின்றனr எனினும் விண்டோஸ் 1024 பைட்டையே 1 கிலோபைட்டை என எடுத்துக் கொள்வதால் ஹாட்டிஸ்க் தயாரிப்பாளர்களின் கூறும் கொள்ளவானது பிழையாகக் கூடுதல் இட வசதியிருப்பதாகக் பிழையான விளக்கத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் கிலோபைட்டை 1000 ஆகவோ அல்லது 1024 ஆகவோ கருதினால் வழுவீதம் 2.4% வீதமே இதுவே பின்னர் ரேராபைட்டாகும் போது 10% ஆகின்றது.
SI பெருக்கங்கள்
தொகுSubmultiples | Multiples | |||||
---|---|---|---|---|---|---|
Value | Symbol | Name | Value | Symbol | Name | |
10−1 g | dg | decigram | 101 g | dag | decagram | |
10−2 g | cg | centigram | 102 g | hg | hectogram | |
10−3 g | mg | milligram | 103 g | kg | kilogram | |
10−6 g | µg | microgram (mcg) | 106 g | Mg | megagram (டன்) | |
10−9 g | ng | nanogram | 109 g | Gg | gigagram | |
10−12 g | pg | picogram | 1012 g | Tg | teragram | |
10−15 g | fg | femtogram | 1015 g | Pg | petagram | |
10−18 g | ag | attogram | 1018 g | Eg | exagram | |
10−21 g | zg | zeptogram | 1021 g | Zg | zettagram | |
10−24 g | yg | yoctogram | 1024 g | Yg | yottagram | |
Common prefixed units are in bold face. Criterion: A combined total of at least five occurrences on the British National Corpus and the Corpus of Contemporary American English, including both the singular and the plural for both the -gram and the -gramme spelling. </ref> |
வெளி இணைப்புகள்
தொகு- National Institute of Standards and Technology (NIST): NIST Improves Accuracy of ‘Watt Balance’ Method for Defining the Kilogram பரணிடப்பட்டது 2008-07-02 at the வந்தவழி இயந்திரம்
- The U.K.’s National Physical Laboratory (NPL): An overview of the problems with an artifact-based kilogram பரணிடப்பட்டது 2009-03-11 at the வந்தவழி இயந்திரம்
- NPL: Avogadro Project பரணிடப்பட்டது 2009-05-03 at the வந்தவழி இயந்திரம்
- NPL: NPL watt balance பரணிடப்பட்டது 2009-02-28 at the வந்தவழி இயந்திரம்
- Metrology in France: Watt balance
- Australian National Measurement Institute: Redefining the kilogram through the Avogadro constant
- International Bureau of Weights and Measures (BIPM): Home page
- NZZ Folio: What a kilogram really weighs
- NPL: What are the differences between mass, weight, force and load? பரணிடப்பட்டது 2009-03-27 at the வந்தவழி இயந்திரம்
- BBC: Getting the measure of a kilogram
குறிப்புகள்
தொகு- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;n841
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Nos. 42′, 77 and 650 are called "standards" rather than "prototypes" because they are slightly underweight, slightly too much material having been removed when they were manufactured. Other than being more than 1 mg below the nominal 1 kg mass, they are identical to the prototypes, and are used during routine calibration work.
மேற்கோள்கள்
தொகு- ↑ International Recommendation R 52 - Hexagonal weights - Metrological and technical requirements. International Organization of Legal Metrology. 2004. http://www.oiml.org/publications/R/R052-e04.pdf. பார்த்த நாள்: 28 December 2012.
- ↑ "International prototype of the kilogram (IPK)". International Bureau of Weights and Measures (BIPM). பார்க்கப்பட்ட நாள் 2013-01-07.
- ↑ Fowler, HW; Fowler, FG (1964). The Concise Oxford Dictionary. Oxford: The Clarendon Press.
- ↑ "Décret relatif aux poids et aux mesures du 18 germinal an 3 (7 avril 1795)". Grandes lois de la République (in French). Digithèque de matériaux juridiques et politiques, Université de Perpignan. பார்க்கப்பட்ட நாள் 2011-11-03.
{{cite web}}
: Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - ↑ "Kilogram". Oxford English Dictionary. Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 2011-11-03.
- ↑ "Kilogram". Oxford Dictionaries. பார்க்கப்பட்ட நாள் 2011-11-03.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "kilo (n1)". Oxford English Dictionary (2nd). (1989). Oxford: Oxford University Press. அணுகப்பட்டது 2011-11-08.
- ↑ 29th Congress of the United States, Session 1 (13 May 1866). "H.R. 596, An Act to authorize the use of the metric system of weights and measures". Archived from the original on 10 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 26 பிப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Metric System of Measurement:Interpretation of the International System of Units for the United States; Notice". Federal Register (Department of Commerce) 63 (144): 40340. 28 July 1998. http://physics.nist.gov/cuu/pdf/SIFedReg.pdf. பார்த்த நாள்: 2011-11-10. "Obsolete Units As stated in the 1990 Federal Register notice, ...".
- ↑ The International Bureau of Weights and Measures official site: The international prototype of the kilogram and its six official copies
- ↑ Stock, Michael; Barat, Pauline; Davis, Richard S.; Picard, Alain; Milton, Martin J. T. (24 March 2015). "Calibration campaign against the international prototype of the kilogram in anticipation of the redefinition of the kilogram part I: comparison of the international prototype with its official copies". Metrologia 52 (2): 310–316. doi:10.1088/0026-1394/52/2/310. http://iopscience.iop.org/article/10.1088/0026-1394/52/2/310/pdf.
- ↑ 12.0 12.1 name="Girard"
- ↑ The International Bureau of Weights and Measures official site: Calibration and characterization certificates: Mass, retrieved August 4, 2013
- ↑ The International Bureau of Weights and Measures official site: Some BIPM calibrations and services in mass and related quantities, retrieved August 4, 2013
- ↑ Picard, A. (February 2012). "Director's Report on the Activity and Management of the International Bureau of Weights and Measures; Supplement: scientific Departments" (PDF). Bureau International des Poids et Mesures. பார்க்கப்பட்ட நாள் August 3, 2013.
- ↑ Килограмм (in ரஷியன்), archived from the original on ஜூலை 2, 2014, பார்க்கப்பட்ட நாள் December 28, 2013,
Из 40 изготовленных копий прототипа две (№12 и №26) были переданы России. Эталон №12 принят в СССР в качестве государственного первичного эталона единицы массы, а №26 — в качестве эталона-копии.
{{citation}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|trans_title=
ignored (help) - ↑ Gutfelt, Bengt; Johansson, Mathias; Nyfeldt, Per; Pendrill, Leslie (2014). 13th Comparison between the Swedish national kilogram and SP principal standards for one kilogram (PDF). Borås: SP Technical Research Institute of Sweden. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-91-87461-72-9. பார்க்கப்பட்ட நாள் 12 May 2017.
- ↑ TÜBİTAK National Metrology Institute official site: [1] பரணிடப்பட்டது 2016-11-17 at the வந்தவழி இயந்திரம், retrieved June 16, 2014
- ↑ National Physical Laboratory official site: Making the first international kilograms and metres பரணிடப்பட்டது 2017-07-01 at the வந்தவழி இயந்திரம், retrieved August 4, 2013
- ↑ Z. J. Jabbour; S. L. Yaniv (2001). "The Kilogram and Measurements of Mass and Force". Journal of Research of the National Institute of Standards and Technology 106: 26. doi:10.6028/jres.106.003. http://nvlpubs.nist.gov/nistpubs/jres/106/1/j61jab.pdf. பார்த்த நாள்: August 4, 2013.